சிவப்பு கம்பளம் ஜாக்குலினுக்கு.. விஜய் சேதுபதி சொன்ன வார்த்தையால் இப்ப செம ஹேப்பி: Bigg Boss 8
சென்னை: ஜாக்குலின் மிகவும் மனக்கவலையுடன் கடந்த வாரம் முழுவதுமே காணப்பட்ட நிலையில், இந்த வாரம் ஏகப்பட்ட பாராட்டுக்கள் கிடைத்துவிட்டது. இது ஜாக்குலின் ரசிகர்களை உச்சக்கட்ட குஷியில் இறக்கிவிட்டுள்ளது.
இந்த முறை பிக் பாஸ் சீசன் ஆரம்பித்து, வீட்டிற்குள் நுழைந்த நாளிலிருந்தே ஜாக்குலின் தன்னுடைய விளையாட்டை துவங்கிவிட்டார்.. ஆனால், அதற்கேற்றபடி 10 வாரமும் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்..

இதுவரை ஜாக்குலின் அளவுக்கு வேறு யாரும் இந்த அளவுக்கு நாமினேட் செய்யப்படவில்லை. ஆனால் தொடர்ந்து 10 வாரமும் ஜாக்குலின் காப்பாற்றப்பட்டிருக்கிறார்.. இதுதான் அவரது ரசிகர்களுக்கு முதல் மகிழ்ச்சியை தந்துள்ளது.
புத்திசாலித்தனம்:
ஜாக்குலினை பொறுத்தவரை, நின்று நிதானமாக, புத்திசாலித்தனமாக விளையாடுவதாக சொல்லப்படுகிறது.. சோஷியல் மீடியாவில் ஜாக்குலினுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருந்தாலும் ஹேட்டர்ஸ்களும் உள்ளனர். தொடர்ந்து ஜாக்குலின் காப்பாற்றப்படுவது ஏன்? வழக்கம்போல விஜய் டிவி இவருக்குதான் டைட்டில் வின்னர் கார்டு தரப்போகிறதோ? என்று கேள்வி எழுப்பியும் வருகிறார்கள்.
எனினும், அடிப்படையிலேயே அனைவரிடமும் அன்பாகவும், ஆறுதல் சொல்லக்கூடியவராகவும், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று பேசிவருவதாலும், ஜாக்குலினுக்கு வாக்குகள் அதிகம் விழுவதாக சொல்கிறார்கள்.
சிவப்பு கம்பளம்:
இந்த வாரத்தில் ஜாக்குலினுக்கு சிவப்பு கம்பளம் தரப்பட்டது. அதன்படி, வீட்டிற்குள் எங்கே சென்றாலும், ஜாக்குலின் சிவப்பு கம்பளத்தில்தான் நடக்க வேண்டும்.. அவர் யாரை வேண்டுமானால் பணியில் ஈடுபட வைக்கலாம்.. அதாவது அவரே நேரடியாக எந்த வேலையையும் செய்ய தேவையில்லை..
ஆனால், தனக்கு மட்டும் சிவப்பு கம்பளமா? என்று ஜாக்குலின் சோர்ந்துபோனார்.. ஒருவேளை தான் ஏதாவது தவறாக விளையாடி விட்டேனா? அல்லது மக்கள் பார்வைக்கு தவறாக புரொஜக்ட் ஆகிவிட்டோமா? என்ற குழப்பத்திற்கும் ஆளானார்... 2 நாட்களுக்கு முன்புகூட முத்துக்குமரனிடம் இதைபற்றி சொல்லி கண்ணீருடன் வருத்தப்பட்டு கொண்டிருநதார்.
ஜாக்குலின்:
இந்த வாரம் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை துவங்கிதுமே, ஜாக்குலினின் பெயர் சொல்லி அழைத்தார். அப்போது பார்வையாளர்களில் பலர் திடீரென ஆரவாரம் செய்து, கைகளை தட்டி வரவேற்பு தெரிவித்தனர். உடனே விஜய் சேதுபதி, ஜாக்குலின் ரசிகர்கள் இங்கே எத்தனை பேர் வந்திருக்கீங்க? என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
பிறகு ஜாக்குலினிடம், "சிவப்பு கம்பளம் தரப்பட்டது உங்களுக்கு மட்டும்தான்.. அப்படியிருக்கும்போது அது எப்படி தண்டனையாகும்? இதற்கு முன்பு சிவப்பு கம்பளம் யாருக்கெல்லாம் தரப்பட்டதோ? என்று நினைத்து உங்களுக்கு சிவப்பு கம்பளம் கொடுத்ததற்கு வருத்தப்படுகிறீர்கள்? மற்றவர்கள் உங்களை ஊக்கமாகவே இங்கு எடுத்து கொள்கிறார்கள். தேவையில்லாத விஷயங்களுக்கு உடைந்துவிடாதீர்கள்... நீங்க நல்லா விளையாடறீங்க.. இப்படியே விளையாடுங்க" என்றார்.
அதிர்ச்சி:
இதைக்கேட்டதுமே ஜாக்குலின் முகம் பளிச்சென மகிழ்ச்சியில் பிரகாசித்தது.. ஆனால், ஜாக்குலினுக்கு பார்வையாளர்களிடமிருந்து கிடைத்த கைதட்டலை கண்டு, போட்டியாளர்கள்தான் ஒருநிமிடம் ஆடிப்போனார்கள்..!!!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications