இந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது இவர்தானா? முழு வாக்குகள் விவரம்
சென்னை: முதல் வாரத்தின் எலிமினேஷன் ரசிகர்கள் எதிர்பார்ப்பு படியே அமைந்து விடும் போல.
இருவருடைய மதிப்பெண்கள் குறைவாக இருப்பதால் இதில் யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் இருக்கின்றனர்.
தங்களுக்குப் பிடித்த போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் தொடர்ந்தால் சந்தோஷம் அடைவது போலவே தற்போது இவருடைய மதிப்பெண் குறைவு பற்றி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஐந்தாவது சீசனும் பட்டையை கிளப்புகிறது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சியை சீரியலுக்கு மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ரியாலிட்டி ஷோ என்றால் இதுதான் என்று பல ரசிகர்கள் கூறும் வகையில் இது நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகிறது. தற்போது நான்கு சீசன்கள் முழுமையாக முடிவடைந்து இருந்தாலும் ஐந்தாவது சீசனும் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு வரைக்கும் இதை பற்றி விமர்சித்து கொண்டிருந்தவர்கள் நிகழ்ச்சி தொடங்கியதும் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர்.

முதல் வார எலிமினேஷன்
ரசிகர்களின் பேராதரவோடு இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனாக கடந்து கொண்டிருந்தாலும் தற்போது ஐந்தாவது சீசனில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த காலகட்டம் வந்துவிட்டது. முதல் வாரத்தில் இந்த சீசனில் போட்டியாளர்கள் சந்தோஷமாகவும், ஜாலியாகவும் இருந்தனர். ஆனால் இரண்டாவது வாரத்தில் இவர்களுக்குள் எலிமினேஷன் என்று செய்தி வந்ததும் ஒரு சில பிரச்சனைகள் பூதாகரமாக மாறி வருகிறது. ஏற்கனவே போன வாரத்தில் நமிதா தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்று இருப்பது என்ன காரணம் என்று தெரியாத வகையில் அடுத்த எலிமினேஷன் வந்துவிட்டது.
Recommended Video

பாவனி தப்பிவிட்டார்
இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். அதில் ஒருவர் வெளியேறிய பிறகு 17 பேர் போட்டியில் இருந்தாலும் இதில் வீட்டின் தலைவராக இருக்கும் ஒருவரை தவிர மீதமுள்ள அனைவரையுமே எலிமினேஷன் செய்து கொள்ளலாம் என்று பிக் பாஸ் சொன்னதும் இந்த வீட்டின் தலைவராக இருக்கும் தாமரையை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவருமே ஒருவரை மாற்றி ஒருவர் எலிமினேஷன் செய்துகொண்டிருந்தனர். இதில் பாவனிரெட்டி மட்டும் யாருடைய கண்களுக்கும் அகப்படாமல் தப்பி விட்டார். இது அவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்து வருகிறது.

அட இவரா முதல் எலிமினேஷன்
ஆனால் மீதமிருக்கும் போட்டியாளர்களில் யார் இந்த வாரம் எலிமினேஷன் ஆவார்கள் என்று மக்கள்தான் முடிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இதுவரைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் அபிஷேக் தான் கடைசி இடத்தில் இருந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக சின்ன பொண்ணு இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடைசி இடத்தில் இருப்பதால் இவர்களில் யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இவர்களை தாண்டி இவர்களுக்கு அடுத்தபடியாக சுருதி, அதற்கடுத்து அபினய் என்று வரிசை கட்டிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் கடைசி இடத்தில் இருக்கும் அபிஷேக் வெளியேறுவார??அல்லது அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் சின்ன பொண்ணு வெளியிடுவாரா? ? என்று பொறுத்திருந்து பார்த்தால் தெரியும் என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications