பிக் பாஸ் வீட்டிற்குள் நள்ளிரவு நடந்த சம்பவம்! திடீரென வெளியேற்றப்படும் போட்டியாளர்! ஒரு வாரத்திற்குள் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி-யின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பித்த ஐந்து நாளில், ரசிகர்கள் 'தலை சுத்தும்' அளவுக்கு டிராமாக்கள் அரங்கேறி வருகிறது! பிக் பாஸ் என்றாலே பஞ்சாயத்து, சண்டை, சச்சரவுதான் தெரியும், ஆனா, வீட்டுக்குள்ளே ஒரு போட்டியாளர் கதறி அழுது, 'இங்கேயும் நடிக்கிறீங்களா?'னு கேள்வி எழுப்பியதுதான் இப்போ ஹாட் டாபிக்!

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

பிக் பாஸ் பஞ்சாயத்து

நேற்றைய ஒரு மணி நேர எபிசோடு முடிவில் நந்தினி அழுதுகொண்டிருப்பதை ரசிகர்கள் பார்த்திருப்பீர்கள். இதற்கான காரணம், நள்ளிரவில் நடந்த ஒரு "நகைச்சுவை" டிராமா தான்!

நள்ளிரவு நேரத்தில், வீட்டுக்கு வெளியே சபரி, உட்படப் பல போட்டியாளர்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, 'ஒருவேளை சபரி இறந்து போய்விட்டால், உள்ளிருக்கும் போட்டியாளர்களின் மனநிலை எப்படி இருக்கும்?' என்று கேட்டு, எல்லோரும் சும்மா ஜாலியாக நடித்துக் காட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அதுல, எஃப்.ஜே. என்பவர், சபரியின் உடல் மீது ஏறி நின்று பாட்டுப் பாடி அஞ்சலி செலுத்துவது போலக் கிண்டல் செய்திருக்கிறார். அப்போது, பிக் பாஸ் வீட்டுக்குள்ளே எப்போதும் சிரித்துகொண்டே இருக்கும் நம்ம நந்தினியைப் பற்றிச் சொல்ல வந்தபோது, "அண்ணா, நீங்க இறந்துட்டீங்களா?" என்று அப்போதும் அவர் ஜாலியாகச் சிரித்துக்கொண்டிருப்பார்; "பிறகு நீங்க சாப்பிடுறீங்களா?" என்று வந்து கேட்பார், அவ்வளவுதான்!" என்று சொல்லிச் சிரித்திருக்கிறார்கள்.

நந்தினியின் கண்ணீர் சீன்

இந்தக் கிண்டலைக் கேட்ட நந்தினி, அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், உடனே பிக் பாஸ் வீட்டுக்குள்ளே சென்று கதறி அழத் தொடங்கிவிட்டார்! மற்ற போட்டியாளர்கள் பயந்து போய், "என்ன ஆச்சு?" என்று கேட்க, நந்தினியின் குமுறல் ஆரம்பமானது!

"நான் வெளியிலதான் எல்லோரும் என்னை ஏமாத்துறாங்கன்னு நினைச்சேன். பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயும் நீங்க எல்லாரும் நடிச்சிட்டு இருக்கீங்க! உங்க எல்லாரையும் நான் என் குடும்பமா நினைச்சேன், ஆனா என் முகத்துக்கு நேரா ஒன்னு பேசுறீங்க, நான் இல்லாத போது இன்னொன்னு பேசுறீங்க" என்று கோபத்துடன் அழுதுள்ளார்.

இதோடு விடாமல், "நான் இந்த வீட்டுக்குள் சிரிச்சுக்கிட்டே இருக்குறது உங்களுக்கு எல்லாருக்கும் பொறாமையா இருக்கு! நான் சிரிக்கிறேன்னு எல்லாரும் என்னைக் கலாய்க்கிறீங்க!" என்று மற்ற ஹவுஸ்மேட்ஸ்களையும் 'சென்டிமென்ட் கிட்னி' செய்துவிட்டார்.

நந்தினியின் இந்தக் கதறல், ஒரு கட்டத்தில் எல்லோரும் பயப்படும் அளவுக்குப் போனதாம்! "நான் கும்பிடுற, சாமி! நிஜமாவே இருந்தா இன்னைக்கு என்னை வெளிய கூட்டிட்டுப் போயிடுங்க! நான் இந்த வீட்டை விட்டுப் போறேன்!" என்று அவர் அழுததைப் பார்த்து, மற்றவர்கள் அவரைச் சமாதானப்படுத்த முயன்றனர்.

ஆறுதல் சொன்ன கனி

நந்தினியின் அழுகை எந்தச் சமாதானத்துக்கும் கட்டுப்படாத நிலையில், சக போட்டியாளர் கனி மட்டும் அவரிடம் சென்று ஆசுவாசப்படுத்தி, ஆறுதல் சொல்லித் தூங்க வைத்திருக்கிறார். இந்தச் சம்பவம்தான் இப்போது பிக் பாஸ் வீட்டின் பரபரப்புச் செய்தியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சினு வந்தாலே சர்ச்சை, டிராமா, அழுகை இருக்கும்னு தெரிஞ்சுதான் எல்லோரும் வர்றாங்க. ஆனா, மூணே நாளில், இரண்டாவது முறையாக நந்தினி இப்படி அழுது, 'குடும்ப டிராமா' நடத்துறது, 'இவர் பிக் பாஸ்-ல தாக்குப்பிடிப்பாரா?' என்ற கேள்வியைப் பலரையும் கேட்க வைத்திருக்கிறது.

இனிவரும் நாட்களில், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், நந்தினியை எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

நந்தினியின் இந்தச் சீக்கிரமான அழுகை, அவருக்கு அனுதாப ஓட்டுகளைப் பெற்றுத் தருமா? இல்லைன்னா, 'ஓவர் டிராமா' என்று ரசிகர்கள் கிண்டல் செய்வார்களா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+