முதல் கணவரை விவாகரத்து செய்ய காரணம் இதுதான்.. வெளிப்படையாக பேசிய ஸ்ரீதிகா.. கணவர் சொன்ன வார்த்தை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம், மகராசி, குலதெய்வம் போன்று சீரியல்களில் மூலம் பிரபலமடைந்த நடிகை ஸ்ரீதிகா சில வாரங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் ஆரியனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தான் எதற்காக முதல் கணவரை விவாகரத்து செய்தேன் என்று பேட்டியில் பேசியிருக்கிறார்.
சீரியல் நடிகை ஸ்ரீதிகாவிற்கு இணையத்தில் அதிகமானவர்கள் ஃபாலோயர்ஸாக இருக்கிறார்கள். இவர் நாதஸ்வரம் சீரியலில் மலர் கேரக்டர் மூலமாகத்தான் சின்னத்திரையில் பெரிய அளவில் பிரபலமடைந்தார். இந்த சீரியலை தொடர்ந்து தொடர்ச்சியாக சன் டிவியில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவரோடு மகராசி சீரியலில் கதாநாயகனாக நடித்த ஆரியனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆரியனுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கும் விவாகரத்தில் முடிந்து விட்டது. ஆரியனின் திருமணத்தில் தன்னுடைய முதல் கணவரோடு ஸ்ரீதிகா கலந்து கொண்டார். ஆனால் இப்போது இருவரும் முதல் திருமண வாழ்க்கையில் இருந்து விலகி இரண்டாவது திருமணம் செய்திருக்கும் நிலையில் தாங்கள் எதற்காக விவாகரத்து செய்தோம் என்பது பற்றி விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.
அதில் ஸ்ரீதிகா மற்றும் அவருடைய கணவர் ஆரியன் இருவருமே தங்களுடைய முதல் திருமண வாழ்க்கையில் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டிருந்ததாகவும் சொல்லியிருக்கின்றனர். ஸ்ரீதிகா தன்னுடைய முன்னாள் கணவர் குறித்து பேசுகையில் அவர் நல்ல மனிதர் தான் அவரைப் பற்றி எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனால் எனக்கும் அவருக்கும் திருமண வாழ்க்கையில் சில மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது.

ஆரம்பத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று நாங்கள் நினைத்து ஆனால் அது நாட்கள் போக போக விரிவடைந்து கொண்டே இருந்தது. நான் சின்ன வயதில் திருமணம் செய்து கொள்ளவில்லை. 30 வயதிற்கு மேலே வீட்டில் பார்த்து தான் எனது முதல் திருமணத்தை செய்து வைத்தார்கள். ஆனால் நான் எதிர்பார்த்தது போல திருமண வாழ்க்கை எனக்கு இல்லை. அதில் பெரிய ஏமாற்றம் தான் கிடைத்தது.
எனக்கும் அவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. அதனாலேயே நாங்கள் இருவரும் பேசி தனித்தனியாக பிரிந்து விடலாம் என்று நினைத்து இருந்தோம். யாராக இருந்தாலும் அவர்களுடைய இயற்கையான குணத்தின்படிதான் இருக்க வேண்டும் நமக்காக அவர்களை மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்யக் கூடாது. அதனாலேயே நான் அவரை விட்டு விலக முயற்சி செய்தேன்.
அதுபோல ஆரியனுக்கும் அவருடைய முன்னாள் மனைவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆரம்பத்திலிருந்து திருமண வாழ்க்கையில் இருவருக்கும் மனம் ஒத்துப் போகவில்லை. பிறகு இருவரும் பிரிந்து விட்டார்கள். அந்த நேரத்தில் நான் ஆரியனுக்கு தோழியாக தான் இருந்தேன். அதனால் அவர்களுடைய திருமண வாழ்க்கை மீண்டும் சேர வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை.
இனி முடியாது என்ற கட்டத்தில் வந்த போதுதான் ஆரியனும் அவருடைய மனைவியும் விவாகரத்து செய்து கொண்டனர். நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் நட்பாக தான் இருந்தோம். சீரியலில் ஒன்றாக நடித்திருக்கிறோம் என்பதாலேயே பல ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தோம். ஆனால் எல்லோரும் நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி வந்தார்கள்.
அந்த நேரத்தில் எங்களுடைய மனதில் எதுவும் இல்லை. பிறகு எங்களுடைய பெற்றோர்கள் நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா? என்று கேட்ட பிறகுதான் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக யோசித்து திருமண வாழ்க்கையில் இணைந்து இருக்கிறோம் என்று ஸ்ரீதிகா மற்றும் அவருடைய கணவர் ஆரியன் அந்த பேட்டியில் பேசியிருக்கின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications