பிக் பாஸ் நிகழ்ச்சியால் எனக்கு தற்கொலை எண்ணம் வந்தது.. வெளியே வந்த போட்டியாளர் பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தமிழில் தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

அதுபோல இந்தியில் நடிகர் சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தான் ஹிந்தியில் பிக் பாஸ் சீசன் 17 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இதில் கலந்துகொண்ட ஒரு போட்டியாளர் வெளியே வந்து பகீர் தகவல் சிலவற்றை பகிர்ந்திருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அதாவது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியால் தனக்கு தற்கொலை எண்ணங்கள் தோன்றியது என்றும் அதனால் தான் பட்ட வேதனை குறித்தும் அந்த வீடியோவில் அந்த போட்டியாளர் உருக்கமாக பேசியிருக்கிறார். இது குறித்து பல ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள். என்ன நடந்தது யார் அவர் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

 bigg boss season 17 excontestant Anurag Gopal says that bigg boss tortured

அந்த வகையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் பிக் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் இப்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் வேறு சில மொழிகளில் 17 சீசன்களை கடந்து இருக்கிறது. அதிலும் இந்தியில் சீசன் 17 சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்தியில் இந்த சீசனை சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் கமல் போட்டியாளர்களிடம் பெரிய அளவில் கடுமையை காட்டியதில்லை. தன்னுடைய கோபத்தையும் மறு கருத்தையும் கூட நாகரிகமாக பட்டும் படாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதிலும் அதிகபட்சமான தன்னுடைய கோபத்தை ரெட் கார்ட் கொடுத்து தான் காட்டி இருக்கிறார். ஆனால் நேரடியாக போட்டியாளர்களிடம் தன்னுடைய வெறுப்பை காட்டியதில்லை.

இது அரசியல் காரணத்துக்காக கமல் இப்படி செயல்படுகிறார் என்பதும் பலருடைய குற்ற சாட்டாக இருக்கிறது. ஆனால் இந்தியில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கான் தன்னுடைய மனதில் பட்டதை நேரடியாக போட்டியாளர்களிடம் கேட்டு விடுகிறார். அதுபோல நாகர்ஜுனாவும் கடுமையாக போட்டியாளர்களிடம் தன்னுடைய கோபத்தை காட்டி இருக்கிறார்.

இப்படியான நிலையில்தான் சமீபத்தில் ஹிந்தியில் முடிவடைந்த பிக் பாஸ் 17 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த அனுராக் கோபால் இந்த நிகழ்ச்சி தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மீதும் சல்மான்கான் மீதும் குற்றசாட்டை முன் வைத்திருக்கிறார். அதாவது அவர் அது குறித்து ஒரு youtube சேனலில் பேசியிருக்கிறார்.

அதில் நான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி ஹோட்டலுக்கு வந்து தங்கி இருந்தபோது இரண்டு நாட்களாக என்னிடம் ஃபோனை கொடுக்கவே இல்லை. அதுபோல என்னுடைய குடும்பத்தினரிடமும் என்னை பேச நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அனுமதிக்கவில்லை. அதற்கு பிறகு தான் நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவர்கள் என்னை எவ்வளவு சித்திரவதை செய்கிறார்கள் என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

அந்த ஹோட்டலில் இருந்த இரண்டு நாட்களும் எனக்கு நரக வேதனையாக இருந்தது. எனக்கு தற்கொலை எண்ணங்கள் தோன்றின. சல்மான் சார் என்னிடம் பேச விரும்பவில்லை. அதுபோல ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடும் எனக்கு எதிராக இருந்தது. அந்த நேரத்தில் நான் தனிமையை உணர்ந்தேன். பாத்ரூமில் மூலையில் உட்கார்ந்து பலமுறை நான் அழுது கொண்டே இருப்பேன்.

 bigg boss season 17 excontestant Anurag Gopal says that bigg boss tortured

பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த மற்ற போட்டியாளர்களை போல என்னுடைய குடும்பத்தை சந்திக்க எனக்கு அனுமதிக்கவில்லை. அங்கிருந்த நாட்களை என்னால் ஒருநாளும் மறக்க முடியாது என்று உருக்கமாக அந்த பேட்டியில் அனுராக் கோபால் பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+