ராணவை வைத்து மீண்டும் வெடித்த பூகம்பம்.. யாருக்கு வலிச்சாலும் கண்டுக்க மாட்டோம்! ஜாக்குலின் கதறல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சியில் டிசம்பர் 18ஆம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் டாஸ்க்கில் யாருக்காவது அடிபட்டால் உடனே டாஸ்கை நிறுத்த வேண்டும் என்று ரயான் சொல்ல, அதற்கு ஜாக்குலின் யாருக்கு அடிபட்டாலும் நாங்கள் கண்டுக்க மாட்டோம் என்று சொன்னது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

நேற்று நடந்த சம்பவம் பிக் பாஸ் ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது நேற்று பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்து இருந்தார். அதில் இரண்டு போட்டியாளர்களாக பல குழுக்கள் பிரிக்கப்பட்டு இருந்தனர். அதில் எந்த அணி அதிகமான கற்களை சேர்த்து வைக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் எல்லோரும் தங்களுடைய கற்களை அதிகப்படுத்துவதற்காக அடுத்தவர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டிருந்தனர்.

bigg boss tamil 8 bigg boss 8 8

அப்போது ராணவ் மற்றும் மஞ்சரி இருவரும் ஒரே அணியாக இருந்தனர். அதுபோல ஜெஃப்ரி மற்றும் பவித்ரா இருவரும் ஒரு அணியாக இருந்தனர். அதில் ராணவ் அனைவரிடமிருந்தும் கற்களை எடுத்துக்கொண்டு மஞ்சரியிடம் கொடுக்கும் போது மஞ்சரியிடம் இருந்த கற்களை அருண், ஜெஃப்ரி உட்பட பலர் வந்து பிடுங்கி கொண்டு செல்கின்றனர்.

இதனால் ராணவ் கோபமாகி பவித்ராவிடம் இருந்த கற்களை பிடுங்குவதற்காக போகிறார். அப்போது அருண், ஜெஃப்ரி, ராயன் மூன்று பேருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெறுகிறது. அதில் ஜெஃப்ரி தள்ளியதில் ராணவ் கீழே விழுந்து அவருடைய கை கிராக் ஆகி இருக்கிறது. அதனால் ராணவ் வலியில் துடித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது கூட சுற்றி இருந்த சில போட்டியாளர்கள் ராணவ் நடிக்கிறான். இதுகூட அவனுடைய ஸ்டேடர்ஜி என்று சொல்லிக் கொண்டிருந்தனர். பிறகு அருண் மற்றும் விஷால் ஓடி வந்து ராணவை மெடிக்கல் எமர்ஜென்சிக்கு அனுப்பி வைத்திருந்தனர். அங்கு அவருக்கு மூன்று வாரங்களுக்கு கையை அசைக்க கூடாது, கையில் கிராக் விழுந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.

இதனால் இன்று வெளியான ப்ரோமோவில் இதே பிரச்சனையை வைத்த விவாதம் நடந்திருக்கிறது. அதாவது நேற்று ராணவ் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட சிலர் அவன் நடிக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்களே அதை வைத்து ரியான் இன்று கேள்வி கேட்கிறார். டாஸ்க் விளையாடும் போது ஒருவருக்கு அடிபட்டுவிட்டு அவன் வலியில் துடிக்கிறான் என்றால் உடனே டாஸ்கை நிறுத்தி விடுங்கள் என்று சொல்கிறார்.

அதற்கு ஜாக்குலின் டாஸ்க் விளையாடனும்னு நினைக்கிறவங்க டாஸ்கை விளையாடுங்க. இல்லை அடிபட்டவங்களை பார்க்கணும்னு நினைக்கிறவங்க அப்படியே போங்க. அவ்வளவுதான் யார் யாருக்கு என்ன பண்ணனும்னு தோணுதோ அதை பண்ணுங்க. இதுதான் பண்ணனும்னு யாருக்கும் ரூல்ஸ் போட வேண்டாம் என்று வாக்குவாதம் செய்கிறார்.

அப்போது முத்துக்குமரன் இதில் தலையிட்டு யாருக்கு என்ன செய்யணும்னு தோணுதோ அதுபோலவே செய்வோம். இந்த டாஸ்க்கில் பலருடைய உண்மையான குணங்கள் வெளியே வரும் என்று குத்தலாக பேசுகிறார். அதற்கு முன்பு முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யாவிற்கு இடையேயும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

வழக்கம் போல சௌந்தர்யா முத்துக்குமரன் பேசுவதை அப்படியே காப்பி பண்ணி ஆட்டிட்யூட் காட்ட அதற்கு கோபமான முத்துக்குமாரன் இந்த மாதிரி ஆட்டிட்யூட் என்னிடம் காட்டாதீங்க என்று திட்டி விடுகிறார். இந்த சீசனில் எப்படியாவது டைட்டில் வெற்றி பெற வேண்டும் என்று தன்னை உள்ளிருக்கும் போட்டியாளர்கள் எல்லோருமே ஒதுக்கி வைத்தாலும் ஒவ்வொரு இடத்திலும் தனக்காக போராடி வந்த ராணவ் நேற்று அடிபட்டு துடித்தது குறித்து அவருக்கு அதிகமான பாசிட்டிவ் கூடியிருக்கிறது.

அதே நேரத்தில் ராணவ் தான் கீழே விழுந்து கையில் அடிபட்டதால் விளையாட முடியாமல் இருந்தாலும் இதற்கு காரணம் ஜெஃப்ரி மற்றும் அருண் தான் என்று எந்த இடத்திலும் அவர்களை குறை சொல்லவில்லை. இதனால் அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் இப்போதும் கூட ராணவ் நடிக்கிறார் என்று உள்ளிருக்கும் சிலர் பேசுவதையும் பார்க்க முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+