பிக் பாஸ் 7: மன்னிப்பு கேட்ட அர்ச்சனாவுக்கு நிக்சன் சொன்ன சினிமா டயலாக்.. அப்போ பிரச்சனை முடியாதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் அர்ச்சனா, தினேஷ் மற்றும் விஷ்ணுவை ரோஸ்ட் செய்திருந்தார்.

எல்லா வாரங்களையும் போலவே இந்த வாரமும் மாயா கேங்குக்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசினார் என்று பலர் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் தன்னை பற்றி சுட்டி காட்டியதால் அர்ச்சனா நிக்சனிடம் மன்னிப்பு கேட்க, அதற்கு நிக்சன் சினிமா டயலாக்கை சொல்லி கெத்து காட்டி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

bigg boss tamil 7 Archana apologizes to Nixon but he retorts with a cinematic dialogue

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் கமல்ஹாசன் அர்ச்சனா, தினேஷ், மணி மற்றும் விஷ்ணு இவர்களை தங்கள் தரப்பு கருத்துக்களை சொல்ல விடாமல் அவர்கள் செய்த செயல்களை தப்பாக சுட்டி காட்டி, அதே நேரத்தில் எதிர் தரப்பில் மாயா நிக்சன் போன்றோர் செய்த செயல்கள் சரி என்று சொல்லும் விதத்தில் பேசியது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரத்தில் அர்ச்சனா மற்றும் நிக்சனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விஷ்ணுவும், நிக்சனும் பேசிக்கொண்டிருக்கும் போது அர்ச்சனா கைதட்டியதால் அர்ச்சனாவுக்கு எதிராக நிக்சன் கடும் கோபத்தில் திட்டி இருந்தார். அதுவும் அர்ச்சனாவை வாடி, போடி, நாயே கருமம், சொருகிடுவேன் என்ற வார்த்தைகளால் வசைப்பாடி இருந்தார். இதற்கு கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி கமல்ஹாசன் செய்யவில்லை. நிக்சனுக்கு எல்லோ கார்டு கொடுத்து சொருகிடுவேன் என்று சொன்னது தப்பு என்று சுட்டி காட்டிய கமல்ஹாசன் நிக்சனை இப்படி எல்லாம் தூண்டியது அர்ச்சனா தான் என்கிற குற்றச்சாட்டை வைத்திருந்தார். உப்புமா சாப்பிட்டுக் கொண்டே அடுத்தவர்களை எப்படி கோபப்படுத்துவது என்பது அர்ச்சனாவிடம் கற்றுக் கொள்ளலாம். அதோடு உப்புமா ருசியாக இருந்தால் அதை தானே சாப்பிட வேண்டும்?

எதற்காக அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிடுகிறீர்கள் என்றெல்லாம் கேட்டிருந்தார். அதோடு அர்ச்சனா சில தினங்களுக்கு முன்பு ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தவர்களிடம் முட்டையை கொடுத்துவிட்டு மூளை இல்லாதவர்களுக்கு முட்டை என்று நக்கலாக பேசியிருந்தார் இதை நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் வன்மையாக கண்டித்து இருந்தார். இதனை தொடர்ந்து நிக்சனிடம் அர்ச்சனா மன்னிப்பு கேட்டிருந்தார்.

அதற்கு நிக்சன் மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன் மன்னிக்கிறவன் பெரிய மனுஷன் என்று சினிமா டயலாக்கை பேசியிருந்தார். அப்போது அர்ச்சனாவின் முகம் டக் என்று மாறியது. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை இன்றைய முதல் ப்ரோமோவிலும் எதிரொலித்தது. இந்த வாரத்திற்கான ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. அப்போது அர்ச்சனா நிக்சனை நாமினேஷன் செய்திருந்தார். அதனால் இந்த வாரம் இனி என்ன பிரச்சனை நடக்கப் போகிறதோ என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+