என் நண்பன் இறந்துட்டான்..வருத்தத்தில் கவின் செய்த செயல்..இப்படியுமா யோசிப்பாங்க?நட்புனா இதுதான்பா..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கவின் சமீபத்தில் விருது விழா ஒன்றில் தன்னுடைய நண்பர் மறைவு பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.

தன்னுடைய நண்பனின் நினைவாக தான் டாடா திரைப்படத்தில் மணி என்கிற பெயரை வைத்துக் கொண்டதாக கூறி இருக்கிறார்.

தன்னுடைய நண்பர்களின் உதவியால் தான் இன்று இந்த நிலைமைக்கு வந்திருப்பதாகவும் கவின் கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Bigg Boss Kavin talks about how his friends have helped him

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமான ஒரு சில நடிகர்கள் தான் முன்னணியில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த மாதிரி தான் தற்போது கவின் திரை துறையில் கொடி கட்டி பறந்து வருகிறார்.

நடிகர் கவின் முதலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி பிறகு சரவணன் மீனாட்சி சீரியல் இரண்டாவது பாகத்தில் கதாநாயகனாக சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார். சின்னத்திரையின் மூலமாகவே இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய பர்பாமன்ஸ் அதிகமான ரசிகர்களால் கவரப்பட்டது. அதுவும் இவருக்கு இந்த நிகழ்ச்சியின் மூலமாக அதிகமான பெண் ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். நெட்டிசன்கள் சிலர் இவரை கக்கூஸ் கவின் என்று கலாய்த்து வந்தனர். ஆனாலும் அதையெல்லாம் கவின் எப்போதும் கண்டு கொண்டதே இல்லை. இந்த நிகழ்ச்சியில் இருந்த லாஸ்லியாவிற்க்கும் இவருக்கும் ஏற்பட்ட காதல் மோதல் வதந்திகள் எல்லாம் கடந்து தற்போது வெள்ளி திரையில் இவர் வெற்றி கொடி கட்டி பறந்து வருகிறார்.

காலேஜ் ஸ்கூல் படிக்கும்போதே இவருக்கு திரைத்துறையில் இருந்த ஆர்வத்தினால் தான் தன்னுடைய நண்பர்களின் மூலமாகத்தான் இவர் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். முதலில் நடிப்பை முறையாக கற்றுக்கொள்ள வேண்டுமென்றே நண்பர்களின் உதவவியால் கூத்துப்பட்டறையிலும் சேர்ந்து மூன்று மாதம் பயிற்சி எடுத்திருக்கிறார். அதற்கு பிறகு தான் இவர் விஜய் டிவியில் நடிகராக தன்னுடைய வாழ்க்கை தொடங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் சிவா எனும் கேரக்டரில் சின்னத்திரையில் என்ட்ரி ஆகினார்.

Bigg Boss Kavin talks about how his friends have helped him

அதைத்தொடர்ந்து தாயுமானவன் என ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு வெள்ளி திரையில் சத்திரியன் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு நட்புனா என்னனு தெரியுமா எனும் திரைப்படத்திலும் அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது டாடா திரைப்படத்தை அவர் நடித்து முடித்து அது வெற்றியும் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு மற்றும் சமூக வலைத்தளத்தில் அதிகமான தேடப்பட்ட இளம் கதாநாயகனாக இவருடைய ரசிகர்கள் இவருக்கு கொடுத்த ஆதரவின் காரணமாக சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இவருக்கு விருது வழங்கப்பட்டது.அந்த நிகழ்ச்சியில் தான் தன்னுடைய நண்பனை குறித்து உருக்கமாக கவின் பேசியிருக்கிறார்.கவின் உடைய நெருங்கிய நண்பரின் பெயர் மணியாம் அவருடைய நினைவாகத்தான் இந்த திரைப்படத்தில் கூட அவர் அதே கேரக்டரில் நடித்திருக்கிறார்.

என்னுடைய இந்த வெற்றிக்கு எல்லாம் காரணங்கள் எப்போதுமே என்னுடைய நண்பர்கள் தான் என்றும், இந்த நிகழ்ச்சிக்கு நான் போட்டுவிட்டு வந்திருக்கும் உடை கூட இது என் நண்பர்களால் கொடுக்கப்பட்டது தான் என்று நண்பர்கள் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+