பக்கத்தில் போலீஸோடு ராஜ மரியாதையுடன் அழைத்து வரப்பட்ட பிரதீப்.. முக்கிய இடத்தில் கிடைத்த கௌரவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த பிரதீப்க்கு பிரபல பள்ளி ஒன்றில் பிரம்மாண்டமாக வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை கூறி பிரதீப்பை வெளியேற்றி இருந்தாலும் அவருக்கு வெளியே ரசிகர்களின் மத்தியில் அதிகமான ஆதரவு இருக்கும் நிலையில் இப்போது பிரபல பள்ளி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பிரதீப் கலந்து கொண்டிருக்கிறார். இது ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்று வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகர் கவினின் நெருங்கிய நண்பரும் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபலமான நபர் தான் பிரதீப். அவர் ஏற்கனவே கவின் கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய நண்பராக பேமிலி ரவுண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து கவினை கன்னத்தில் ஓங்கி அறைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்
அதற்கு பிறகு டாடா, வாள் போன்ற சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த பிரதீப் மீண்டும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி இருந்தார். ஆரம்பத்தில் இருந்து ஒரு முக்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கூறி வந்திருந்த நிலையில் சில போட்டியாளர்கள் இவர் மீது சில குற்றசாட்டுகளை கமலிடம் சொல்ல அதனால் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி வைக்கப்பட்டார்.
இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் இந்த சீசனில் ஹைலைட் என்று சொல்ற மாதிரிதான் இந்த நிகழ்வு நடந்தது. அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி பிரதீப் வெளியேற்றி இருந்தாலும் ரசிகர்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பிரதீப் தான் என்று கூறி வந்தனர். அவருக்கு தங்களுடைய ஆதரவையும் அடிக்கடி தெரிவித்துவரும் நிலையில் இப்போது பிரதீப்புக்கு
பெரிய அளவில் ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதாவது ஒரு பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக. பிரதீப் அழைக்கப்பட்டு இருக்கிறார் அப்போது அங்கு எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேடையில் பிரதீப்புக்கு பொன்னாடை போட்டு நினைவு பரிசுகளும் வழங்கி இருக்கின்றனர். அதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் மாணவிகளின் முன்பு பிரதீப் கெத்தாக நின்று கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் பிக் பாஸ் மற்றும் விஜய் டிவியை கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்ன பிரதீப்புக்கு தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சீசனில் வெற்றி பெற்ற அர்ச்சனாவுக்கு கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லையே என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது. வெளியே போகும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் மாயா குரூப்பை திட்டி தீர்த்து வரும் நிலையில் பிரதீப்புக்கு இப்போது கிடைத்திருக்கும் கௌரவத்திற்கு ரசிகர்கள் மேடைக்கு இப்போது பெருமை கிடைத்திருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications