தர்ஷன் பற்றிய ரகசியங்களை உடைத்த சீரியல் நடிகை.. எனக்கும் இதுபோல நடந்திருக்கு! காரில் அந்த ஸ்டிக்கர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தர்ஷன் நேற்று தன்னுடைய வீட்டு முன்பு கார் பார்க்கிங் செய்த பிரச்சனையால் நீதிபதியின் மகனோடு வாக்குவாதம் ஏற்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் தர்ஷன் பற்றி அவருடன் நடித்த நடிகை ரம்யா சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்து தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் தர்ஷன் நேற்று முன்தினம் ஜிம்முக்கு போயிட்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வரும்போது வீட்டு வாசலில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்ததால் தன்னால் வீட்டிற்குள் செல்ல முடியாமல் வெளியே காத்திருந்ததாகவும் அதனால் அந்த கார் உரிமையாளரிடம் அது பற்றிய கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

தர்ஷன் கைது
அதைத் தொடர்ந்து தர்ஷன் தன் தரப்பில் என்ன நடந்தது என்று விளக்கம் கொடுத்திருந்தார். அதுபோல எதிர் தரப்பில் சண்டை போட்ட நீதிபதியின் மகன் மருத்துவமனையில் அட்மிட் ஆகி பேட்டிகளும் கொடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று தர்ஷன் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருந்தார். இது குறித்து பிக் பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.
சீரியல் நடிகை வீடியோ
அதை தொடர்ந்து சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரம்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் தர்ஷன் கைது செய்யப்பட்ட செய்தியை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். தர்ஷன் பெண்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பார். அதை நான் பார்த்து இருக்கிறேன் தர்ஷனோடு ஒரு திரைப்படத்தில் நான் நடித்திருந்தேன்.
பாசமான தம்பி
அந்த திரைப்படத்தின் நடிக்கும் போது முதலில் அவன் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரே நம்மிடம் பேசுவாரா என்று யோசித்தேன். ஆனால் பேசிய முதல் நாளே எல்லோரிடமும் நன்றாக பேச தொடங்கி விட்டான். என்னிடம் மட்டுமல்ல சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த எல்லோரிடமும் ஜாலியாக பேசினான். பெண்களுக்கு நல்ல மரியாதை கொடுப்பான் என்னிடம் உன்னுடைய சொந்த தம்பி போல தான் நடந்து கொண்டிருக்கிறான். உண்மையாக ஒருவர் மரியாதையோடும் பாசத்தோடும் பேசுவதற்கும் பொய்யாக பேசுவதற்கு வித்தியாசம் இருக்கிறது ஆனால் தர்ஷன் எல்லாரிடமும் மரியாதையோடு தான் பேசுவான்.

காரில் பிரச்சனை
தர்ஷன் விஷயத்தில் அந்த இடத்தில் என்ன நடந்தது என்று தெரியாது. ஆனால் அதேபோல சம்பவம் எனக்கு நடந்திருக்கிறது பிரபலங்களாக இருக்கிறோம் என்றால் நாங்கள் ஒரு பெரிய ஆள் என்று எந்த இடத்திலும் நினைத்தது கிடையாது. ஆனால் சிலர் எங்களை மோசமாக நடத்துகிறார்கள். நான் ஒருமுறை காரில் போய்க்கொண்டிருக்கும் போது என்னுடைய காருக்கு முன்பும் ஒரு கார் போயிருந்தது அதேபோல காருக்கு பின்னாடி ஒரு கார் வந்திருந்தது.
ஸ்டிக்கர்
இரண்டு கார்களிலும் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அது அவர்கள் பார்க்கும் வேலைக்கான ஸ்டிக்கர். ஆனால் அந்த ஸ்டிக்கர் எதற்காக ஒட்டப்பட்டு இருக்கிறது என்று தெரியவில்லை. அடுத்தவர்களை பயமுறுத்துவதற்காக இவர்கள் இது போன்று ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் என்ற கேள்விகளும் வருகிறது, எனக்கு முன்பு போன கார் ஒரு இடத்தில் எனக்கு வழிவிடாமல் வேண்டும் என்றே பிரச்சனை செய்து நிறுத்தினார்கள்.

உண்மை தெரிய வேண்டும்
அதனால் நானும் காரை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது என் பின்னாடி வந்த கார் என் காரில் இடித்து விட்டது. அவர்கள் எல்லோரும் பதவியில் இருப்பதால் அவர்கள் எங்களை மிரட்டுவது போல தான் பேசினார்கள். நான் தப்பே செய்யாமல் அந்த இடத்தில் பிரச்சனை எதுவும் வேண்டாம் என்று அமைதியாக வந்து விட்டேன். இப்போ தர்ஷனுக்கு நடந்திருக்கும் பிரச்சனையில் இருந்து அவர் சீக்கிரமாக வெளியே வர வேண்டும் இதில் என்ன நடந்தது என்ற உண்மை எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என அந்த வீடியோவில் நடிகை ரம்யா பேசியிருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications