என் மகனை விற்க நினைத்தேன்! மனைவி பிரிஞ்சு போயிட்டாங்க.. தவறான முடிவு எடுத்துட்டேன்! பிக் பாஸ் பிரதீப் உருக்கம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான பிரதீப் ஆன்டனி இப்போது தன்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் குழந்தை குறித்து வெளியிட்டு இருக்கும் நீண்ட பதிவு சோசியல் மீடியாவில் கவனம் பெற்று இருக்கிறது. பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார். கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2026 ஏப்ரலில் ஒரு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இப்போது தான் தனது மனைவியை பிரிந்து விட்டதாக உருக்கத்துடன் பகிர்ந்து இருக்கிறார்.
பிரதீப் ஆண்டனி பதிவு
அதில், நண்பர்களிடம் இந்த குழந்தையை விற்று விடலாம் என்று நிறைய முறை ஜோக்ஸ் செய்திருக்கிறேன். ஒரு குழந்தைக்கு பொறுப்பாக இருக்கும் அளவுக்கு நான் பொறுப்பில்லாதவன் என்று நினைத்தேன் பூஜா (பிரதீப் மனைவி) கர்ப்பமான போது கூட பிறக்கப் போகும் குழந்தைக்கு இடம் ரிசர்வ் பண்ணிக்கோங்க, அதற்காக லட்சக்கணக்கான பணம் கொடுங்க என்று என்னுடைய நண்பர்களிடம் ஜாலியாக கேட்டிருக்கிறேன்.
குழந்தை பிரிவு
ஆனால் குழந்தை பிறந்ததும் எல்லாமே மாறிவிட்டது. அந்த குழந்தை என்னை சந்தோஷமாக பார்த்தது. நான் தினமும் புதிதாக உணர ஆரம்பித்தேன். என் கையில் ஏதோ ஒரு உயிர் சந்தோஷமாக இருப்பது போல இருந்தது. ஆனால் இப்போது அந்த குழந்தை என்னிடம் இல்லை. ஒரு மாதமாக அந்த குழந்தையை நான் பார்க்கவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு அந்த உறவை விட்டுக் கொடுத்து விட்டேன். ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக என்னை உள்ளுக்குள் கொன்று கொண்டிருக்கிறது.
எனக்கு எப்போதுமே ஒரு குடும்பம் வேண்டும், நல்ல அப்பாவாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருந்தது. நான் வளர்ந்த சூழலுக்கு முற்றிலும் எதிராக ஒரு சூழலை என்னுடைய குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்றும் நான் ஆசைப்பட்டேன் ஆனால் நான் முற்றிலும் தோற்றுவிட்டேன். நானும் ஒரு தவறு செய்து விட்டேன்.. தவறான ஒருவரை திருமணம் செய்து விட்டேன் என்று நினைக்கிறேன்.

குடும்ப வாழ்க்கை
அதற்கு பிறகு ஒவ்வொரு நாளும் நான் ஒரு மோசமான மனிதனாக மாறிக்கொண்டே இருப்பது போல உணர்ந்தேன். என்னுடைய உலகத்தில் ஒரு பகுதியாக இல்லாத ஒருவருக்கு அருகில் தினமும் கண் விழித்தேன். என்னை புரிந்து கொள்ளவும் என்னுடைய உலகத்திற்குள் வரவும் அவர் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.
அவருக்கும் அவருடைய குடும்பம் அவருடைய வாழ்க்கை என்று தனியாக இருந்தது. ஒருவருடைய வாழ்க்கையை தினமும் நான் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு எனக்குள்ளே எழ ஆரம்பித்துவிட்டது. இன்னொருவருடன் சந்தோஷமாக எப்படி வாழ்வது என்பது எனக்கு தெரியவில்லை. தினமும் இரண்டும் முற்றிலும் மாறுபட்ட மனிதர்கள் மோதிக் கொள்வது போல இருந்தது. அவர்கள் யாராக இருக்கிறார்களோ அதற்காகவே ஒருவரை ஒருவர் வெறுப்பது போல இருந்தது. இது இருவருக்குமே நியாயம் இல்லை.
என்னுடைய முந்தைய உறவு என்னை பலவீனப்படுத்தி இருந்தது. அந்த பலவீனமான நேரத்தில் எங்கிருந்தோ கிடைத்த அன்பை பிடித்துக் கொண்டேன். அந்த அன்புக்கு இவ்வளவு காலமும் உண்மையாக இருந்தேன். ஆனால் அதற்காக நான் நிறைய விலை கொடுத்து விட்டேன். என்னுடைய பலவீனம், அன்புக்கான என்னுடைய ஏக்கம் எல்லாமே எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. இப்போது இந்த திருமணத்திலிருந்து விலக முடிவு செய்து விட்டேன்.
பேச யாரும் இல்லை
இந்த உறவுக்குள் என்னால் மூச்சு விட முடியவில்லை. அவருக்கும் இனிமேல் என் மீது காதல் இல்லை என்று நினைக்கிறேன். இன்று அந்த குழந்தையை நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அந்த குழந்தைக்கு பெயரை ஒரு பெயர் கூட வைக்க என்னால் முடியவில்லை. அது எப்போதும் என் தலையில் "IT" என்றுதான் இருந்தது. இப்போது நான் என்னுடைய உணர்வுகளை மீடியாவில் வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறேன் என்பதற்காக நிறைய பேர் என்னை அமைதியாக இருக்க சொல்லி கூப்பிடலாம். ஆனால் உண்மையில் எனக்கு பேசுவதற்கு யாருமே இல்லை.
ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொண்டு தினமும் சண்டை போடும் இரண்டு பெற்றோர்களுடன் அந்த குழந்தை இருக்க வேண்டாம். அந்த குழந்தை அவங்களுடைய அம்மாவுடன் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன். என்றென்றும் அனாதையாக இருப்பது தான் என்னுடைய விதி என்பதை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன் என பிரதீப் ஆண்டனி அந்த பதிவில் உருக்கமாக பேசி இருக்கிறார்.
யார் இந்த பிரதீப் ஆண்டனி
பிரதீப் ஆண்டனி சினிமாவில் நடிகராக வருவதற்கு முன்பே உதவி இயக்குனராக பணியாற்றியவர். அருவி, வாழ், டாடா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக டாடா படத்தில் கவினுடன் நடித்த கேரக்டர் அவரை இன்னும் அதிகமான ரசிகர்களிடம் கொண்டு சென்றது. அதற்கு பிறகு தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியிலும் அவர் ரெட்கார்ட் வாங்கிக் கொண்டு வெளியே வந்து விட்டார். அப்போது கூட அவருக்கு தான் அதிகமான சப்போர்ட் கிடைத்தது. ஆனால் இப்போது அவர் தன்னுடைய வாழ்க்கையில் தோற்றுப் போய்விட்டேன் என்று உணர்வுபூர்வமாக வெளியிட்ட பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
