மணியை பிரிய காரணம் இதுதான்! நிச்சயதார்த்தம் முடிந்ததும் வந்த போன்.. ரவீனாவுடன் அப்படி..பெலினா ஓப்பன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் மணியும் ரவீனாவும் பழகுவதை பார்த்து அதிகமான ரசிகர்கள் இவர்கள் காதலிக்கிறார்களா? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அதே நேரத்தில் இன்றைய முதல் ப்ரோமோவில் ரவீனா மணிக்கு நாட் லைக் கொடுத்து நான் விளையாட்டை சரியாக விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்று விளக்கமும் கொடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் மணியும் அவருடைய முன்னாள் காதலியான பெலினாவும் பிரிவதற்கு காரணம் என்ன என்பது பற்றி பெலினா முதல் முறையாக பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் காதலை பிரிக்கவே முடியாது. ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி விடுகிறார்கள். இது அவர்களாகவே உருவாக்குகிறார்களா? அல்லது பிக் பாஸ் வீட்டிற்குள் கண்டென்டுக்காக உருவாக்குகிறார்களா? என்று பலருக்கும் சந்தேகம் வரும்.
ஏனென்றால் உள்ளே உருகி உருகி காதலித்த பலரும் வெளியே வந்த பிறகு ஆளுக்கொரு வழியாக பிரிந்து போய்விடுவதை பல சீசன்களில் பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில் தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் காதல் ஜோடிகள் என்று ரசிகர்களால் கூறப்படும் ரவீனா மற்றும் மணி நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறி வருகிறார்கள். ஆனால் இவர்கள் உண்மையில் நண்பர்கள் தானா என்று வெளியே இருக்கும் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கும் இவர்களுடைய நடவடிக்கையால் சந்தேகம் வந்திருக்கிறது.
விசித்திரா கூட இவர்களிடம் நேரடியாகவே நீங்கள் இருவரும் நண்பர்கள்தானா அல்லது காதலிக்கிறீர்களா காதலித்தால் தப்பு ஒன்றும் இல்லை என்றும் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு எங்களுக்குள் அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் நண்பர்கள்தான் ஆனால் அதற்கும் மேலே என்று ரவீனா சொல்ல, அதற்கு மணி அப்படி எதுவும் எங்களுக்குள் இல்லை. ஆனால் நீங்கள் கேட்பதை எல்லாம் பார்க்கும்போது ஒருவேளை அப்படி ஒரு சிந்தனை வந்து விடுமோ என்று கிண்டலாக பேசவும் செய்திருந்தார்.

இப்படியாக இவர்கள் பற்றிய சர்ச்சைகளும் வதந்திகளும் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ஏற்கனவே மணி விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும்போது பெலினா என்ற பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இருவருக்கும் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் முதல்முறையாக இது பற்றி பேட்டி ஒன்றில் பெலினா பேசி இருக்கிறார். அதில் எங்களுடைய பிரிவிற்கு ரவீனா தான் காரணம் என்று கூறி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதோடு நானும் மணியும் நன்றாக பழகி வந்தோம். ரவீனா வந்த பிறகுதான் மணியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.
பிறகு நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். எனக்கு எங்கேஜ்மென்ட் நடக்கும்போது மணி எனக்கு கால் பண்ணி பேசி இருந்தார். உண்மையிலேயே மணி, ரவீனா ரெண்டு பேருக்குமே ரொம்ப நெருக்கமாக தான் பழகுகிறார்கள். நட்பை தாண்டி அவர்களுக்குள் ஒரு நெருக்கம் இருக்கிறது. வெளியே இருக்கும் போது கூட நானும் மணியும் காதலை வெளியே சொல்லிக் கொள்ளவில்லை.
ஆனாலும் மணியும் ரவீனா பழகுவதை குறித்து பலரும் பலவிதமாக பேசி இருந்தார்கள். ஒரு கட்டத்தில் நானும் மணியும் உன்னுடைய கேரியரை நீ பாரு, நான் என்னுடைய கேரியரை பார்க்கிறேன் என்று சொல்லி பிரிந்து விட்டோம் என்று அந்தப் பேட்டியில் பெலினா பேசி இருக்கிறார்.
-
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
நான் சின்ன பையன்.. சூர்யாவுக்கு தான் பாதிப்பு! கருப்பு படத்தில் தர்பூசணி காட்சி கட்.. திவாகர் வினோத விளக்கம் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications