விஜய் டிவியில் புது சீரியலில் அசீம்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் இப்போ மீண்டும் சீரியல் நடிகர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட அசீம் மீண்டும் விஜய் டிவி சீரியலில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே அசீம் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இப்போது இவர் மீண்டும் சின்னத்திரைக்கு வருவது இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அங்கு விமர்சனங்களும் பிரச்சனைகளும் பஞ்சமில்லாமல் தான் இருக்கும். இந்த நிகழ்ச்சியில் யார் அதிகமாக பரபரப்பு ஏற்படுத்தி கன்டென்ட் கொடுத்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அதிக நாட்கள் இருந்து வருவார்கள். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய அளவில் சாதனை படைக்கும் வகையில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து கடைசி வரைக்கும் பெரும் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டு இருந்த போட்டியாளர் என்றால் அது அசீம் தான்.

அவர் ஆறாவது சீசனில் போட்டியாளராக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்பு அவர் விஜய் டிவி மற்றும் சன் டிவியில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் முதல் முதலாக வாணி போஜனோடு சேர்ந்து மாயா என்ற சீரியலில் தான் அறிமுகம் ஆகி இருந்தார். அந்த சீரியலுக்கு பிறகு பிரியமானவளே பிரிவோம் சந்திப்போம், தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு, ஜோடி நம்பர் ஒன், பூவே உனக்காக போன்ற பல சீரியல்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானதும் இவருக்கு ஒரு சில வாரங்களில் அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் "சண்டைக்கு வாடா" என்பது போலவே மல்லு கட்டிக் கொண்டிருப்பார் ஆனால் வார இறுதி நாட்களில் அமைதியின் சிகரமாக மாறிவிடுவார். மறுபடியும் திங்கள் கிழமை வந்தால் பழைய மோடுக்கு மாறிவிடுவார்.
இது பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த பலரையும் எரிச்சல் அடைய வைத்தது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசனை கூட பல நேரங்களில் கோபம் அடைய வைத்து அமீற்க்கு நேரடியாக வார்னிங்கும் கொடுத்திருக்கிறார். ஆனால் ரசிகர்கள் அவருக்கு ஒவ்வொரு வாரமும் எல்லா போட்டியாளர்களை விடவும் பல மடங்கு வாக்குகள் செலுத்தி அவரை சேவ் செய்து வந்தனர். கடைசியில் அவரே அந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது கூட அதே நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. அசீம் பிஆர்டீம் உதவியோடு தான் வெற்றி பெற்றார் என்றும் பலர் குற்றம்சாட்டி வந்தனர். ஆனால் அது குறித்து இப்ப வரைக்கும் நிரூபிக்கப்படாத வகையில் தான் இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்பட்டது.
முதல் கணவரை விவாகரத்து செய்ய காரணம் இதுதான்.. வெளிப்படையாக பேசிய ஸ்ரீதிகா.. கணவர் சொன்ன வார்த்தை
குறிப்பாக பொன்ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படத்தில் அசீம் தான் நாயகன் என்றும் கூறப்பட்ட நிலையில் அசீம் தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. ஈரமான ரோஜாவே சீரியலை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த சீரியலில் தான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும் அவருக்கு ஜோடியாக முன்னணி தொலைக்காட்சி நடிகை ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications