Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bigg Boss: பிக்பாஸ் செட் இழுத்து மூடுங்க! விதிமீறலால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தெலுங்கில் நாகார்ஜுனா, மலையாளத்தில் மோகன்லால், தமிழில் விஜய் சேதுபதி, மற்றும் கன்னடத்தில் கிச்சா சுதீப் எனப் பிரபலங்கள் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

Bigg Boss Bigg Boss Kannada Bigg Boss tamil

தடைபட்ட கன்னட பிக் பாஸ்

கன்னடத்தில் 'பிக் பாஸ் சீசன் 12' நிகழ்ச்சி, 19 போட்டியாளர்களுடன் பிரமாண்டமாகத் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கினார். உண்மையில், கடந்த ஆண்டே அவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்தார். ஆனாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் சேனல் நிர்வாகத்திற்கும் சுதீப்பிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக, தனது பிடிவாதத்தைத் தளர்த்திய சுதீப், இந்த சீசனையும் தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டார். ஆனால், சுதீப்பின் இந்த ஒப்புதல் கொடுத்த சில நாட்களிலேயே, ஒட்டுமொத்தப் பிக் பாஸ் தயாரிப்புக் குழுவுக்குமே அதிர்ச்சி காத்திருந்தது!

சுற்றுச்சூழல் விதிகள் மீறல்

கன்னட பிக் பாஸ் செட் அமைக்கப்பட்டுள்ள தளத்தை, உடனடியாக மூட வேண்டும் என அம்மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது கன்னட சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஸ்டுடியோவில் கழிவுநீர் அகற்றுதல், நீர் மேலாண்மை தொடர்பான மிக முக்கியமான விதிமீறல்கள் நடைபெறுவதாகப் புகார் எழுந்தது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ததில் கிடைத்த தகவல்

வளாகத்தில் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் தேங்கியுள்ளன. அங்கு நிறுவப்பட்ட STP அலகுகள் செயல்படாமல், பயன்படுத்தப்படாமல் கிடப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். கழிவுநீரை வெளியேற்றுவதற்குச் சரியான உள் வடிகால் இணைப்புகள் இல்லை.

சுற்றுச்சூழல் பாதிப்பு

இவ்வாறாக சுத்திகரிக்கப்படாத கழிவுகள் வெளியேற்றப்படுவது, அதனைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் அமைப்புக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பல விதிமுறைகளை மீறியதைக் காரணம் காட்டி, தயாரிப்பு நிறுவனம் சுற்றுச்சூழல் விதிகளைக் கடைபிடிக்கும் வரை, கன்னட பிக் பாஸ் தளத்தில் உள்ள அனைத்துப் பணிகளையும் நிறுத்தி வைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் பிக் பாஸ் ரசிகர்கள் கவனத்திற்கு

தமிழ்நாட்டில், 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் டாக்டர் திவாகர் மற்றும் எஃப்.ஜே-க்கு இடையே "வெட்டிடுவேன்" என்று சண்டை உச்சத்தில் போய்க் கொண்டிருக்கும் இந்த வேளையில், அண்டை மாநிலத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவே சுற்றுச்சூழல் விதிகளுக்காக மூடப்படுவது, தயாரிப்புக் குழுக்களுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை மணி.

பிக் பாஸ் போன்ற பெரிய ஷோக்கள், மக்கள் மத்தியில் பொழுதுபோக்கைக் கொடுத்தாலும், சமூகப் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுவது அவசியம். இனிமேலாவது தமிழ் பிக் பாஸ் தயாரிப்புக் குழுவினர், வீட்டில் நடக்கும் சண்டைகளைத் தாண்டி, சுற்றுச்சூழல் விதிகளையும் மீறாமல் செயல்படுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டியது அவசியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+