பிக் பாஸ் அபிநய் மனைவி மீது போலீஸ் கம்ப்ளைன்ட்... தீவிர தேடுதலில் போலீசார்.. நடந்தது என்ன..?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிக் பாஸ் அபிநய் மனைவியின் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டு போலீஸ் அவரை தேடி வருகின்றனர்.
மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி நடிகர் அபிநய் மனைவி அபர்ணா மீது ஏமாற்றப்பட்டதாக மஞ்சு என்ற பெண் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார்.
இதநிலையில் அபிநய் மனைவி அபர்ணாவை போலீஸ் தேடி வருகின்றது.

அபிநய் மனைவி
சென்னையில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு சீட்டு வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அந்த கம்ப்ளைன்ட் காரணமாக பிக் பாஸ் பிரபலமான அபிநய் மனைவியை போலீஸ் தேடி வருகின்றனர். சென்னை மாம்பலம் ஆற்காடு சாலையைச் சார்ந்த மஞ்சு என்பவர் ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவர் சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு ஆடைகளை வடிவமைத்து கொடுத்து வருகிறார்.

பிக் பாஸ் பிரபலத்தின் மனைவி
அந்த வகையில் பிக் பாஸ் பிரபலமான நடிகர் அபிநய் என்பவரின் மனைவி அபர்ணா வைத்திருக்கும் ஜவுளி கடைக்கு மஞ்சு ஆடைகளை வடிவமைத்து சப்ளை செய்து வந்திருக்கிறார். நடிகர் அபிநய் ஜெமினி கணேசனின் பேரன் என்பதால் அவர் மீது மரியாதையோடு அபர்ணா குடும்பத்தினரிடம் மஞ்சு பழகி இருக்கிறார். இவ்வாறு இருக்கையில் கடந்த ஆண்டு மஞ்சுவின் மகள் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

மருத்துவக் கல்லூரியில் சீட்
அவர் விரும்பக்கூடிய கல்லூரி கிடைக்காத விஷயத்தை கேள்விப்பட்ட அபர்ணா பிரபல மருத்துவ கல்லூரியில் தனக்கு தெரிந்த நண்பர் இருப்பதாகவும் 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் மகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி கொடுத்து விடலாம் என மஞ்சுவிடம்
கூறினாராம். அதனால் முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து மருத்துவ சீட்டுக்கு புக் செய்து ரசீதை பெற்றுக் கொள்ளலாம் என அபர்ணா தெரிவித்திருந்தாராம். மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பின்பு செலுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.

5 லட்சம் பணம்
இதனை நம்பிய மஞ்சு கடந்த ஜனவரி மாதம் 5 லட்சம் ரூபாயை அவர் கூறியபடி அபர்ணாவின் நண்பரான அஜய்யின் வங்கி கணக்கு செலுத்தி இருந்ததாகவும், அதோடு பணத்தைப் பெற்றுக் கொண்ட அபர்ணா 5 நாட்கள் கழித்து மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து விட்டதாக சொல்லி சான்றிதழ் ஒன்று அனுப்பி இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சான்றிதழை எடுத்துக்கொண்டு மஞ்சு மருத்துவக் கல்லூரிக்கு சென்றபோது அது போலியான சான்றிதழ் என்று கல்லூரி நிர்வாகத்தினர் மஞ்சுவிடம் தெரிவித்து இருந்தார்களாம். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டு பணத்தை கேட்டு அபர்ணா வைத்திருக்கும் ஜவுளி கடைக்கு மஞ்சு சென்றாராம்.

மோசடி புகார்
அப்போது அஞ்சு லட்சம் ரூபாய் பணத்தை தனது நண்பரின் வங்கி கணக்கிற்கு தான் அனுப்பியதாகவும் தனது நண்பரிடம் சென்று வாங்கிக் கொள்ளுமாறு கூறி அலைக்களித்ததாக கூறப்படுகிறது. அத்தோடு ஒரு கட்டத்தில் அபர்ணா கடையை மூடிவிட்டு தலைமறைவாகவும் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அபர்ணா மீது மாம்பழம் காவல் நிலையத்தில் மஞ்சு புகார் அளித்திருக்கிறார். இதன் அடிப்படையில் அபர்ணா நண்பர் அஜய் மீது மோசடி, போலியான ஆவணம் உருவாக்குதல், உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இது போன்று அபர்ணா எவ்வளவு பேரிடம் மோசடி செய்துள்ளார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் மாம்பலம் போலீசார் அவரை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications