நேற்று பூர்ணிமா செஞ்ச மோசமான வேலை.. தோற்றுப் போனா இப்படி செய்யலாமா? செக் வைத்த பிக்பாஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று டிக்கெட் 2 பினாலே டாஸ்க் நடைபெற்றது.
அப்போது டாஸ்க்கில் தோற்றுப் போன பூர்ணிமா அங்கிருந்த மணியை பார்த்து காரி துப்பி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதுவரைக்கும் கமல்ஹாசன் பலமுறை பூர்ணிமாவை திட்டி இருந்தாலும் இந்த வாரம் இது குறித்து கேள்வி கேட்பாரா? என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதுவரைக்கும் இல்லாத வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்து வருகிறது. சர்ச்சைகளாலும் சரி பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் செய்யும் செயல்களாலும் சரி, அதிகமாக இந்த சீசன் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதிலும் இந்த சீசனை ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவுகள் மட்டும்தான் அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது.
அதுவும் உள்ளே புல்லி பண்ணி அமைதியாக போட்டியாளர்களை வெளியே அனுப்புவதில் மாயா கேங் கூட்டணி அமைத்து வருகின்றனர். இதனால் இவர்கள்தான் இந்த சீசனின் வில்லனாக ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள். அதுவும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தினேஷ் அர்ச்சனா போன்றோர் உள்ளே வந்த பிறகு மேலும் இந்த சீசன் சண்டை சச்சரவாக மாறியிருக்கிறது.
கடந்த வாரத்தில் குடும்பத்தினர் அனைவரும் பிரீஸ் டாஸ்க்கில் கலந்து கொண்ட போது எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்கிற மாதிரி எல்லோரும் அன்பு மழையை பொழிந்து வந்தனர். ஆனால் இந்த வாரம் மீண்டும் சண்டை சச்சரவு தொடங்கி விட்டது. அதிலும் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி செல்வதால் அனல் பறக்கும் டாஸ்க்குள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் தொடங்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் இரண்டு நபரை தேர்வு செய்து TTF போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். அதற்கு எல்லோரும் சேர்ந்து அர்ச்சனா மற்றும் விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தனர். இதனால் இவர்கள் இருவரும் பயங்கர கடுப்பில் இருந்தனர். அதற்குப் பிறகு நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று முயல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இது ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு முயல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த முயலுக்கான வீட்டை அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் செங்கலை வைத்து கட்ட வேண்டும். எந்த ஒரு போட்டியாளர் வீட்டையும் தன்னுடைய முயலையும் பாதுகாத்துக் கொள்கிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
இதனால் ஒவ்வொரு போட்டியாளர்களும் வழக்கம் போல மாயா பூர்ணிமா இருவரும் சேர்ந்து மற்றும் போட்டியாளர்களுக்கு கட்டம் கட்ட முடிவு பண்ணினார்கள். ஆனால் மணி விஷ்ணு இருவரும் சேர்ந்து பூர்ணிமாவை காலி செய்து விட்டனர். அதிலும் டாஸ்கின் போது விஷ்ணு பூர்ணிமா உடைய செங்கலை காலால் எட்டி உதைத்து தட்டி இருந்தார்.
இறுதியில் மணி விஷ்ணு தான் வெற்றி பெற்றார்கள். இதனால் மாயா பூர்ணிமா இருவருமே காண்டாக இருந்தனர். இதில் மாயா ஒரு பாயிண்ட் பெற்று இருந்தார். மணி இரண்டு பாயிண்ட் பெற்று இருக்கிறார். விஷ்ணு 3 பாயிண்ட் பெற்று இந்த டாஸ்கை வெற்றி பெற்று இருக்கிறார். மேலும் பூர்ணிமா தன்னிடம் இருந்த முயலை மணி இடம் கொடுக்க சொல்லும் போது காரி துப்பி கொடுத்திருந்தார்.

இதனால் இந்த செயல் ரசிகர்களை மத்தியில் விமர்சிக்கப்பட்டு பூர்ணிமாவை பலரும் திட்டி வருகின்றனர். இது பூர்ணிமா உடைய உச்சகட்டமான மோசமான செயல் என்றும் பலர் கூறி வருகின்றனர். ஆக்கில் ஜெயிக்க துப்பில்லாமல் ஜெயித்தவரை துப்பி கேவலப்படுத்தும் செயல் ரொம்பவே அருவருப்பானது என்பது பலருடைய வாதமாக இருக்கிறது. கண்டிப்பாக இந்த வாரம் கமல் இதை கண்டிப்பார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications