பரபரப்பு.. பிக் பாஸ் 7க்கு பிறகு புது நிகழ்ச்சியிலும் கேலி செய்த தினேஷ்.. கோபத்தில் விசித்ரா எடுத்த முடிவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் புது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் பிக் பாஸ் பிரபலமான தினேஷ், விசித்ரா இன்னும் ஒரு சிலர் கலந்து கொண்டிருந்ததாகவும் ஆனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விசித்திரா திடீரென்று வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நடந்தது போலவே விசித்ரா மற்றும் தினேஷுக்கு இடையே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அப்போது தினேஷ் விசித்திராவை கிண்டலாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. எந்த சீசனிலும் இதுவரைக்கும் இல்லாத வகையில் சண்டை சச்சரவுகள் தான் அளவுக்கு அதிகமாக இருந்தது. உள்ளிருந்த போட்டியாளர்கள் A மற்றும் B என்ற இரண்டு அணியாக பிரிந்து கொண்டு தங்களுடைய வன்மத்தை அடிக்கடி கக்கி கொண்டிருந்தனர்.

இதில் இவர்கள் சரி அவர்கள் தவறு என்று யாரையும் கூற முடியாத வகையில் தான் போட்டியாளர்கள் இருந்தனர். அதிலும் இந்த சீசனில் சில போட்டியாளர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வெடித்துக்கொண்டு இருந்தது. அதில் தினேஷ் மற்றும் விசித்திரா இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்று சொல்ற மாதிரி தான் காட்டிக்கொண்டிருந்தனர்.
ஆனால் ஒரு வழியாக பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது, அதற்கு பிறகும் இவர்களுடைய கருத்து மோதல்கள் குறைந்த பாடு இல்லை. பிக் பாஸ்க்கு பிறகு தினேஷ் பேட்டி அளிக்கையில் கூட விசித்திரா மீது தனக்கு எந்த கோபமும் கிடையாது. உள்ளிருந்த சூழ்நிலையால் தான் நாங்கள் அப்படியெல்லாம் பேசிக் கொண்டோம் என்று கூறி விளக்கம் கொடுத்திருந்தார்.
ஆனால் தற்போது ஒரு செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புதியதாக ஒரு கேம் ஷோ தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் விசித்திராவும் தினேஷும் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியில் தினேஷ் விசித்ராவை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அதனால் கோபமான விசித்திரா எனக்கு இந்த நிகழ்ச்சியே தேவை கிடையாது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் தான் நான் இவருடைய பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் இங்கே அப்படி கிடையாது என்று நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. தினேஷுக்கும் விசித்திராவிற்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஆகாது என்பது தெரிந்திருந்தும் அவர்கள் இருவரையும் வைத்து நிகழ்ச்சி பண்ணினால் டிஆர்பி அதிகரிக்கும் என்று விஜய் டிவியில் புதியதாக நிகழ்ச்சி தொடங்கப்பட்டதாகவும் ஆனால் அது பாதியிலேயே நின்று போய் விட்டதாகவும் கூறப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications