விஜய் சேதுபதி ஏன் ஓரவஞ்சனை காட்டுறாரு? அந்த போட்டியாளருக்கு மட்டும் சலுகையா? ராணவ் அப்பா வருத்தம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சில போட்டியாளர்களுக்கு ஓரவஞ்சனை காட்டுகிறார் என்று ராணவ் அப்பா கராத்தே சந்துரு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். அதோடு தன்னுடைய மகன் பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் அதை பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி பற்றிய பேச்சு தான் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இதுவரைக்கும் கமல்ஹாசன் தொகுத்து வந்த வழங்கி வந்த நிலையில் அவர் திடீரென்று விலகியதால் அவருக்கு அடுத்ததாக விஜய் சேதுபதி, சிம்பு, ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா போன்ற பலருடைய பெயர் அடிபட்டது.

அதில் விஜய் சேதுபதி டிக் ஆனார். ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு விஜய் சேதுபதி குறித்து எவ்வளவு பாராட்டுக்கள் வருகிறதோ அதேபோல நெகட்டிவ் வருகிறது. விஜய் சேதுபதி கமல்ஹாசனை போலவும் அல்லது மற்ற எந்த தொகுப்பாளர் போலவோ இல்லாமல் தன்னுடைய இயல்பில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அதோடு போட்டியாளர்களிடம் ரசிகர்கள் என்ன கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை அப்படியே கேட்டு விடுகிறார். ஆனாலும் சில இடத்தில் அவர் சொதப்புவதாக ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த நிலையில் தான் பிக் பாஸ் போட்டியாளராக இருக்கும் ராணவ் விஜய் சேதுபதி குறித்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.
நேற்று முன்தினம் நடந்த டாஸ்க்கில் ராணவ் கீழே விழுந்ததால் அவருடைய கைப்பகுதியில் அடிப்பட்டு இருக்கிறது. அதனால் அவர் மூன்று வாரங்களுக்கு எந்த வேலையும் செய்யக்கூடாது என்று டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதனால் பிக்பாஸ் ராணவிடம் உங்களால் தொடர்ந்து விளையாட முடியுமா? என்று கேட்ட போதுகூட என்னால் ஒரு கையை வைத்து விளையாட முடியும் என்று கான்பிடென்ட் ஆக சொல்லி இருந்தார்.

அதனால் இப்ப வரைக்கும் நிகழ்ச்சியில் தொடர்ந்து கொண்டு இருந்து கொண்டிருக்கிறார். அந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு அடிபட்டது தெரிந்ததும் வருத்தத்தில் ராணவ் தந்தை பேசுகையில் ராணவ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனால் எங்க வீட்டில் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இருந்து அந்த நிகழ்ச்சியை பார்க்கலாம் என்று நினைத்தோம்.
ஆனால் உள்ளே நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது எங்களுக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஒரு சிலர் ராணவை வேண்டுமென்றே ஒதுக்கி வைக்கிறார்கள். எந்த இடத்திலும் ராணவ்வை அசிங்கப்படுத்துகிறார்கள். அதை பார்க்கும் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது.
அதுபோல போட்டியாளர்கள் தான் இப்படி நடந்து கொள்கிறார்களே வார இறுதியிலாவது விஜய் சேதுபதி இதை கேள்வி கேட்பார் என்று நினைத்தால் அவரும் ராணவை பேச விடாமல் தடுக்கிறார். அதுபோல சில போட்டியாளர்களின் குடும்ப பின்புலத்தை வைத்து அவர்களிடம் ரொம்பவும் இனிமையாக நடந்து கொள்கிறார். சிலர் செய்யும் தவறுகளை அந்த இடத்தில் விஜய் சேதுபதி தட்டி கேட்காமல் போய்விடுகிறார்.

அதனால் அப்படிப்பட்ட போட்டியாளர்கள் தொடர்ந்து தப்பு செய்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதற்கு காரணம் ஜெஃப்ரி என்று தெரிகிறது. ஜெஃப்ரி பொம்மை டாஸ்க்கில் விளையாடும் போது ராணவ் கழுத்தில் முட்டியை வைத்து ஓங்கி குத்தி இருப்பார். ஆனால் ராணவ் விளையாட்டு தானே என்று ஸ்போட்டிவ்வாக எடுத்துக் கொண்டார். ஆனாலும் தனக்கு கழுத்து வலிக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது கூட அது பற்றி விஜய் சேதுபதி விசாரிக்கவில்லை. இதுகுறித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். அந்தப் போட்டியாளர் தப்பு செய்யும் போது ஆப்போதே விஜய் சேதுபதி வார்னிங் கொடுத்து இருந்தால் இப்போது டாஸ்க்கில் ராணவிற்க்கு இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்காது. ராணவிற்கும் அடிபட்டதை விடவும் அவர் வலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட அவன் நடிக்கிறார் என்று ஜெஃப்ரி, அன்ஷிதா, சௌந்தர்யா போன்றோர் ஏளனம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவருடைய தந்தை தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications