அப்போ காமெடியன் இப்போ ஹீரோ.. பிக்பாஸ் ராஜூவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.. படம் பெயர் என்ன தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ராஜு பல வருடம் கழித்து திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறார். அந்த திரைப்படத்திற்கு "பன் பட்டர் ஜாம்" என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தன்னுடைய திரைப்பட போஸ்டரை ராஜு சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
பொதுவாக சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பலர் கலந்து கொள்வதற்காக போட்டி போட்டு வருகிறார்கள். ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் பெயரும் புகழும் அடைந்து விடலாம் என்று நினைத்தாலும் ஒரு சிலர்தான் நினைத்த மாதிரி வாழ்க்கையில் வெற்றி பெற முடிகிறது. அதிலும் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல சீசன்களாகவே பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் ராஜூ .

இவர் விஜய் டிவியில் டெக்னீசியனாக வேலை பார்த்து பிறகு தொகுப்பாளராகி, நடிகராகவும் மாறி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேமராவுக்கு பின்பு பல வேலைகளை பார்த்து அந்த நிகழ்ச்சியில் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்து கடைசியாக பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கடைசியில் வெற்றியும் பெற்று பெரிய அளவில் பேசப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை சச்சரவுகளும், அங்கே கேட்டு இங்கே சொல்வதுமாக பரபரப்பு நிறைந்த நிகழ்ச்சியாக தான் இருக்கும் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் காமெடியும் களைக்கட்டும் என்று ஐந்தாவது சீசன் நிரூபித்து இருந்தது. அதில் ராஜு, பிரியங்கா, அமீர், பாவனி, தாமரை செல்வி, நிரூப் என பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியில் அந்த சீசனில் வெற்றியாளராக ராஜு அறிவிக்கப்பட்டார். இது அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராஜு பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி பெற்று இருந்ததால் இவருக்கு இனி இதைத்தொடர்ந்து பல வாய்ப்புகள் வரும் என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் விஜய் டிவியில் "ராஜு வூட்ல பார்ட்டி" என்ற ஒரு நிகழ்ச்சி மூலமாக மீண்டும் தொகுப்பாளராகவே ராஜு மாரி இருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் ஒரு முறை போட்டியாளராக கலந்து கொண்ட மன்சூர் அலிகான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெய்த்துவிட்டு நீ இந்த நிகழ்ச்சிக்கு மறுபடியும் தொகுப்பாளராக வந்திருக்கயே நீ போய் உன்னுடைய தகுதிக்கு தகுந்த மாதிரி கதாநாயகன் ஆகிற வழியை பாரு என்று திட்டி இருந்தார். அதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் இருந்து ராஜூவும் விலகி இருந்தார். அதற்கு பிறகு சில வருடங்களாக ராஜு எங்கே போனார் என்று தெரியாமல் இருந்தது.
ஆனால் இப்போது தான் "பன் பட்டர் ஜாம்" என்ற படத்தில் நடிக்கப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தோடு ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான "நாம் இருவர் நமக்கு இருவர்" சீரியலில் கத்தி கேரக்டரில் காமெடியனாக ராஜூ கலக்கி இருப்பார்.
அதுபோல பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் எப்படி இருக்க போகிறது? அந்த திரைப்படம் எப்போது வெளியாகும்? என்பது அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் ராஜுவின் திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications