" ஜாங்கிரி” மதுமிதாவிற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த மகனா இது? மகனைப் பற்றி வெளியிட்ட பதிவு
நடிகை மதுமிதா தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இல் போட்டியாளராக இருந்த நடிகை மதுமிதா தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை மதுமிதாவிற்கு பெரிய அளவில் பிரபலம் கொடுத்தது ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் வரும் ஜாங்கிரி,அடை தேனடை என்ற காமெடி தான்.
திருமணம் முடிந்து தனக்கு மூன்று வருடங்களுக்குப் பிறகு பிறந்த மகனின் புகைப்படத்தை முதல் முதலாக மதுமிதா வெளியிட்டு இருக்க அதற்கு தற்போது அதிகமான லைக்குகள் குவிந்து வருகிறது.

பிரபலம் கொடுத்த திரைப்படம்
தமிழ் சினிமாவில் பெண் காமெடி நடிகைகள் மிகவும் குறைவுதான். அதில் ஒரு சிலர் மட்டும்தான் வெள்ளி திரையில் தொடர்ந்து ஜொலித்து வருகிறார்கள். அதுபோல ஒரு பிரபலமான நடிகையாக மதுமிதா இருந்து வருகிறார். இவருடைய பெயரை மதுமிதா என்று சொல்வதை விட ஜாங்கிரி, தேனடை என்று சொன்னால் பலருக்கும் தெரிந்து விடும். அந்த அளவிற்கு ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் சந்தானத்தோடு ஜோடியாக இவர் நடித்து அசத்தியிருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் இவரை ஜாங்கிரி என்றும் தேனடை என்றும் தான் கூப்பிடுவார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் மதுமிதாவிற்கு ஜாங்கிரி மதுமிதா என்று பெயர் வந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
அது மட்டுமல்லாமல் சின்ன திரையில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் இரண்டிலும் இவர் நடித்திருந்தார். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3யில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து இவரும் ஒரு முக்கியமான போட்டியாளராக இருந்து வந்தார். ஆனால் ஆரம்பத்திலிருந்து இவருக்கும் மற்ற ஹவுஸ் மேட்டுகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் சண்டை வந்து கொண்டே இருந்தது.

திருமணம்
போட்டியாளர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தன்னை ராகிங் செய்து துன்புறுத்துகிறார்கள் என்று தன்னுடைய கையில் கிழித்துக்கொண்டு போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அதற்குப் பிறகும் மதுமிதா பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் மோசஸ் என்பவரோடு 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் இவருக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது கடந்த மே மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது.

செல்ல மகன் புகைப்படம்
அப்போது தனது மகனுக்கு புத்தர் போல உடை அணிவித்து போட்டோ சூட் நடத்தி இருந்தார். அது மட்டுமல்லாமல் குழந்தை பிறந்த சில மாதங்களில் சுதந்திர தினம் வந்ததால் அந்த நேரத்திலும் மூவர்ணக் கொடி போல பச்சை, வெள்ளை, ஆரஞ்சு நிற உடைகள் அணிந்து தேசிய கொடியில் இருக்கும் மூவரணத்தைப் போல மூன்று வண்ணத்தில் குழந்தைகளுக்கு உடை அணிவித்து அந்த போட்டோ சூட்டை நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து தற்போதும் தன்னுடைய மகனின் புகைப்படத்தை மதுமிதா வெளியிட, இவருடைய மகன் அட நல்ல வளர்ந்துட்டாரே என்று பலர் வியப்போடு குழந்தைக்கு ஆசீர்வாதம் கூறி வருகிறார்கள்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications