அர்ச்சனா கூட இப்படி சொன்னாங்க! ஆனால் பிக் பாஸ் உள்ளே நடந்தது இதுதான்.. ரகசியத்தை உளறிய நிக்சன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நிக்சன் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி முதல்முறையாக பேட்டி அளித்திருக்கிறார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் தான் நடந்து கொண்ட விதம் குறித்தும் தனக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு குறித்தும் அந்த பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அதோடு அந்த நிகழ்ச்சியில் உள்ளே நடந்த பல நிகழ்வுகள் குறித்தும் நிக்சன் அதில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸுக்கு பிறகு தான் யாரிடம் எல்லாம் பேசினேன்? என்ன பேசினேன்? என்பது பற்றியும் நிக்சன் அதில் கூறி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் உண்மையாக இருந்தாங்க, யார் பொய்யா இருந்தாங்க என்ற கேள்விக்கு நிக்சன் யாராலும் கடைசி வரைக்கும் பொய்யா இருந்து விட முடியாது. அதனால உண்மையாக இருந்தாங்கன்னு சொல்ல முடியாது. சில இடங்களில் சிலர் பொய்யாகவும் சில இடங்களில் சிலர் உண்மையாகவும் கூட இருந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
அதுபோல எனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் வலிமையானவர்கள் யார் என்று தெரியாது. அதை நீங்கள் எப்படி முடிவெடுப்பீங்க டாஸ்க்கில் யார் வலிமையானவர், பேச்சுத் திறமையில் யார் வலிமையானவர் அதுபோல வார இறுதியில் அதிகமாக கைதட்டல் வாங்குபவர்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் மக்கள் தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்ற அர்ச்சனா அக்கா தான் என்னை பொருத்தவரைக்கும் வலிமையான போட்டியாளர் என்று பேசி இருக்கும் நிக்சன் உள்ளே நடந்த சண்டை சச்சரவுகளை எல்லாம் மறந்து விட்டு அர்ச்சனாவை பெருந்தன்மையாக பாராட்டி இருக்கிறார்.
அதுபோல வாழ்க்கையில் ஒவ்வொரு படிக்கட்டில் நிற்கும்போது ஒவ்வொரு நபரை சந்திக்கிறோம். அப்படித்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நான் சந்தித்த நபர்களும் இருந்தார்கள். பலவிதமான கலை சார்ந்தவர்கள், அவர்கள் தேவைக்காக கேமராவுக்காக நடந்து கொண்டதை நான் பார்த்தேன். ஏற்கனவே என்னோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா போட்டியாளர்களுக்குமே வெளியே ஒரு பிரபலம் இருந்தது. அவர்களுக்கு கேமரா முன்பு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியும்.
ஆனால் எனக்கு தான் இதில் எதுவுமே தெரியாமல் நான் அங்கு போய் இருந்தேன். ஆனால் இந்த வீட்டிற்குள் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு 23 வயதில் எனக்கு கிடைத்த அனுபவம் பெரியது என்று சொன்ன நிக்சன் அதோடு மாயாவை ரொம்பவே பாராட்டி இருக்கிறார். எனக்கு ஒரு கலைஞராக மாயாவை ரொம்பவே பிடிக்கும் என்று சொன்ன நிக்சன் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் உண்மையாக இருந்தார்கள் என்று சொன்னால் அது யாரும் கிடையாது.
எல்லோரும் ஏதோ ஒரு இடத்தில் மாறி இருக்கிறார்கள். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என்னுடைய வாழ்க்கையும் ரொம்பவே மாறி இருக்கிறது. நான் இப்போது பாட்டு எழுதி இருக்கிறேன், ஒரு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறேன் என்று சொன்ன நிக்சன், தன்னை வெறுப்பவர்கள் பற்றியும் பேசி இருக்கிறார். அதில் என்னை வெறுப்பவர்கள் முதல் இரண்டு வாரம் என்னை அவங்க பக்கத்து வீட்டு பையனாகவோ, சொந்தக்காரனாகத்தான் பார்த்திருக்காங்க.
அதற்குப் பிறகு நான் செய்த செயல் அவங்களுக்கு ஏதோ ஒரு இடத்தில் பிடிக்காமல் போயிருக்கிறது. அதனாலதான் அவங்க என் மேல கோவத்தை காட்டி இருக்காங்கன்னு நான் நினைக்கிறேன் என்று சொல்லிய நிக்சன் பிக் பாஸ்க்கு பிறகு நான் சில போட்டியாளர்களிடம் பேசினேன். அதில் அர்ச்சனாவிடம் பேசினேன். அர்ச்சனா அக்கா எனக்கு நிறையவே அட்வைஸ் கொடுத்தாங்க. ஆனா பிரதீப் கிட்ட மட்டும் நான் பேசல. எனக்கு பேச விருப்பம் வரல. சில நேரங்களில் பிறகு தோணுச்சுன்னா நான் கண்டிப்பா பேசுவேன் என்றும் அந்த பேட்டியில் நிக்சன் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications