புது கார் வாங்கிய அமுதவாணன்.. குழந்தைகளோடு கொண்டாடி வெளியிட்ட உருக்கமான பதிவு
சென்னை: பிக் பாஸ் பிரபலமான அமுதவாணன் புது காரை தன்னுடைய குடும்பத்தோடு சென்று வாங்கி இருக்கிறார்.
அமுதவாணன் கார் வாங்கி வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் அமுதவாணன் இப்போதுதான் பிக் பாஸ் பெட்டியை திறந்து இருக்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அமுதவாணன் பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி இருக்கிறார். அதிலும் குறிப்பாக இவர் ராமராஜன் போல் மேனரிசம் பண்ணி வேற லெவலில் கலக்கி இருப்பார்.

ஒரு காமெடி நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த நடனம் ஆடுபவராகவும் மிமிக்ரி கலைஞராகவும் பன்முக திறமை கொண்டவராக இருக்கும் அமுதவாணன் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இவருடைய பெயர் ஆரம்பத்தில் இருந்து ஒலிக்கப்பட்டு வந்த நிலையில் ரசிகர்கள் இவருக்கு அப்போது நன்றாக வரவேற்பு கொடுத்து வந்தனர். ஆனால் இடையில் இவருடைய விளையாட்டு சிலரால் கலாய்க்கப்பட்டு வந்த நிலையில் கடைசி நேரத்தில் இவர் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்.
அமுதவாணனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனியோடு சேர்த்து வைத்து பலரும் விமர்சித்து வந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமுதவாணன் புது கார் வாங்கி இருக்கும் தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சில ஆண்டுகளாகவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் புது கார் வாங்கி அதனோடு செல்பி எடுத்து புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு கெத்து காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய நண்பர்களோடு சென்று கார் வாங்கி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து நானும் சலித்தவர் இல்லை என்று அமுதவாணன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு சென்று கார் வாங்கி புகைப்படம் வெளியிட்டு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்.
இப்போது அமுதவாணன் வாங்கி இருக்கும் கார் maruthi Suzuki fronx என்ற கார் வாங்கி இருக்கிறார். இதுதான் Ex showroom ஆரம்ப விலையே 8 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. அமுதவாணன் புது கார் வாங்கும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வந்த நிலையில் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் 11 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெட்டியோடு வெளியேறினார் அதை இப்போதுதான் திறந்து இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications