கமலை குறிப்பிட்டு தான் அசீம் "அந்த”வார்த்தை பேசினாரா? வெளியான பரபரப்பான வீடியோ.. திட்டும் ரசிகர்கள்
பிக் பாஸ் பார்த்து என் மகன் வளர மாட்டான். அவனை நான் எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று அசீம் கூறியிருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய மகனை குறித்து வெளியாகும் கேள்விகளுக்கு அசீம் பதில் கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள்,உங்கள் பையன் உங்களை பார்த்து தான் வளருவான் என்று சிலர் கூறினார்கள். அவன் பிக் பாஸ் பார்த்து வளரவில்லை என்று அசீம் பேசியிருக்கிறார்.
அசீம் கூறிய கருத்து ஏற்கனவே கமல் அடிக்கடி கூறியதால் அசீம் கமலை தான் கூறினாரா? என்று கேள்விகள் எழுந்து வருகிறது.

முடிவடையாத கருத்து மோதல்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் இந்த நிகழ்ச்சியை பற்றிய சர்ச்சைகளும் பிரச்சனைகளும் முடிவடையாத நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் அதிகமான பேட்டி கொடுத்து வருகிறார்கள். போட்டி போட்டுக்கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் எந்த மாதிரி சண்டையிட்டு கொண்டிருந்தார்களோ, அதுபோலத்தான் வெளியேயும் இவர்களுடைய கருத்துக்கள் இருந்து வருகிறது. அதுவும் குறிப்பாக விக்ரமன், அசீம் இருவரும் இரு துருவங்களாக இருந்து மாறி மாறி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதைப் பார்த்து வளர மாட்டான்
பிக் பாஸ் வீட்டிற்குள் அப்போ அப்போ அடித்துக் கொண்டாலும் மீதம் இருக்கும் நேரத்தில் சேர்ந்து கொண்ட இவர்கள் இப்போது செய்தி சேனல்களில் மாறி மாறி பேட்டி கொடுத்து தங்களுடைய மனக்கவலைகளை கொட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது அசீம் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சில இந்த ஷோவில் நீங்க இப்படி கோபப்படுறீங்களே, இதை பார்த்து உங்கள் மகன் வளர்கிறான் என்று சொல்கிறார்கள், டேய் என்னுடைய மகன் கூட நான் டைம் ஸ்பென்ட் பண்ணதுக்கு இன்னும் எனக்கு பல்லாயிரம் மணி நேரம் இருக்கிறது. அவன் இந்த பிக் பாஸ் பார்த்து வளர மாட்டான் என்று பேசி இருக்கிறார்.

யாரைப் பற்றிய பேச்சு
தற்போது இந்த கிளிப்ஸ்க்களை நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகமாக அசீமிடம் இந்த வார்த்தையை கூறியது கமல்தான். அதனால் அசீம் கமலைத் தான் இப்படி ஒருமையில் திட்டுகிறாரா? அவர் எவ்வளவு பெரிய லெஜன்ட் ஆனால் அவரை எல்லாம் இந்த மாதிரி தரக்குறைவாக பேசுகிறாரா? அதுவும் பல பேர் பார்க்கும் பொதுவெளியில் இந்த மாதிரி திமிராக பேசுவது சரியா? இதற்கு தான் சிலர் அசீமிற்கு டைட்டில் கொடுத்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிட்டது என்று கருத்து கூறியது உண்மைதானா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ரசிகர்களின் சப்போர்ட்
இந்த நிலையில் தனக்கு எதிராக வரும் நெகட்டிவ் கருத்துக்களுக்கு தான் அசீம் அப்படி ஒரு பதிலை கூறினார். பிக் பாஸ் வீட்டிற்குள் கமல் மட்டுமல்லாமல் விக்ரமனும் இதே வார்த்தையை கூறி இருக்கிறார். அதனால் அவருக்கும் பதில் கொடுக்கும் விதமாகத்தான் இந்த பதில் இருக்கும் என்று அசீமுடைய ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர். ஆனாலும் சமூக வலைதளத்தில் தற்போது அசீம் வெளியிட்ட இந்த வீடியோவுக்கு அதிகமான மீம்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications