விசித்ரா லேசுபட்டவங்க கிடையாது.. அவங்க அர்ச்சனாவை பாதுகாப்பது இதற்கு தான்.. நடிகை வனிதா பகீர்
சென்னை: பிக் பாஸ் வரலாற்றிலேயே யாரும் செய்யாத சாதனையை நடிகை விசித்திரா பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் செய்து கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வயதில் மூத்த போட்டியாளர்கள் தான் முதல் ஆளாக வெளியேற்ற படுவது வழக்கம். ஆனால் அந்த வழக்கத்தை மாற்றி வயதானாலும் எங்கள் அனுபவத்திற்கு முன்பு எல்லோரும் சுஜிபி என்று சொல்வது போல விசித்திரா விளையாட்டை சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறார்.

அதனாலேயே அவருக்கு அதிகமான ரசிகர்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகை விசித்ரா பற்றி நடிகை வனிதா தன்னுடைய ரிவியூவில் சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
நடிகை வனிதா அடிக்கடி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால் அவர் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சையமானவராக தான் இருந்து வருகிறார். நடிகையாக மட்டுமல்லாமல் பிக் பாஸ் போட்டியாளராகவும் இருக்கும் வனிதா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி ரிவ்யூ செய்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய மகளுக்கு சப்போர்ட் பண்ணி வரும் வனிதா தன்னுடைய மகளோடு அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் விசித்ரா பற்றி தன்னுடைய ரிவியூவில் சில வார்த்தைகளை பகிர்ந்து இருக்கிறார்.
அது தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே ஜோவிகா மற்றும் விசித்ராவிற்கு இடையே படிப்பு விஷயத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இது குறித்து இரண்டு தரப்பினருக்கும் ஆதரவாக அதிகமான ரசிகர்களும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இப்படியாக இருக்கும் நிலையில் ஜோவிகா தொடர்ச்சியாக மாயா மற்றும் பூர்ணிமா அணியோடு சேர்ந்து விளையாடி வருவது குறித்து ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் ஜோவிகாவின் தைரியம் பிடித்திருந்த ரசிகர்களுக்கு கூட இப்போது இவர் மாயா குரூப்பில் சேர்ந்ததால் வெறுப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் கமல் ஜோவிகாவிற்கு அதிகப்படியான டோஸ் விட்டதால் அவர் கடைசியில் அழுது இருந்தார். இந்த நிலையில் நடிகை விசித்ரா ஜோவிகாவை பற்றி அர்ச்சனாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ஜோவிகா முன்பு இருந்ததை போல இப்போது கெத்தாகவும் திமிராகவும் எல்லாம் பேசவே முடியல.
ஜோவிகா டாக்ஸியான நபர்களோடு பழகி வருகின்றார் அதனால் தான் அவரால் சுயமாக எதையும் செய்ய முடியவில்லை என்று விசித்திரா அர்ச்சனாவிடம் சொன்னதை வைத்து வனிதா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் விசித்ரா அர்ச்சனாவே புரொடெக்ட் பண்ணல, பொத்தி வைக்கிறார். பாதுகாப்பது வேறு பொத்தி வைப்பது வேறு.
விசித்திரா தனது சுயநலத்துக்காக அர்ச்சனாவை பகடைக்காய் போல பயன்படுத்தி வருகிறார். அதனால் அவருடைய கேம் சீக்கிரமே கெட்டு போய்விடும் என்றும் வனிதா விமர்சித்து இருக்கிறார். அது மட்டும் இல்ல,அர்ச்சனா உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் யாருக்கு ஆதரவு இருக்கிறது என்பதை பற்றி விசித்திராவிடம் கூறியிருக்கிறார்.
அதுபோல அர்ச்சனாவிற்கு அதிகமான கிளாப் வருவதையும் விசித்திரா புரிந்து வைத்திருக்கிறார். அதனால் தான் விசித்திரா அர்ச்சனாவுக்கு சப்போர்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று அந்த பேட்டியில் பேசி இருப்பதாக தற்போது ரசிகர்கள் வனிதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications