" அவரை மட்டும் நம்பாதீங்க” உள்ளே நடப்பதை பற்றி நிவாஷினி கூறிய ரகசியங்கள்... இப்படி எல்லாம் இருக்கா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை பற்றி அதில் இருந்து வெளியேறிய நிவாஷினி முதல் முறையாக லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
நிகழ்ச்சியில் நடக்கும் பல நிகழ்வுகள் வெளியே இருந்து பார்க்கும்படி இல்லை என்று அவர் முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றிய தகவல்களை கூறி இருக்கிறார்.

மாடல் பெண்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் 21 போட்டியாளர்கள் அறிமுகமானார். தற்போது இதில் 15 போட்டியாளர்கள் தான் . இதில் மாடல் பெண்ணாக இருக்கும் நிவாஷினி ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவர் அந்த அளவிற்கு வெளியே தெரியாமல் இருந்த நிலையில் இவர் கானா பாடகராக அறிமுகமான அசல் கோளாறுடன் பழகி வந்த பிறகு அதிகமாக மீம்ஸ் களிலும் வீடியோக்களிலும் வைரலாக தொடங்கிவிட்டார்.

மனதை பாதித்த வெளியேற்றம்
அதிகமாக எந்த போட்டியாளர்களிடமும் சேராமல் இருந்து வந்த நிவாஷினி அசல் உடன் அதிகமாக நேரத்தை செலவிட்டு வந்தார். விளையாட்டுகளில் இவர் என்னதான் உண்மையாக விளையாடினாலும் அதிகமான நேரங்களில் அசல் உடன் இருக்கிறார் என்று போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலர் கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் அசல் வெளியேறிய பிறகு இவர் ஒரு சில நாட்கள் தனிமையில் புலம்பி கொண்டு இருந்தார். அசல் வெளியேற்றம் நிவாஷினியை வெகு பெரிய அளவில் பாதித்து இருந்தது. அதனால் கேமரா முன்பு அசலை குறித்து பல நேரங்களில் பேசிக் கொண்டிருந்தார்.

நண்பர்கள் கலாய்ப்பு
இந்த வாரம் ஓட்டுகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் இருந்த நிவாஷினி வெளியேற்றப்பட்டார். போட்டியாளர்கள் பலரும் அசீம் தான் வெளியேறுவார் என்று கூறி வந்த நிலையில் நிவாஷினியும் அசீம் தான் வெளியேறுவார் என்று கூறியிருந்தார். ஆனால் நிவாஷினி வெளியேற்றப்பட்டார் .இந்த நிலையில் நிவாஷினி நிகழ்ச்சியை விட்டு வெளியே வரும்போது பெரிய அளவில் எந்த சோகத்தையும் வெளிக்காட்டாமல் தான் வந்தார் .இவர் வெளியே வரும்போது இவருடைய சக போட்டியாளர்கள் நீ நேராக யாரை போய் பார்ப்பாய் என்று எங்களுக்கு தெரியும் என்று கலாய்த்து அனுப்பி இருந்தனர்.

ஃபீல் பண்ண வைத்த வீடியோ
இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான நேரம் கடந்து வந்த பாதை வீடியோ நிவாஷினிக்காக அதிக நேரம் ஒளிபரப்பப்பட்டது. ஆரம்பத்தில் நிவாஷினி செய்த குறும்புகளும் , ஆட்டங்களும் காட்டப்பட்டு வந்த நிலையில் கடைசியில் அசல் கோலாருடன் இவர் நடந்து கொண்டதை அப்படியே படம் பிடித்து காட்டி விட்டனர் .அதற்குப் பிறகு குயின்ஸிக்கும் இவருக்கும் இருக்கும் நட்பையும் அதில் சேர்த்திருந்தனர். இந்த வீடியோவை பார்த்து ஃபீல் பண்ணியபடியே நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிவாஷினி முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி லைவில் பேசியிருக்கிறார்.

வெளியானது முதல் வீடியோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது எனக்கு அந்த அளவில் பெரிய ஒரு கஷ்டம் தெரியவில்லை .ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து பார்த்த பிறகு தான் எனக்கு என்னை விட மோசமானவர்கள் பலர் உள்ளே இருக்கிறார்கள் நான் எதற்காக வெளியே வந்தேன் என்ற கேள்வி வருகிறது . பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் ரொம்பவே மிஸ் பண்ணுவதாகவும், குறிப்பாக குயின்ஸியை அதிகமாக மிஸ் செய்கிறதாகவும் இன்னும் அந்த வீட்டில் விட்டு தன்னுடைய நினைப்பு வெளியே வரவில்லை என்றும் கூறியிருக்கிறார் .அது மட்டுமல்லாமல் இதுவரைக்கும் எனக்கு ஓட்டு போட்டு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார். அதோடு இன்னமும் எனக்கு ஆதரவு தரும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ரகசியமான தகவல்கள்
லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்த நிவாவிடம் ரசிகர் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பவர்களில் யார் பயங்கரமானவர் என்று கேட்டதற்கு விக்ரமன் தான் என்று கூறி இருக்கிறார். அவரை நம்புவதற்கு கஷ்டம் தான் என்று கூறி இருக்கிறார், அதுபோல் அசீம் பற்றி கேட்டதற்கு, ரொம்பவே நல்லவர். எதையும் முகத்துக்கு நேராக சொல்லி விடுவார் என்று கூறி இதைப்பற்றி நான் பிறகு வீடியோ வெளியிட்டு தெளிவு படுத்துகிறேன் என கூறியபடியே லைவில் இருந்து அனைவருக்கும் டாடா காட்டி விட்டு கிளம்பி விட்டார்.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications