Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் பார்வதிக்கு நடுரோட்டில் நடந்த சம்பவம்.. சுற்றி வளைத்த ரசிகர்கள்.. இது எங்க போய் முடிய போகுதோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மூலம் கவனம் பெற்ற பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்று ஃபேன்ஸ் மீட்டிங் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, பார்வதி தனது அம்மாவுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சி முடிந்து சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பார்வதியின் காரை, சில ரசிகர்கள் கூட்டமாக தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் சங்கடமடைந்த பார்வதி, ஒரு கட்டத்தில் காரின் கண்ணாடியை இறக்கி,"எதற்காக இப்படி தொடர்ந்து வரீங்க?" என்று சத்தமாக கேட்டுள்ளார்.

அதற்கு ரசிகர்கள், "உங்களோட ஒரு போட்டோ எடுக்கணும்னு தான் ஃபாலோ பண்ணுறோம்" என்று கூறியதும், பார்வதி உடனடியாக தன்னுடைய கோபத்தை மாற்றி, சிரித்தபடியே "ஓகே, பாய் பாய்" என்று டாட்டா காட்டியுள்ளார்.

Bigg Boss vj Parvathi vijay tv

ரசிகைகளின் பேச்சு

அந்த நேரத்தில் சில ரசிகைகள், "நீங்க கம்ருதீனை விட்டுடாதீங்க, உங்களுக்கு ஏத்த ஜோடி அவர்தான், அவர் பாவம்" என்று சொல்ல, பார்வதி சிரித்தபடியே அதை ஏற்றுக்கொண்டார்.

இதற்குப் பிறகு, பார்வதியின் அம்மாவிடம், "நீங்க கம்ருதீனையும் பார்வதியையும் சேர்த்து வச்சிருங்க" என்று ரசிகைகள் சொல்ல, அதற்கு பார்வதியின் அம்மாவும் சிரித்தபடியே தலை அசைத்துள்ளார். பின்னர் ரசிகர்களுக்கு மீண்டும் டாட்டா காட்டி, பார்வதி அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

இந்த முழு சம்பவமும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆபத்தான மனநிலை

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, பலரும் ரசிகர்களின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பொதுவாகவே சினிமா நடிகர்கள் அல்லது பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்கள் பின்னால் ரோட்டில் கூட்டமாக பின்தொடர்ந்து செல்வது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று.

ஒரு வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் நபரை குறிவைத்து, செல்போனை நீட்டி வீடியோ எடுக்க வேண்டும், போட்டோ எடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து செல்லும் மனநிலை, விபத்துகளை வரவேற்கும் செயல் தான். எதிரே வரும் வாகனங்களை கவனிக்காமல், முன் செல்லும் சாலையை புறக்கணித்து, ஒரே ஒரு செலிபிரிட்டி மீது கவனம் செலுத்தும் போது, சாலையில் பெரிய விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒருவர் தன்னுடைய வாகனத்தை சரியாக ஓட்டிக் கொண்டிருந்தாலும், இவர்களை பின்தொடர்வதில் மட்டுமே கவனம் செலுத்தும் ரசிகர்களால், மற்ற பொதுமக்களுக்கு தேவையற்ற தொந்தரவுகள் தான் ஏற்படும்.

இதெல்லாம் இனி நடக்கக்கூடாது

பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்கள் என்றாலே, அவர்களும் சாதாரண மனிதர்கள் தான். அவர்களுக்கும் பாதுகாப்பு, தனிப்பட்ட இடம், அமைதியாக பயணம் செய்யும் உரிமை இருக்கிறது. ரசிகர் பாசம் என்ற பெயரில், சாலையில் உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை தாக்கி கடும் விமர்சனங்களையும், எச்சரிக்கைகளையும் பெற்ற ஒருவர் மீது கூட இவ்வளவு அளவுக்கு கண்மூடிய பாசம் காட்டப்படுகிறது என்றால், "யாருக்காவது காயம் ஏற்பட்டாலும் பரவாயில்லை" என்ற மனநிலையா ரசிகர்களுக்கு இருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது.

சமூக பொறுப்பு அவசியம்

ரசிகர்கள் தங்கள் விருப்பமான பிரபலங்களை நேசிப்பது தவறில்லை. ஆனால் அந்த நேசம், மற்றவர்களின் உயிருக்கும், சாலையில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் ஆபத்தாக மாறக் கூடாது. இந்த சம்பவம், ரசிகர்கள் தங்கள் நடத்தையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.

பார்வதியின் வீடியோ தற்போது வைரலாக இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி மீண்டும் நடைபெறக்கூடாது என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+