அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். திரையில் மாஸ் ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்தாலும், நிஜ வாழ்க்கையில் மிகவும் எளிமையான மனிதராகவே வாழ்ந்து வருகிறார். அதனால்தான் அவருடன் பழகிய பலரும், "அஜித் ஒரு நடிகர் மட்டுமல்ல, அருமையான மனிதர்" என்று அடிக்கடி கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது பிரபல டான்ஸ் மாஸ்டர் தாக்ஷாயினி பகிர்ந்துள்ள ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சம்பவத்தை கேட்ட ரசிகர்கள், "இதுதான் அஜித்" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Ajith Ajith Kumar Dakshayini Shalini Kollywood Tamil Cinema

அஜித்தின் கரிசனம்

சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய தாக்ஷாயினி, "இந்த உலகத்தில் அஜித் சார் மாதிரி இன்னொரு மனிதரை நான் பார்த்ததே இல்லை" என்று கூறியுள்ளார். அவர் பேசியபோது, ஒரு படப்பிடிப்பில் இரவு நேரம் வரை வேலை நடந்ததாகவும், அப்போது யூனிட்டில் இருந்த அனைவருக்கும் அஜித் நேரடியாக சமைத்து உணவு கொடுத்ததாகவும் கூறினார். ஆனால் அன்றைய தினம் தானோ சைவ உணவு சாப்பிடுபவர் என்பதால் சரியாக சாப்பிட முடியவில்லை.

"நான் சாப்பிடவில்லை என்பதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் அஜித் சார் என்னிடம் வந்து, மேடம் நீங்க இன்னும் சாப்பிடலயாமே என்று கேட்டார் அதற்கு நான் அவரிடம் இல்லை சார் சாப்பிட்டுவிட்டேன் என்று சொன்னதற்கு கூட அவர் பொய் சொல்லாதீங்க மேடம் நான் எல்லாருக்கும் நான்வெஜ் சமைத்தேன். முடிந்து விட்டது சாரி மேடம் என்று சொன்னாரு நான் இல்ல சார் ஃப்ரூட்ஸ் சாப்பிட்டு விட்டேன் என்று அவரை சமாதானப்படுத்தினேன்.

அஜித் சமையல்

அடுத்த நாள் ஷாலினி விரத நாட்களில் சாப்பிடுவதற்காக வீட்டில் தயாரித்த வெஜ் பிரியாணியை தனியாக எடுத்து வந்த அஜித், "இது ஷாலினிக்காக நான் செய்தது. நீங்க இதை கண்டிப்பா சாப்பிடணும்" என்று கொடுத்ததாக தாக்ஷாயினி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ஒரு நாள் சரியாக சாப்பிடவில்லை என்பதை நினைவில் வைத்து, மறுநாள் அதற்காக தனியாக உணவு எடுத்து வந்தது தன்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Ajith Ajith Kumar Dakshayini Shalini Kollywood Tamil Cinema

அஜித் அட்வைஸ்

இந்த சம்பவத்திற்குப் பிறகு, "சார் உங்களால் எப்படி இப்படி இருக்க முடிகிறது?" என்று தாக்ஷாயினி கேட்டிருக்கிறார்.

அதற்கு அஜித் கூறிய பதில் தான் அவரை மேலும் வியக்க வைத்ததாம். "இன்று நம்ம நடிப்பு எல்லோருக்கும் பிடிக்கலாம். நாளை பிடிக்காமல் போகலாம். ஒருநாள் நம்மையே விமர்சிக்கலாம். அது வாழ்க்கையில் நடக்கிற விஷயம். ஆனால் நாம் ஒருவருக்கு செய்த உதவி மட்டும் எப்போதுமே மாறக்கூடாது.

நம்மால் முடிந்த நல்லதை செய்யணும். எந்த சூழ்நிலையிலும் நம்முடைய கேரக்டரை மாற்றிக்க கூடாது. இது ஒருவேளை என் அப்பா அம்மாவின் வளர்ப்பாக கூட இருக்கலாம்" என்று அஜித் கூறியதாக தாக்ஷாயினி தெரிவித்துள்ளார்.

இந்த வார்த்தைகள் தன்னை மிகவும் பாதித்ததாகவும், ஒரு பெரிய நடிகர் இப்படிப்பட்ட எண்ணத்துடன் இருப்பது அரிதான விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊழியர்களையும் குடும்பமாக பார்க்கும் அஜித்

அஜித் பற்றி தாக்ஷாயினி மேலும் சில விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். அவரது வீட்டில் வேலை செய்யும் ஊழியர்களை அவர் சாதாரண ஊழியர்களாக பார்ப்பதில்லை என்கிறார்.

அவர்களுக்கான போக்குவரத்து வசதி முதல் அவர்களது குடும்ப நலன் வரை அனைத்தையும் கவனித்துக் கொள்வாராம். குறிப்பாக அவர்களது குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவுகள் உள்ளிட்ட பல தேவைகளிலும் உதவி செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயங்களை அவரது வீட்டில் வேலை செய்பவர்களே நேரடியாக கூறியிருப்பதாகவும் தாக்ஷாயினி தெரிவித்துள்ளார்.

அம்மா மறைவிலும் அதே எளிமை

சமீபத்தில் அஜித்தின் தாயார் மறைந்தபோதும் அவர் எந்தவித ஆடம்பரமும் விரும்பவில்லை. மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசியல்வாதிகள், பிரபலங்கள், ரசிகர்கள் என பெரிய கூட்டத்தை விரும்பாமல், மிகவும் எளிமையாக அந்த நிகழ்வை நடத்தினார். அதுவும் அவரது குணநலனுக்கு ஒரு எடுத்துக்காட்டாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

டான்ஸ் மாஸ்டர் பேட்டி

தாக்ஷாயினியின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நாள் சாப்பிடவில்லை என்பதை கவனித்து, மறுநாள் அதற்காக உணவு கொண்டு வந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

"திரையில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக இருப்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் மனிதர்களின் மனதை வெல்வதுதான் பெரிய விஷயம்" என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அஜித்தை பற்றி ஏற்கனவே பலரும் பல நல்ல விஷயங்களை கூறியிருந்தாலும், தாக்ஷாயினி பகிர்ந்துள்ள இந்த சம்பவம் அவரது மனிதநேயத்தின் இன்னொரு பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதனால்தான் இந்த பேட்டி தற்போது இணையம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+