நீங்க சொன்னது பிக்பாஸில் நடந்தது! ரவீந்தர் உண்டாக்கிய தாக்கம்.. ஜாக்குலினுக்கு ஜாக்பாட்: Bigg Boss 8
சென்னை: பிக்பாஸில் முதல் வாரம் முடிந்துள்ள நிலையில், 2 விதமான தாக்கம் நிகழ்ச்சியில் ஏற்படுத்தியிருக்கிறது.. இதனால் பிக்பாஸ் வீட்டில் மட்டும் பரபரப்பு இலலாமல், ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் சேர்த்தே எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை, எப்போதுமே பொதுமக்கள் ஓட்டுதான் வெற்றியாளர்களை தீர்மானித்து வருகிறது.. போட்டியாளர்களை வெளியேற்றியும் வருகிறது. ஆனால், இந்த முறை சாச்சனாவின் வெளியேற்றத்தை பிக்பாஸே தீர்மானித்துவிட்டது மிகப்பெரிய மைனஸாகிவிட்டது.

மக்களின் ஓட்டெடுப்பு இல்லாமல், போட்டியாளரை எப்படி வெளியேற்ற முடியும்? என்று கேள்விகள் துளைத்தெடுக்கவும், அடுத்த 2 நாளிலேயே சாச்சானா வீட்டுக்குள் அழைத்து வரப்பட்டார். இந்த எலிமினேஷன் எந்த அளவுக்கு பரபரப்பாக பேசப்பட்டதோ, அதே அளவுக்கு பரபரப்பை ரவீந்தரின் எலிமினேஷனும் முன்வைக்கப்பட்டது.
ரவீந்தர்: வழக்கமாக முதல்வாரமே யாருமே எலிமினேட் செய்யப்பட்டதாக பிக்பாஸ் வரலாற்றில் இல்லை. ஆனால், இந்த முறை ரவீந்தர் வெளியேற்றப்பட்டுள்ளார்.. ரவீந்தரின் ஆட்டம் பலருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி, சலசலப்பை உண்டாக்கிவிட்டது ஒரு காரணமாக அமைந்துவிட்டது என்றாலும், ரவீந்தரின் உடல்நிலையும் பிரதான காரணமாக சொல்லப்படுகிறது.
ரவீந்தருக்கு பல நேரங்களில் அசௌகரியங்கள் ஏற்பட்டதையும் ரசிகர்களால் காண முடிந்தது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது அவருக்கு ஏதாவது உபாதை ஏற்பட்டுவிட்டால் அது பிரச்சனையாகிவிடும்... அவரால் ஃபிசிக்கல் டாஸ்க் எதையும் செய்ய முடியாது. அவருக்கு மூச்சு வாங்குவதை பார்க்கவே பாவமாக உள்ளது.. எனவே, அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு, இந்த வாரமே வெளியேற்றிவிடுங்கள் என்று ரசிகர்கள் தரப்பிலிருந்தே கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு நடுவில், அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினரும் ரவீந்தரை இந்த வாரம் வெளியில் அனுப்பும்படி சேனலிடம் கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், பொதுமக்கள் ரவீந்தரின் நலனை கருதி, வேண்டுகோள் விடுத்ததை விஜய் டிவி கவனத்தில் கொண்டுள்ளது.
முதல் முறை மாற்றம்: இதுவரை இப்படியொரு கோரிக்கை பிக்பாஸ் வரலாற்றில் எழுந்ததில்லை. எனவே பொதுமக்களின் கருத்தை கொண்டே, ரவீந்திரின் நலனையும் கருத்தில் கொண்டு, இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்த ரவீந்தர், முதலாவது நபராக, முதல் வாரமே வெளியேறியிருப்பது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
அதேபோல, ஜாக்குலினை பொறுத்தவரை, பிரியங்காவின் ஸ்டேட்டர்ஜியை போலவே பிக்பாஸ் வீட்டில் முயற்சித்தார்.. வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே சிடுசிடு முகத்துடன், கடுகடு பேச்சுடன் அவர் நடந்துகொண்டதை ரசிகர்கள் யாருமே ரசிக்கவில்லை. மேலும், ஒரு வாரம் முழுவதும் அவர் சரியாக விளையாடவும் இல்லை.
வாக்குகள்: அதனால்தான், 6 பேருக்கு எதிரான வாக்குகளை ஜாக்குலின் பெற்றிருந்ததுடன், மக்களின் ஓட்டெடுப்பிலும் கடைசி இடத்தில் இருந்தாராம். "என்னிடம் எல்லாரும் வெறுப்பாக பேசினார்கள்" என்று ஜாக்குலின் சொல்ல, நீங்கள் மட்டும் ரொம்ப அன்பா பேசீட்டிங்களாமா? என்று விஜய் சேதுபதி கேட்டபோதை ஜாக்குலின் எதிர்பார்க்கவில்லை. அப்போதுதான் தான் எடுத்துவைத்துள்ள ரூட் தவறானது என்றே அவருக்கு புரிந்திருக்கும் போல.
இறுதியில், "ஆஃப்லைன்" வாக்குகளின் தயவால் இந்த வாரம் காப்பாற்றட்டுவிட்டதாக கூறுகிறார்கள். அத்துடன் ரவீந்தர் கடைசியாக தந்த நம்பிக்கை பேச்சும், ஜாக்குலினுக்கு டானிக்காக அமைந்திருக்கிறது.
பரபரப்பு வெளியேற்றம்: ஒருபுறம் ஆஃலைன் வாக்குகள், மறுபுறம் ரவீந்தரின் நம்பிக்கை வாக்குகள் இரண்டையும் இனி ஜாக்குலின் எப்படி கையாள போகிறார் என்று தெரியவில்லை. அதேசமயம், ஜாக்குலின் உள்ளிட்ட ஒன்றிரண்டு பேர் தவிர, மற்றபோட்டியாளர்கள் மீது ரவீந்தர் வைத்துவிட்டு போன விமர்சனம்தான், இனி வரும் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் என்று தெரிகிறது.. மொத்தத்தில் ரவீந்தரின் வெளியேற்றமானது, தொடர்ந்து 2வது நாளாக பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications