சௌந்தர்யா அப்படி பேசலாமா? நெஞ்சு வலியே வந்துடுச்சு! பிக் பாஸிடம் போன் பண்ணி.. ராணவ் அம்மா ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ராணவ்வின் அம்மா பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய மகன் படும் கஷ்டங்களை பார்த்து தனக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போன் செய்து என்னுடைய மகனை அனுப்பி வைக்க கேட்டேன் என்றும் எமோஷனலாக பேசியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த ராணவ் பெரிய அளவில் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் கிடையாது. ஆனால் அவர் நான்கு வருடங்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டு இருந்திருக்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

விடாப்பிடியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று வந்த ராணவ் பிக் பாஸ் போட்டியாளர்களால் ஒதுக்கப்பட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ராணவ் அறிமுகமான ஒரு வாரத்திற்குள் சௌந்தர்யாவிற்கும் ராணவிற்கும் அடிக்கடி பிரச்சினை வர தொடங்கியது.

ஆரம்பத்தில் இருந்தே சௌந்தர்யா ராணவிற்கு எதுவும் தெரியாது, கூமுட்டை, சொன்னா புரியாது என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார். சில இடங்களில் சௌந்தர்யா செய்வதை அப்படியே ராணவ் செய்து காட்டி அவரை மேலும் வெறுப்பு ஏற்றுகிறார். இவர்கள் பிரச்சனை அடிக்கடி ப்ரோமோவில் வெடிக்கிறது.

television bigg boss tamil 8 bigg boss 8 8

இந்த நிலையில் ராணவ் அம்மா யூட்யூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது தன்னுடைய மகன் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். ராணவ் பற்றி பிக் பாஸ் வீட்டிற்குள் அவனுக்கு ஒன்னும் தெரியாது, கூமுட்டை என்று சிலர் சொல்றாங்க. அதிலும் சௌந்தர்யா அடிக்கடி இந்த வார்த்தையை சொல்றாங்க.

எந்த இடத்திலாவது சௌந்தர்யா ராணவ்விடம் ஏதாவது சொல்லிக் கொடுத்தாங்களா? அல்லது ஏதாவது விஷயத்தைப் பற்றி ஒழுங்கா பேசினார்களா? எதுவுமே சரியாக பேசாத சௌந்தர்யா என்னுடைய மகனைப் பற்றி கூமுட்டை என்று சொல்லும் போது எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது.

television bigg boss tamil 8 bigg boss 8 8

அதுபோல பொம்மை டாஸ்க் நடைபெறும் போது ஜெஃப்ரி என்னுடைய மகன் கழுத்தில் முட்டியை வைத்து இடித்து இருந்தார். அந்த நேரத்தில் ராணவ்க்கு வலி தெரியவில்லை. ஆனால் பிறகு அவனுக்கு கழுத்து வலி அதிகமாக இருக்கிறது. அப்போ எனக்கு கழுத்து வலிக்கிறது என்று சொன்னான். பொதுவா அவனுக்கு என்ன நடந்தாலும் வீட்டில் எதையும் சொல்லவே மாட்டான்.

எவ்வளவு வலியானாலும் தாங்குவான். அவனால் முடியாத பட்சத்தில் தான் என்னிடம் அம்மா வலிக்கிறது என்று சொல்லி இருக்கிறான். எனக்கு அவனை பற்றி நல்லாவே தெரியும். அதனால் அவன் அந்த நிகழ்ச்சியில் எனக்கு வலிக்கிறது என்று சொன்னதை என்னால் தாங்கிக்க முடியல. அன்னைக்கு முழுக்க நான் தூங்காம இருந்ததால் எனக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது.

அப்புறம் என்னுடைய கணவரிடம் சொல்லி பிக் பாஸிடம் பேசினோம் என்னுடைய மகனை வெளியே அனுப்பிவிடுங்க என்று கேட்டோம். அதற்கு அவங்க அது முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நான்காவது சீசனில் கலந்து கொள்ள வேண்டும் என்று ராணவ் முயற்சி செய்தான். அப்போது அவனை வீடியோ எல்லாம் எடுத்தாங்க, அப்போதே ஒரு போட்டோவை வீட்டுக் கதவில் ஒட்டி பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்று எழுதி வைத்திருந்தான்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

ஆனால் சில காரணங்களால் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு ஒவ்வொரு முறையும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அவன் ஆசைப்பட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்தான். அவனை எல்லோரும் ஒதுக்கி வைக்கிறார்கள். அவன் ஒரு விஷயத்தை பேசினால் கூட யாரும் காது கொடுத்து கேட்கவில்லை. எல்லாரையும் எதிர்த்து அந்த நிகழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.

ராணவ் ரொம்ப மன தைரியம் உள்ளவன் தான். அவன் ஸ்கூல் காலேஜ் படிக்கும்போதும் அவனுக்கு இதே போல நடந்திருக்கிறது. அதை எல்லாம் தாண்டி வந்தது போல தான் தைரியமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கிறான். என் மகன் கூமுட்டை என்று சொல்கிறார்கள் ஆனால் அவன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1096 மார்க் எடுத்திருந்தான்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

சட்டம் படித்து முடித்து இருக்கிறான் ஆனால் அவனுக்கு எதுவும் தெரியாது என்று இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்ன இருந்தாலும் இப்போது மக்கள் ராணவை புரிந்து கொண்டார்கள். அது எங்களுக்கு சந்தோஷம் என்று அந்த பேட்டியில் ராணவ் அம்மா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+