ரொம்பவே அழுது இருக்கிறேன்.. குழந்தையை ஸ்கேன் எடுக்க கூட பணம் இல்லை.. மைனா நந்தினி பகிர்ந்த சோகங்கள்
சென்னை: மைனா நந்தினி கொரோனா காலகட்டத்தில் தான் அனுபவித்த கஷ்டங்களை குறித்து சமீபத்தில் பேட்டியில் கூறி இருக்கிறார்.
பணத்தை முழுமையாக செலவழித்து விடக்கூடாது கொஞ்சமாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று நந்தினி அறிவுரை கூறியிருக்கிறார்.
கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையை ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதற்கு கூட பணம் இல்லாமல் தான் கஷ்டப்பட்டதாக மைனா நந்தினி தெரிவித்திருக்கிறார்.

மைனாவாக மாற்றம்
விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மைனாவாக வலம் வந்து இப்ப வரைக்கும் அவருடைய அடைமொழியோடு ரசிகர்கள் அவரை கூப்பிட்டு வருகிறார்கள். மைனா நந்தினி தொகுப்பாளராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என்று கலக்கி கொண்டிருக்கிறார். ஒரு சிலருக்கு மட்டும் தான் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் வாய்ப்பு அமோகமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது மைனாவும் இடம் பிடித்திருக்கிறார்.

பிக் பாஸில் அறிமுகம்
என்னதான் போராட்டங்கள் தனக்கு இருந்தாலும் அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல் சிரித்தபடியே இருக்கும் இவரை ரசிகர்கள் இவர் நடிக்கிறாரா? இல்லை நிஜ கேரக்டரே இப்படித்தானா? என்று குழம்பும் வகையில் இவர் குதர்க்கமாக இருந்து வருகிறார்கள். பிக்பாஸ் வீட்டிற்குள் மைனா நந்தினிக்கு ஒரு பக்கம் ஆதரவு வந்தாலும் மறுபக்கம் இவர் விக்ரமனோடு மோதிக் கொண்டிருப்பதை பார்த்தும் மணிகண்டனோடு சேர்ந்து ஷேப் கேம் விளையாடிக் கொண்டிருந்தார் என்றும் பல்வேறு கருத்துக்கள் குவிந்து வந்தது.

பிரபலம் கிடைத்தது
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் இருந்து நானும் டப் போட்டியாளர்தான் என்று நிரூபித்து விட்டார். இவர் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் ஆகும் போது ஒரு வாரம் கழித்து உள்ளே நுழைந்திருந்தாலும் இவர் எல்லாம் இங்கே எத்தனை நாட்கள் தாக்குபிடிக்கப் போகிறார் என்று நினைத்திருந்த நிலையில், இவர் காமெடி ஆக நடித்திருந்த அதே சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகியாக நடித்த ரட்சிதா மகாலட்சுமியை விடவும் இவருக்கு அதிகமான ஓட்டுகள் கிடைத்து இவர் ஒவ்வொரு முறையும் சேவ் ஆகிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மைனா நந்தினி பிரபலம் ஆனதை விடவும் அவருடைய மகன் ரொம்பவே பிரபலமாகி விட்டார். அது மட்டுமல்லாமல் அவருடைய கணவரான யோகேஷும் மைனாவிற்கு வெளிப்படையாக அறிவுரையை கூறி பலருடைய பாராட்டுகளை பெற்று விட்டார்.

சேமிப்பு முக்கியம் பிகிலு
பிறகு சமீபத்தில் மைனா நந்தினி பேட்டி ஒன்றில் தன்னுடைய கேரக்டர் பற்றி கூறி இருக்கிறார். அதில் எங்கள் வீட்டில் அதிகமாக செலவு செய்வது யோகி தான். நாம் கஷ்டப்பட்ட நேரத்தில் தான் செலவு செய்ய முடியவில்லை. இப்போது இருக்கும் போது அதை செலவு செய்வதில் தப்பு இல்லை என்று கூறுபவர் தான். ஆனால் நான் ரொம்பவே கஞ்சம் பிடிப்பேன். அதுவும் கொரோனா காலகட்டத்தில் நான் கர்ப்பமாக இருக்கும்போது பணத்திற்கு ரொம்பவே கஷ்டப்பட்டோம். அந்த நேரத்தில் ஸ்கேன் எடுப்பதற்கு கூட கையில் பணம் இல்லாமல் இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு அடிக்கடி தோன்றியது கொஞ்சம் பணம் நாமும் சேர்த்து வைத்திருந்தால் இந்த கஷ்டம் வந்து இருக்காது என்று தான். அதனால் தான் வருமானத்தில் கொஞ்சமாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

தனிமையில் அழுகை
அதோடு நான் அதிகமாக அழவும் செய்வேன். ஏதாவது பிரச்சனை என்று வந்துவிட்டால் அடுத்தவர்கள் முன்னணியில் எனக்கு அழுவது பிடிக்காது. நான் எங்கள் வீட்டு பாத்ரூம் மேல் உட்கார்ந்து கொண்டுதான் அழுது கொண்டிருப்பேன். என்னுடைய சோகங்கள் கவலைகளை எல்லாம் வெளியே சொல்லி அடுத்தவர்களை கஷ்டப்படுத்துவதை விடவும் நமக்குத் தேவை என்றால் நாமே அழுது விட வேண்டும். அதுவும் தனியாக யாரும் இல்லாமல் யாருடைய முகத்திலும் நம்மளுடைய கவலைகள் தென்படாமல் அழ வேண்டும் என்பதற்காக நான் இப்படி செய்வேன். என்று அதற்கு விளக்கமும் மைனா கொடுத்து இருக்கிறார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்!












Click it and Unblock the Notifications