ரவீனாவோடு காதல்! ஆனால் இப்போ? நிக்சனோடு அப்படி பேசி இருக்கக் கூடாது.. பிக் பாஸ் ரகசியத்தை உடைத்த மணி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட மணிச்சந்திரா முதல் முறையாக பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து தன்னுடைய விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். அப்போது ரவீனாவும் மணிசந்திராவும் காதலிக்கிறார்களா? என்ற கேள்விக்கு மணிச்சந்திரா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதுபோல மணிச்சந்திரா ரவீனாவின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போது கொடுத்த ரியாக்சன் அதுமட்டுமல்லாமல் ரவீனா தன்னை பற்றி நிக்சனிடம் சொன்ன கம்ப்ளைன்ட் போன்றவற்றிற்கும் மணி விளக்கம் கொடுத்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு வாரங்கள் ஆகின்ற நிலையில் இந்த சீசனில் இறுதி கட்டத்தில் இருந்த போட்டியாளர்கள் அடுத்தடுத்து பேட்டி கொடுத்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீசனில் ரன்னராக தேர்வான மணிசந்திரா முதல் முறையாக இன்று விஜய் டிவி youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அப்போது ரவீனாவும் மணியும் ஏற்கனவே காதலித்தார்களா? பிக்பாஸ் வீட்டிற்குள் அவர்கள் நண்பர்களாக இருந்தார்களா? அல்லது நட்பை தாண்டி இவர்களுக்குள் உறவு இருந்ததா? என்ற கேள்விக்கு எங்களுக்கு நட்பை தாண்டிய உறவு இருந்தது என்று மணிச்சந்திரா ஒத்துக்கொண்டிருக்கிறார். அதோடு இது பற்றி நான் விளக்கம் கொடுப்பதற்கு என்னோடு இந்த இடத்தில் ரவீனாவும் இருந்தால்தான் சரியாக இருக்கும்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ரவீனா ரொம்பவே மாறிவிட்டார். ரவீனா இப்போது விஜய் டிவியில் இன்னொரு நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். அதுபோல அவர் இப்போ பிசியா இருக்கார். நானும் இன்னொரு செட்டாரில் இருக்கிறேன். இருந்தாலும் இது பற்றி மக்கள் அடிக்கடி கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதால் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆனால் எங்களுக்குள் இருவருக்கும் நட்பை தாண்டி ஒரு உறவு இருந்தது.
ஆனால் நான் எந்த இடத்திலும் ரவீனாவின் விளையாட்டுக்கு இடையூறாக இருக்கவே இல்லை. எல்லாரும் ரவீனாவை விளையாட விடாமல் நான்தான் தடுத்தேன் என்று சொல்றாங்க. ஆனா அப்படி எல்லாம் நான் பண்ணவே இல்லை. ஏற்கனவே எனக்கும் ரவீனாவுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே அறிமுகம் இருக்கிறது. எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்த போது ரவீனா வராங்கறது ஆரம்பத்தில் தெரியாது.
கடைசி நேரத்தில் தான் தெரியும். அப்ப கூட நாம போக வேண்டாம் என்று தான் நானும் முடிவெடுத்தேன். பிறகு எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு இனி போவோம் என்று தான் நான் போனேன். அதுபோல ரவீனாவின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது நான் பயந்ததற்கு காரணமும் உண்டு. காரணம் சோ ரூமில் ரவீனாவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி இருக்குன்னு சொன்னதும் நாங்க எல்லாரும் உள்ள போய் ரவீனா சேவ் என்று சொல்லப் போறாங்கன்னு தான் போனோம்.
ஆனா அங்க அவங்க அம்மாவை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தேன். காரணம் அதற்கு முந்தின நாள் ரவீனா வீட்டிலிருந்து அவங்க ரிலேட்டிவ் வந்து என்ன படுத்தின விதம் தான்... அதுதான் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பெரிய பரபரப்பு ஏற்படுத்திய நாளாக கூட இருந்திருக்கும். அந்த மாதிரி இருந்த நேரத்தில் அடுத்ததாக ரவீனாவின் அம்மாவும் வந்ததால் என்ன ஆகும்னு தான் நான் பயந்தேன்.
அதுபோல ரவீனா என்னை பத்தி நிக்சனிடம் பேசியது பற்றி பலரும் கேள்வி கேக்குறாங்க ஏன் அவங்க அப்படி பேசுறாங்கன்னு எனக்கு இப்பவும் தெரியல. அவங்க எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லி இருக்கலாம். ஆனா இப்படி பண்ணிட்டாங்க என்று அந்த பேட்டியில் வருத்தமாக மணிசந்திரா பேசியிருக்கிறார்.
அதாவது ரவீனா நிக்சனிடம் மணி என்னிடம் நிறைய விஷயங்களை மறைச்சிட்டாரு. அவருக்கு வெளியில ஒரு கேர்ள் பிரண்ட் இருந்திருக்காங்க. அதை என்கிட்ட சொல்லவே இல்ல. அது போல மணியால் தான் நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள சரியா விளையாட முடியாம போயிட்டு என்றெல்லாம் குறை சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications