பிக் பாஸ்: ஒன்றரை மணி நேரமாக ரஞ்சித்தை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி! ஆனால் கடைசியில் நடந்த அந்த சம்பவம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் தலைவராக இருந்த ரஞ்சித்தை 1:30 மணி நேரம் ஆக விஜய் சேதுபதி கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்திருக்கிறார். ஆனால் கடைசியில் எதிர்பாராத சம்பவம் நடந்து இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இருக்கும் நிலையில் கடந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை விஜய் சேதுபதி விசாரித்து வருகிறார். அதில் கடந்த வாரத்தில் ரஞ்சித்தின் கேப்டன்சி எப்படி இருந்தது என்று உள்ளிருக்கும் போட்டியாளர்களிடம் கேட்க எல்லோரும் கேப்டன் என்று ஒருவர் இருந்ததே தெரியவில்லை, அவர் தனக்கு கொடுத்த முட்டையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில்தான் கவனமாக இருந்தார்.

அன்பால் இந்த வீட்டை ஆளலாம் என்று நினைத்தார். ஆனால் வீட்டிற்குள் பல பிரச்சனைகள் நடந்த போது அவர் வாய் பேசவில்லை. எந்த பிரச்சனைகளிலும் ஒரு தலைவராக அவர் அதை தீர்த்து வைக்கவில்லை.
கேப்டன் எங்கே இருக்கிறார் என்று தேட வேண்டியது இருந்தது என்று சொன்னதை கேட்டு விஜய் சேதுபதி ரஞ்சித்திடம் உங்களுடைய கேப்டன்சி ஏன் எப்படி இருந்தது? உங்களுக்கு கோபம் வரும் நீங்கள் கோபத்தில் சௌந்தர்யாவை பார்த்து ஒரு இடத்தில் சௌந்தர்யா முகத்தில் பேட்சை வைத்து தைக்க வேண்டும் என்று சொன்னீர்கள்.
இவ்வளவு கோபப்படும் நீங்கள் எதற்காக உள்ளே பிரச்சனைகள் நடக்கும் போது உங்களுடைய கோபத்தை காட்டவில்லை.. எதை நிரூபிக்க நீங்கள் இந்த வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்க அதற்கு ரஞ்சித் ஒவ்வொரு முறையும் சொல்வது போலவே நான் என்னுடைய தப்பை புரிந்து கொண்டேன், இனி திருத்திக் கொள்கிறேன் என்று சொல்லி நழுவ பார்க்க, அதற்கு விடாமல் விஜய் சேதுபதி நான் உங்களிடமிருந்து நீங்கள் என்ன நினைக்கிறீங்க என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் சொல்லுங்க சொல்லுங்க என்று கோர்ட்டில் வழக்கறிஞர் கேள்வி கேட்பது போல கேள்வி கேட்கிறார்.
அதற்கு கண்கலங்கியபடி இருந்த ரஞ்சித்தை பார்க்கும்போது பரிதாபமாகத்தான் இருந்தது ஒருவேளை இவர் உண்மையிலேயே இப்படி தானா? ஏதாவது பிரச்சனை நடந்தால் இதில் போய் நாம் கருத்து சொல்லிவிட்டால் நம்முடைய பெயர்கெட்டு போய்விடுவோமோ நம்மை யாராவது ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று பயந்தே ஒதுங்கி நின்றாரா?
இதுதான் இவருடைய இயல்பான கேரக்டரா? என்று பார்க்கும் ரசிகர்களை பீல் பண்ணும் வகையில் தான் நின்று கொண்டிருந்தார். அப்போது விஜய் சேதுபதி நான் இப்போது மேடைக்கு வந்து ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது, ஆனால் நான் நினைத்த வார்த்தை இன்னும் உங்கள் வாயிலிருந்து வரவில்லை நீங்கள் உண்மையில் எதை நினைத்து இந்த வீட்டிற்கு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டால் நான் பிரேக் விட்டு விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு ரஞ்சித் நான் வெற்றியாளராக வேண்டும் என்று தான் வந்தேன் என்று சொல்ல, வெற்றியாளர் என்றால் போட்டி போடணுமே நீங்கள் ஏன் போட்டி போடவில்லை என்று மீண்டும் கேள்வி கேட்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்று கோபத்தில் விஜய் சேதுபதி பிரேக் விட்டுவிட்டு போய்விடுகிறார்.
அதற்கு பிறகு ரஞ்சித் விஜய் சேதுபதி குறித்து ராணவ்விடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜய் சேதுபதி எனக்கு மோட்டிவேஷன் தருகிறார். நான் எல்லா இடத்திலும் திருத்திக்கிறேன் என்று சொல்வது தப்பா வெளியே போய் விடும் என்று நினைக்கிறார். அதற்காகத்தான் எனக்கு அட்வைஸ் செய்கிறார் என்று பாசிட்டிவாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் ஜாக்குலின் ஒரு விஷயத்தை போட்டு உடைக்கிறார். அதாவது கடந்த வாரத்தில் எல்லோருக்கும் ஒரு பட்டம் கொடுக்கப்பட்டபோது தனக்கு கொடுத்த நடிகை என்ற பட்டம் யார் சொல்லி இருப்பார்கள் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது ரஞ்சித் சார் பவித்ரா மற்றும் ஜெஃப்ரி என்று கண்ணை காட்டி சொல்லிவிட்டு போனார்.
இப்படித்தான் எந்த இடத்தில் அவர் விளையாடனுமோ அங்கு விளையாடி கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அடுத்தவர்கள் தன்னை தப்பாக நினைத்து விடக்கூடாது என்று வெளியில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று ரகசியத்தை உடைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications