பிக் பாஸ் 8: ஏன் இவ்வளவு வன்மம்? வாக்குவாதத்தில் முத்துக்குமார்.. நீயா நானா என போட்டியாளர்கள் சண்டை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அக்டோபர் 16ஆம் தேதிக்கான எபிசோடில் விஜே விஷால், முத்துக்குமார் மற்றும் ஆர் ஜே ஆனந்தி மூன்று பேருக்கும் முதல் இடத்திற்கான போட்டி நடைபெற்றிருக்கிறது. அப்போது இவர்கள் மூன்று பேரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் சமம் என்று சொன்னாலும் இந்த முறை வீட்டிற்கு நடுவே கோடு போட்டு ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் மோத விட்டு பிக் பாஸ் வேடிக்கை பார்க்கிறார். இதில் யார் பெரியவர்கள் என்று அடித்துக் கொள்வதால் தினமும் பிரச்சனை தான் வெடிக்கிறது. இரண்டு பக்கங்களிலும் போட்டியாளர்கள் புதியதாக எந்த சுவாரசியமான செயல்களையும் போட்டியாளர்கள் செய்யவில்லை. இதனாலேயே இவர்களுக்குள் மேலும் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக பிக் பாஸ் புது புது டாஸ்க் கொடுத்து கொண்டிருக்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

இந்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கான டாஸ்க் நேற்று முன்தினம் கொடுக்கப்பட்ட போது அதில் ஆண்கள் அணியினர் முதல் முறையாக வெற்றி பெற்றனர். முதல் வாரத்தில் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர். அதில் தர்ஷிகா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது வாரத்தில் சத்யா தலைவராக வெற்றி பெற்று இருக்கிறார். ஆனாலும் ஆண்கள் பக்கமாக இருக்கும் கிச்சனுக்குள் பெண்கள் வருவதற்கு எங்களிடம் அனுமதி கேட்டு தான் வரவேண்டும் என்று நேற்று ஆண்கள் அடாவடி செய்திருந்தனர்.

அதனால் நேற்று முழுக்க சண்டைகள் தான் நடந்தது. பெண்கள் அணியில் இருந்து கிச்சனுக்கு சமைக்க வருவதற்கு ஆண்கள் சொல்லும் இரண்டு பேர் தான் வரவேண்டும், அவர்கள் ஆண்கள் சாப்பிட்ட பாத்திரங்களையும் கழுவ வேண்டும் என்று ரூல்ஸ் சொல்ல அதனால் பெண் போட்டியாளர்கள் கோபப்பட்டு இருந்தனர்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் போட்டியாளர்கள் ஒன்று முதல் 17 வது இடங்களுக்குள் தாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று சொல்ல சொல்லி பிக் பாஸ் டாஸ்க் கொடுத்து இருக்கிறார். அதில் முதல் இடத்திற்கு எல்லா சீசன் போல இந்த சீசனிலும் போட்டி பயங்கரமாக இருக்கிறது. முத்துக்குமார், விஜே விஷால், மற்றும் ஆர் ஜே ஆனந்தி 3 பேரும் போட்டியிடுகிறார்கள். நாங்கள் முதலிடத்தில் தான் இருப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கு உங்கள் தகுதியை சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கும்போது முத்துக்குமார் டாஸ்க் ஆரம்பிச்சதிலிருந்து நான் ஆனந்தியை விட பெஸ்ட்டா நினைக்கிறேன். ஷோக்கு முன்னாடி விஷாலை விட நான் அதிகமா உழைச்சிருக்கிறேன்‌ அதனால் நான் அவரை விட ஒரு படிக்கு முன்பு தகுதியானவன் என்று நினைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

அதை தொடர்ந்து விஜே விஷால் தொகுப்பாளராக என்னுடைய பெஸ்ட்டை நான் கொடுத்து இருக்கிறேன் எனக்கு இந்த பெஸ்ட் பொசிஷன் வேணும் என்று நினைக்கிறேன் என்று சொல்கிறார். அடுத்ததாக ஆர் ஜே ஆனந்தி இவங்க ரெண்டு பேர் பக்கத்தில் நான் ஆர்.ஜே ஆனந்தியா இல்லாமல் சி இ ஓ வாக இருக்க எக்ஸ்ட்ரா எஃபெக்ட் போட்டு இருக்கேன். அதனால் நாம் பெஸ்ட் என்று நினைக்கிறேன் என்று ஆர்.ஜே ஆனந்தி சொல்கிறார்.

அதற்கு முத்துக்குமார் ceoவாக இருக்க அவங்க பெஸ்ட் எஃபெக்ட் போட்டாங்களோ அதுபோல நானும்... என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கிருக்கும் போட்டியாளர்கள் ஐயோ போதும்டா சாமி என்பது போல ரியாக் செய்ய அதனால் காண்டான முத்துக்குமார் நீங்க எல்லாம் என்ன சொல்ல போறீங்கன்னு புரியல... உங்க ஃபேவரிடிசம் இங்க யாரும் காட்ட வேண்டாம்... ஏங்க இவ்வளவு வன்மத்தை காட்டுறீங்க என்று கேட்கிறார். இந்த ப்ரோமோ அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

television bigg boss tamil 8 bigg boss 8 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+