கடைசி 4 நாள் பட்ட கஷ்டம்.. PRக்கு 1 கோடி செலவு..! முதல் முறை ஓப்பனாக விளக்கம் கொடுத்த அர்ச்சனா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ஜெயித்த அர்ச்சனா முதல் முறையாக பிக் பாஸ் பற்றியும் தன்னை பற்றி வந்த சர்ச்சைகள் குறித்தும் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதில் அர்ச்சனா பிஆர்க்கு பணம் கொடுத்து தான் டைட்டில் ஜெயித்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அர்ச்சனா மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
அதோடு அர்ச்சனா ஜெய்ப்பதற்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார் என்று எழுந்து வந்த வதந்திகளுக்கும், சர்ச்சைகளுக்கும் அர்ச்சனா இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுபோல கடைசி ஒரு வாரத்தில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும் அர்ச்சனா பேசியிருக்கிறார். அந்த வகையில் என்னவெல்லாம் அவர் பேசியிருக்கிறார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் அவர் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 14-ஆம் தேதியோடு முடிவுக்கு வந்தது. ஆனாலும் இந்த சீசன் பற்றிய பேச்சு இன்னும் இணையத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அர்ச்சனா இந்த சீசன் டைட்டில் வெற்றி பெற்றது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இதுவரைக்கும் அர்ச்சனா எந்த பேட்டிகளும் கொடுக்காமல் இருந்த நிலையில் இன்று லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.
அதில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயித்தது பி ஆர் வைத்து தான் என்று பலரும் கூறி வருவார்கள். அதை பார்க்கும்போது எனக்கு சிரிப்பாக இருக்கிறது. அந்த அளவிற்கு பி ஆர் வைத்து நான் ஜெயிக்க வேண்டும் என்றால் அதே பி ஆர் வைத்து எனக்கு ஏதாவது திரைப்பட வாய்ப்புகள் வாங்கி இருப்பேனே? எதற்காக இந்த பிக்பாஸ் டைட்டில் வாங்க வேண்டும்.
இந்த பிக்பாஸ் கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்தவர்கள் எத்தனை பேர் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் நீங்களே சொல்லுங்கள்? அது எல்லாருக்கும் தெரியும்... இது குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும்தான் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாக இருக்கும். அதற்கு பிறகு மக்களும் மறந்து விடுவார்கள். இதற்காக நான் பணத்தை செலவழித்து நடிப்பேனா? நான் அந்த அளவிற்கு பணத்தை செலவழிப்பதற்கு என்னிடம் பணமும் கிடையாது.
ரெண்டு வருஷமா நானே இந்த வேலையும் இல்லாமல் இருந்தேன் என்பது பற்றி பிக் பாஸ்க்குள்ளே சொல்லி இருக்கிறேன். எனக்கு என்று ஒரு சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று தான் நான் பிக் பாஸுக்குள் வந்தேன். இந்த சீசன் டைட்டில் வெற்றி பெற வேண்டும் என்றெல்லாம் நினைத்தது கிடையாது. ஒவ்வொரு முறையும் எலிமினேஷன் நடக்கும் போது நானும் வெளியே போய்விடுவேனா என்றெல்லாம் நினைத்து இருந்தேன்.
ஆனால் கடைசியில் நான் வெற்றி பெறுவேன் என்று பெரிய அளவில் நான் நம்பவே இல்லை. அதுவும் அந்த கடைசி வாரத்தில் நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும். நான் அந்த இடத்தில் பேச வேண்டுமா பேசக்கூடாதா என்று சொல்ல முடியாத அளவிற்கு அந்த நேரத்தில் நான் வேதனையில் இருந்தேன். அவ்வளவு கஷ்டப்பட்டு நான் பிஆர் வைத்து வெற்றி பெற வேண்டும் என்றால் அந்த பணத்தை வைத்து நான் எவ்வளவோ பெரிய வேலைகளை எல்லாம் செய்து கொண்டு இருந்திருப்பேன்.
அதுபோல பிக் பாஸுக்குள் யாராலும் 108 நாட்கள் நடித்துக் கொண்டு இருக்க முடியாது. அப்படி அத்தனை நாட்கள் ஒருத்தங்க நடிக்கிறாங்கன்னா கண்டிப்பா அவங்களுக்கு ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம். நான் பார்த்த வரைக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் யாருமே நடிக்கவில்லை. உள்ளே இருந்து சூழ்நிலைக்கு தக்க மாதிரி தான் ஒவ்வொரு நேரமும் எல்லோரும் நடந்து கொண்டார்கள். அதுபோல எனக்கு 19 ஆயிரம் கோடி ஓட்டு கிடைத்திருக்கிறது.
இது எனக்கு ரொம்பவே சந்தோஷம். இதில் எனக்கு என்னை பிடிச்சு ஓட்டு போட்டவங்க பாதி பேரு, இன்னொருதங்க ஜெயிக்க கூடாதுன்னு சொல்லி எனக்கு ஓட்டு போட்டவங்க பாதி பேரு. ஆனா இது தெரியாம பலர் பி ஆர் வச்சு நான் ஜெயித்தேன்னு சொல்றாங்க. அது மக்களையே சந்தேகப்படுற மாதிரி இருக்கு என்று என்று அந்த பேட்டியில் அர்ச்சனா பேசியிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications