பார்வதி, கம்ருதீன்க்கு ரெட் கார்ட் கொடுத்த விஜய் சேதுபதி.. 1 மணிக்கு நடந்த சம்பவம்! பாதி வெளியே காட்டல! பிரஜன் ஆதங்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் 2026 ஜனவரி 3ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தது மாதிரியே விஜய் சேதுபதி பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து எவிட்ஷன் செய்திருக்கிறார். அதே நேரத்தில் இந்த சம்பவம் குறித்து உள்ளே நடந்த ரகசியங்களை பிரஜன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 80 நாட்களில் கடந்துவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவடையை இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவுகளோடு இருந்து வந்த இந்த நிகழ்ச்சியில் நேற்று நடந்த சம்பவம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியை இதுவரைக்கும் பார்க்காதவர்கள் கூட நேற்று நடந்த நிகழ்வை பார்த்து ஐயோ இப்படி எல்லாம் நடக்கவே கூடாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கூட இந்த நிகழ்ச்சிகள் நடந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
அதாவது நேற்று நடந்த டாஸ்க்கில் சான்ட்ராவை பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் மிதித்து காரில் இருந்து வெளியே தள்ளி விட்டிருந்தனர். அதோடு ஆபாச வார்த்தைகளையும் பேசி இருந்தனர். பிறகு பெரிய சண்டை நடந்தது. சான்ட்ராவை பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த மற்ற ஆறு போட்டியாளர்களும் குரல் கொடுத்திருந்தனர்.
ஆனாலும் பார்வதியும் கம்ருதீன் இருவரும் தொடர்ந்து சான்ட்ராவை மோசமாக பேசி வந்தனர். அதோடு தட்டி கேட்டவர்களையும் அடித்து விடுவேன், கொலை செய்து விடுவேன் என்பது போல மிரட்டி கொண்டு இருந்தனர். இதனால் இவர்கள் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இது பற்றிய விவாதத்தையே விஜய் சேதுபதி எடுத்திருந்தார். இரண்டாவது ப்ரோமோவில் கம்ருதீன் மற்றும் பார்வதி இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்திருக்கிறார். அதை அங்கிருந்தஅனைவரும் கொண்டாடியிருக்கின்றனர். ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ப்ரோமோவிற்கு விஜய் டிவி பிரபலங்கள் பலரும் ஃபயர் விட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பிரஜன் செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். அப்போது அவர் பேசும்போது சான்ட்ராவிற்கு நடந்த சம்பவம் எனக்கு இரவு ஒரு மணிக்கு தெரியவந்தது. சில ஷோஸ் மூலமாக எனக்கு இந்த தகவல் வந்தது. உடனே நான் அதிர்ச்சியாகி சேனல் தரப்பினரிடம் பேசினேன்.
அவர்கள் சான்ட்ரா சேஃப்பாக இருக்கிறார் என்று சொன்னாங்க. ஆனாலும் எனக்கு ரொம்ப பயமாக இருந்தது. ஆபாசமான வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி இருக்காங்க. இந்த விஷயத்தை நான் எப்போ உடனே ரியாக் செய்ய முடியாது. அதனால் தான் அமைதியாக இருக்கிறேன். நான் சான்ட்ராவின் கணவராக மட்டுமல்ல அந்த நிகழ்ச்சியின் ஒரு கண்டஸ்டண்டாக இருப்பதால் என்னால் உடனே ரியாக்ட் செய்ய முடியவில்லை.
இந்த பிரச்சனை வெளியே டெலிகாஸ்ட் ஆன பிறகு தான் என்னால் பேச முடியும். அதுதான் எங்களுடைய காண்ட்ராக்ட் என்று பேசியிருக்கிறார். இதனால் இன்று இந்த எபிசோடு டெலிகாஸ்ட் செய்த பிறகு உள்ள என்ன நடந்தது என்று சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளே நடந்த சண்டையில் பாதி விஷயங்கள் தான் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்று பிரஜன் சொல்லி இருக்கிறார். இதனால் இந்த பிரச்சனை பற்றி நாளை முழுமையாக தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications