கதர் ஆடை.. புத்தகப் பரிந்துரையில் நடக்கும் ஏமாற்று வேலை தெரியுமா? கமல் பற்றி சுசித்ரா சொன்ன பகீர்
சென்னை: விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தற்போதைய ஏழாவது சீசன் வரைக்கும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் பிரபல பாடகி சுசித்ரா நடிகர் கமல்ஹாசன் குறித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.

அதோடு ஒவ்வொரு வாரமும் கமல் புத்தக பரிந்துரை செய்வார். அது ஏமாற்று வேலை பெய்டு பிரமோஷனுக்காக கமல் செய்யும் வேலை என்று சுசித்ரா கூறி இருக்கிறார்.
பிரபல பாடகியாக இருந்து வரும் சுசித்ரா பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு சின்னத்திரையில் பிரபலமாகி இருந்தார். அதே நேரத்தில் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனலில் சில பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சமீப காலமாக அவர் அமைதியாக இருந்த நிலையில் இப்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பற்றி பல கருத்துக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். பல்வேறு youtube சேனல்களில் தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வரும் சுசித்ரா இப்போது கமல் குறித்து அடிக்கடி தாக்கி பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சுசித்ரா, நான் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இருக்கும் போது எங்களுக்கு ஒரு கதிர் ஆடை கொடுத்தார்கள். அந்த ஆடை உண்மையில் கதிரே கிடையாது. அது உள் பாவாடையில் செய்த ஆடை. அதைத்தான் ஒரு ஸ்டிக்கரை ஒட்டி எங்களுக்கு கதிர் ஆடை என்று கொடுத்தார்கள். அந்த ஆடையை குறித்து கமல்ஹாசன் மேடையில் பேசி இருந்தார்.
ஆனால் அதை எங்கே வாங்க முடியும் என்பதை பற்றி கமல் பேசவே இல்லை. அதுபோல ஒவ்வொரு வாரமும் கமல்ஹாசன் புத்தக பரிந்துரை செய்வார். அது எல்லாமே பெய்டு பிரமோஷன் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது அவருடைய அரசியல் ஆதாயத்திற்காக தான். இப்போது கூட பிரதீப் விஷயத்தில் கமல்ஹாசன் பிரதீப்பை வெளியேற்றவில்லை என்றால் தான் வெளியேறிவிடுவேன் என்று கூறியதாக சொன்னார்.
ஆனால் அப்படியெல்லாம் கண்டிப்பா கிடையாது விஜய் டிவியிடம் கெஞ்சி கூத்தாடி தான் கமல்ஹாசன் தொகுப்பாளராக இருந்து வருகிறார். கடந்த சீசனில் ஒரு சில எபிசோடுகளில் சிம்பு தொகுப்பாளராக வந்திருந்தார். அவர் தொகுப்பாளர் என்றதும் அவர் எப்படி இந்த நிகழ்ச்சியை பேலன்ஸிங் பண்ணி கொண்டு போகப் போகிறார் என்று பலர் கேள்வி கேட்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை சரியாக கொண்டு போனது சிம்பு தான்.
முகத்துக்கு நேராக போட்டியாளர்களின் குறையை டக்கென்று சொன்னார். ஆனால் கமல்ஹாசன் அப்படி செய்வதே கிடையாது. பிற மொழிகளில் தொகுப்பாளர்கள் தப்பு என்றால் தண்டனை கடுமையாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் நிக்சன் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வினுஷா தேவியை உருவ கேலி பண்ணியிருந்தார். ஆனால் அது குறித்து கமல்ஹாசன் பேசவே இல்லை. ஏன்னா காரணம் கமல்ஹாசனும் அப்படிப்பட்டவர் தான்.
அடுத்தவர்களை அவரும் இப்படித்தான் பேசுவார். அதனால்தான் கமல்ஹாசன் கேள்வி கேட்கவில்லை என்று அந்த பேட்டியில் சுசித்ரா பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு தொடர்ச்சியாக பல பேட்டிகளிலும் சுசித்ரா, கமல்ஹாசன் மாயாவிற்கு பயந்து நடக்கிறார்.
மாயாவிற்கு அதிகமாக சப்போர்ட் பண்ணுவதற்கு காரணம் மாயா ஏற்கனவே கமல்ஹாசனோடு நடித்து பழக்கமாக இருப்பதா அல்லது மாயாவை போன்ற கேரக்டரில் கமல்ஹாசனும் இருப்பதால் சப்போர்ட் பண்ணுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் தொடர்ச்சியாக மாயாவிற்கு தான் கமல்ஹாசன் சப்போர்ட் செய்கிறார். மாயாவிற்காக தான் பிரதீப்பை கூட வெளியேற்றினார் என்றும் சுசித்ரா குற்றசாட்டுகளை வைத்திருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications