Bigg Boss : 90 நாட்களுக்கு ஒரு பைசா கூட இல்ல.. என் தரப்பு நியாயத்தை கேட்கல! பார்வதியின் வீடியோ!
சென்னை: விஜய் டிவி பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் நேற்று நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கம்ருதீன் மற்றும் பார்வதி இருவருக்கும் "ரெட் கார்டு" வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நிகழ்வு, பிக் பாஸ் வீட்டில் எடுக்கப்படும் முடிவுகள் எவ்வளவு நியாயமானவை என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.
90 நாட்களுக்கும் மேலாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த இந்த இரு போட்டியாளர்களுக்கும், நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு எந்தவிதமான சம்பளமும் கிடைக்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அதோடு, நீண்ட நாட்களாக உருவாக்கியிருந்த இமேஜ் ஒரே நாளில் சர்ச்சையாக மாறியிருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சீசன் முழுவதும் பார்வதி பல டாஸ்க்களில் கடுமையாக உழைத்து விளையாடியவர் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், இறுதிக்கட்டத்தில் அவர் செய்த செயல்கள், அதுவரை இருந்த நல்ல பெயரை முற்றிலும் பாதித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதற்கு எதிர்வினையாக, பார்வதியின் ரசிகர்கள் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்து வருகிறார்கள். "சூழ்நிலை அவரை அந்த நிலைக்கு தள்ளியது", "பிக் பாஸ் திட்டமிட்டு இப்படிப்பட்ட முடிவை எடுத்துள்ளது" என அவர்கள் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், சான்ட்ரா மீதும் எதிர்மறை விமர்சனங்களும் வலுப்பெற்றுள்ளன. "பார்வதி மற்றும் கம்ருதீன் தவறு செய்திருந்தாலும் அதற்கு மன்னிப்பு கேட்கும் போதே அழுது நடித்து விட்டார்", "இதுவும் ரியாலிட்டி ஷோவின் ஒரு நாடகமே" என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பார்வதி பேசியதாக கூறப்படும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "நேற்று நடந்த விஷயங்களை எல்லோரும் பார்த்திருப்பீங்க. ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பெரிய முடிவு எடுக்கும்போது, சம்பந்தப்பட்டவர்களிடம் பேச வேண்டும். ஆனால் என்னிடம் என்ன நடந்தது என்று யாரும் பேசவில்லை.
பொதுவாக ரியாலிட்டி ஷோக்களில் அவர்களுக்கு எதை காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைத்தான் வெளியே காட்டுவார்கள். உள்ளே நடந்த விஷயங்கள் இதைவிட அதிகமாக அதிர்ச்சியாக இருந்திருக்கும்" என்று அவர் பேசி இருக்கிறார்.
மேலும், "இந்த விஷயங்களை பற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய குடும்பமே தைரியமாக இருக்க சொல்லியிருக்கிறது. எனக்கு ஆதரவாக நின்ற ரசிகர்களுக்கு நன்றி" எனவும் அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.
ஆனால், இந்த வீடியோ குறித்து தற்போது பெரிய குழப்பம் நிலவி வருகிறது. இது பிக் பாஸ் சீசன் 9ல் ரெக்கார்டு வாங்கி வெளியேற்றப்பட்ட பிறகு பார்வதி பேசியதா? அல்லது அவர் முன்பு கலந்து கொண்ட சர்வைவர் ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தபோது பேசிய பழைய வீடியோவா? என்பது தெளிவாக தெரியவில்லை.
இருப்பினும், இந்த வீடியோ "இப்போதைய நிகழ்வுக்குப் பிறகு தான் பேசியது" என்று கூறி சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருவதால், சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால், உண்மையில் பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது, எடிட்டிங்கில் எவ்வளவு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கான விளக்கம் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. பார்வதி நேரடியாக விளக்கம் அளித்தால் மட்டுமே, இந்த விவகாரத்தின் உண்மை நிலை என்ன என்பது தெரியவரும்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications