முதுகுக்கு பின்னாடி கேலி செய்யுறீங்க.. தமிழ் பழக்கம் அப்படி இல்ல! ஹிந்தி நடிகைக்கு ஸ்ருதிஹா பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் ஹிந்தி சீசன் 18ல் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ஸ்ருதிகா அந்த நிகழ்ச்சியில் தன்னை கேலி செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்து பேசிய வீடியோ இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.

தமிழில் பிக் பாஸ் 8வது சீசன் தொடங்கப்பட்ட அதே நாளில்தான் ஹிந்தியில் 18வது சீசன் தொடங்கப்பட்டது. தமிழில் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போல ஹிந்தியில் சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதுபோல விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்ற ஸ்ருதிஹா ஹிந்தி பிக்பாஸில் முதல் தமிழ் நடிகையாக கலந்து கொண்டிருக்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

ஸ்ருதிகா பள்ளி படிக்கும் போது நான்கு படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் நடிப்புக்கு டாட்டா காட்டிவிட்டு படிப்பை தொடர்ந்து தற்போது பிசினஸும் செய்து கவனித்து வருகிறார். ஒரு பக்கம் பிசினஸ் இன்னொரு பக்கம் குடும்பம் என்று பிசியாக இருக்கும் ஸ்ருதிஹா அடிக்கடி மாடலிங் போட்டோ சூட்டுக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதைத் தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் தமிழில் கலந்து கொள்ளாமல் ஹிந்தியில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் நிகழ்ச்சியில் அங்கு அவர் முதல் நாளிலிருந்து தான் தமிழ் நடிகையாக தமிழ்நாட்டின் பிரபலமாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

முதல் நாள் மேடையில் சல்மான் கானிடம் தமிழ் ரசிகர்களுக்கு நீங்கள் தமிழில் வணக்கம் சொல்லுங்க என்று வேண்டுகோள் வைக்க அவரும் அது போலவே செய்திருந்தார். அதற்குப் பிறகு நிகழ்ச்சியில் அவர் எப்போதும் போல கலகலப்பாக ஜாலியாக பேசிக் கொண்டிருக்க அதை பார்த்து ஆரம்பத்தில் ஹிந்தி ரசிகர்கள் இவர் நடிக்கிறார் என்று சொல்லி வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருடைய இயல்பான கேரக்டர் இதுதான் என்பதை புரிந்து கொண்டனர்.

பிக் பாஸ் 8: ஏன் இவ்வளவு வன்மம்? வாக்குவாதத்தில் முத்துக்குமார்.. நீயா நானா என போட்டியாளர்கள் சண்டை

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஒரு சிலர் அவரோடு நெருங்கி பழகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் சில சம்பவங்களும் நடைபெற்றிருக்கிறது. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ருதிஹா மற்றும் ஹிந்தி நடிகை ஆலிஷ் கௌஷிக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு ஒரு டாஸ்க்கில் போட்டியாளர்களின் பெயர் போட்ட ஒரு பொம்மை வைக்கப்பட்டிருக்கிறது.

அப்போது அந்த போட்டியாளர் பற்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதை வைத்து சொல்லலாம் என்று பிக் பாஸ் கூறி இருக்கும் நிலையில் ஸ்ருதிஹா இந்த நிகழ்ச்சியில் நான் பேசுவதை பார்த்து சிலர் என்னை முதுகுக்கு பின்பு பேசுகிறார்கள். அது எனக்கு தெரியும் முகத்துக்கு நேராக நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறீர்கள் உங்களுடைய பேச்சு வழக்கு எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று பாராட்டுகிறார்கள்.

ஆனால் முதுகு பின்னால் என்னை முட்டாள் என்று சொல்கிறார்கள். நான் தமிழ்நாட்டில் இருந்து வந்தேன் என்னுடைய பாரம்பரியம் இதுதான் என்னுடைய இயல்பு மாறாமல் நான் இந்த நிகழ்ச்சியில் இருக்கிறேன். ஆனால் உங்களின் பார்வை வேறு விதமாக இருக்கிறது என்பது எனக்கு புரிகிறது எனக்கு ஜோக்குக்கும், கேலிக்கும் வித்தியாசம் தெரியும். ஆனால் ஆலிஸ் நீங்கள் செய்து கொண்டிருப்பது கேலி.

என்னை முட்டாள் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது எனக்கு தெரியும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட அதை ஆலிஸ் மறுத்து இருந்தார். ஆனாலும் நான் உடை மாற்ற போகும்போது உங்களிடம் இயல்பாக பேசிக்கொண்டு தான் போகிறேன் அது உங்களுக்கு தான் தவறாக தெரிகிறது. நான் போன பிறகு நீங்கள் என்னை பற்றி கேலி செய்கிறீர்கள், அதுஎனக்கு தெரியும். ஆனால் நான் அதற்கு துவண்டு போக மாட்டேன் என்று ஸ்ருதிஹா பேசியிருக்கும் நிலையில் இந்த வீடியோவை அவருடைய கணவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இது இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது. இந்த வாரத்தில் ஸ்ருதிஹா எலிமினேஷனக்கான நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாக்களித்து அவர் காப்பாற்றப்பட போகிறாரா? அல்லது வரும் வாரத்தோடு அவர் வெளியேறப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+