1 கோடி போச்சு.. தப்பை உணர்ந்த பிரபலங்கள்.. ஆனால் கமல் 24 மணி நேரத்தில் விளக்கம் கொடுப்பாரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த பிரதீப்புக்கு உள்ளே இருந்த சில போட்டியாளர்கள் ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை சொல்லி அவரை வெளியே அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அவருக்கு ரெட் கார்டு கொடுத்த பல போட்டியாளர்கள் தாங்கள் உள்ளே எடுத்த முடிவு தவறாக போய்விட்டது என்று பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரதீப்புக்கு அதிரடியாக தீர்ப்பு வழங்கி அவரை வெளியேற்றிய கமல்ஹாசன் மீது ரசிகர்கள் கோபத்தில் இருக்கும் நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்து தன் மீது மக்கள் வைக்கும் பழியை துடைத்து எறிவாரா என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அடுத்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத சில நிகழ்வுகள் நடைபெற்றது. அதாவது இந்த சீசனில் டைட்டில் வின்னராக வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த பிரதீப்புக்கு எதிராக சில போட்டியாளர்கள் ரெட் கார்டு கொடுத்து இருந்தனர். அதனால் கமல்ஹாசன் மற்றும் விஜய் டிவி தரப்பினரோடு ஆலோசனை செய்து பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து அதிரடியாக வெளியே அனுப்பி வைக்கப்பட்டு இருந்தார்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பல போட்டியாளர்கள் பிரதீப்புக்கு தாங்கள் ரெட் கார்டு கொடுத்தது தவறு என்று மக்கள் முன்பு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். பலர் நேரடியாக பிரதீப்க்கு போன் பண்ணி கூட தாங்கள் மன்னிப்பு கேட்டு விட்டதாக கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் கூல் சுரேஷ் கண்கலங்கி வீடியோ வெளியிட்டு பிரதாப்பிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார்.
அதைத் தொடர்ந்து பிராவோ தான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த பெண்கள் சொன்ன வார்த்தையை நம்பி ரெட் கார்டு கொடுத்து விட்டேன் என்று சொல்லி இருந்தார். அதுபோல ஐசுவும் வெளியே வந்ததும் பிரதீப் இடம் மன்னிப்பு கேட்டு போஸ்ட் போட்டிருந்தார். அதுபோல இப்போது விஷ்ணுவும் தான் உள்ளிருந்த போட்டியாளர்கள் சொன்னதை நம்பி கொடுத்துவிட்டேன் ஆனால் என் கண் முன்பு ரெட் கார்டு மட்டும்தான் வைக்கப்பட்டிருந்தது.
அதில் எல்லோ கார்டு இருந்திருந்தால் நான் எல்லோ கார்டு கொடுத்து இருப்பேன் என்றும் கூறியிருந்தார். இப்படியாக பல போட்டியாளர்கள் தாங்கள் செய்தது தவறு என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்ததால் கமல்ஹாசனை பல ரசிகர்கள் திட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் ஏதாவது அறிக்கை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்தில் பிரதீப்புக்கு வாய்ப்பு கொடுத்து தான் செய்த தப்பை திருத்திக் கொள்ளலாம் அல்லது பிரதீப் திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு காட்சியில் வந்துவிட்டு போனாலே அது அவருக்கு பெரிய உதவியாக இருக்கும். தான் செய்த தப்புக்காக கமல்ஹாசன் இந்த மாதிரி ஒரு உதவியை செய்வாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்த சீசனில் வெற்றி பெற்றால் பிரதீப்புக்கு 50 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். கார், வீடு மற்றும் சம்பளம் போன்றவற்றை கூட்டிப் பார்க்கும்போது எப்படியும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால் அதுவெல்லாம் கனவாய் போய்விட்டது. ஆனால் திரைப்பட வாய்ப்பாவது பிரதீப்புக்கு கிடைக்குமா என்பது பிரதீப்பின் ரசிகர்கள் இணையத்தில் வைக்கும் கோரிக்கையாக இருக்கிறது. இது பற்றி கமல்ஹாசன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications