பிக் பாஸ்க்கு போனதால் வந்த வினை.. என் தோழியோடு என் காதலர் எனக்கு துரோகம் செய்துவிட்டார்.. நடிகை வேதனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலர் பிரபலம் அடைந்திருக்கின்றனர் அந்த வகையில் மலையாளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் இரண்டாவது சீசனில் நடிகை ஆர்யா பாபு கலந்து கொண்டிருந்தார். அவர் தற்போது பேட்டி ஒன்றில் தன்னுடைய காதலர் தனக்கு செய்த துரோகம் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
நடிகை ஆர்யா பாபு தமிழில் மகாராணி என்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் தான். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் இருக்கும்போது தனக்கு தன்னுடைய தோழி பிரபல நடிகையும் தன்னுடைய காதலரும் செய்த துரோகத்தை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பலருடைய வாழ்க்கையை மொத்தமாக மாற்றி இருக்கிறது. அதுபோல்தான் சின்னத்திரை நடிகையாகவும் வெள்ளி திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்த ஆர்யா தன்னுடைய வாழ்க்கையை பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்பவே மாற்றிவிட்டது. என்று வருத்தத்தோடு கூறி இருக்கிறார். அதாவது மலையாள படங்கள், டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான ஆர்யா பாபு தமிழில் மகாராணி சீரியலில் நடித்திருக்கிறார்.
அவர் இப்போதும் பல சீரியல்களில் நடித்து கொண்டிருக்கிறார். அதேபோல ஆரியா பாவுக்கும் ரோகித் சுசீலன் என்பவருக்கும் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடல் ஆர்யா விவாகரத்து பெற்று இருந்தார். விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய மகளோடு தனியாக வாழ்ந்து வரும் ஆர்யா தன்னுடைய தோழி ஒருவரால் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம் குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.
அதில் நான் காதலித்த ஜான் என்பவர்தான் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு சொன்னார். ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால் அவர் என்னை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தது அவர் என்னை கழற்றிவிட தான் என்பது தெரிகிறது. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நேரத்தில் தான் என்னுடைய அப்பாவும் இறந்திருந்தார். அந்த நேரத்தில் நான் அந்த வேதனையில் இருக்கும் போது எனக்கு ஆதரவு தந்தது ஜான் தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக அவர் என்னை விமான நிலையத்தில் வந்து விட்டார். ஆனால் பிக் பாஸ் வீட்டில் நான் இருந்தபோது அவருடன் எந்த தொடர்பும் கிடையாது. பிறகு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் போட்டியாளர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது என்னிடம் செல்போனை கொடுக்கும்போது பிக் பாஸ் அணியினர்கள் தைரியமாக இருக்கும்படி சொன்னார்கள். அப்போது எனக்கு ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்று தோன்றியது.
உடனே பிக் பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியே வந்ததும் ஜானை தான் முதலில் அழைத்தேன். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பலமுறை அவரை கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன். அவர் எடுக்காததால் நான் என்னுடைய தங்கைக்கு போன் செய்து ஜான் ஏன் பேசவில்லை என்று கேட்டேன். அதற்கு என்னுடைய தங்கை அப்படியா கேட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார். பிறகு நான் வீட்டிற்கு வந்தேன் வீட்டிற்கு வந்தும் அவருக்கு போன் அடித்துக்கொண்டே இருந்தேன்.
அப்போது அவரே எடுத்து மூன்றாவது நபரோடு பேசுவது போல என்னிடம் பேசினார். பிறகு நான் ஏன் போனை எடுக்கவில்லை என்று கேட்டதற்கு கூட நான் தூங்கி விட்டேன் என்று சொன்னார். அது எனக்கு சந்தேகமாக இருந்தது. அதைத்தொடர்ந்து நான் என்னுடைய நெருங்கிய தோழிக்கு ஒரு மெசேஜ் பண்ணுனேன். அதை பற்றி நான் ஜானிடம் சொல்லவே இல்லை. ஆனால் ஜான் என்னிடம் நீ எதற்கு அந்த நடிகைக்கு மெசேஜ் அனுப்புனா என்று கேட்டார். அப்போதுதான் எனக்கு எல்லாமே புரிந்தது.
நான் பிரேக் அப் என்று சொல்ல வேண்டும் என்பதற்காக தான் ஜான் இப்படி செய்து கொண்டிருக்கிறார் என்று எனக்கு புரிந்து விட்டது. அப்போது எனக்கு நிம்மதி முக்கியம் என்பதால் நானும் பிரேக் அப் செய்து விட்டேன். ஆனால் ஜான் எனக்கு செய்த துரோகத்தை நினைக்கும் போது அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பது போன்று இருந்தது. பிறகு நான் என்னுடைய குழந்தைக்காகவும் என்னுடைய வாழ்க்கைக்காகவும் மனதை மாற்றிக் கொண்டேன்.
இப்போதும் அவர் மீது எனக்கு கோபம் இருக்கிறது. ஆனால் அவரை கொலை செய்ய வேண்டும் என்று எனக்கு இப்போது தோன்றவில்லை. அதே சமயம் அவருக்கு ஏதாவது நடந்தால் நான் சந்தோஷப்படுவேன். அது போல ஜானுக்கும் என்னுடைய தோழி அந்த நடிகைக்கும் திருமணம் ஆகிவிட்டது எனக்கு தெரியும். அவர்கள் இருவரும் இப்போது சந்தோஷமாக வாழ்கிறார்கள். அந்த சந்தோஷம் தொடரட்டும் என்று அந்த வீடியோவில் நடிகை ஆர்யா பேசியிருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications