பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல வருட கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் ஜி.பி முத்து.. குவியும் வாழ்த்து
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகம் ஆகி பின்பு வெளியே வந்த ஜிபி முத்து தற்போது பல வருடங்களாகவே தான் ஏங்கிக் கொண்டிருந்த கனவை நிறைவேற்றி இருக்கிறார்.
பழைய ஓட்டு வீட்டில் இருந்த ஜி பி முத்து புதியதாக பங்களா போன்ற ஒரு வீட்டைக் கட்டி அதில் இன்று பால் காய்ச்சி புது வீட்டில் குடியேறி இருக்கிறார்.

பல நாள் கனவு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலர் தவம் கிடக்கும் நேரத்தில் இந்த ஆறாவது சீசனில் கலந்து கொள்வதற்காக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் விருப்பத்தை தெரிவித்து வீடியோவை அனுப்பி இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜிபி முத்து ஒரு போட்டியாளராக அறிமுகமானார். இந்த சீசன் இனி களைகட்டி விடும் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார். இந்த நிலையில் வெளியே வந்த பிறகு தற்போது தன்னுடைய பல நாள் கனவு நிறைவேறிவிட்டது என்று ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

செலவு இல்லாத வீடியோ
வீடு என்பது பலரும் எதிர்பார்க்கும் ஒரு தேவைதான். அதுவும் நடுத்தர வர்க்கத்தினருக்கு தான் தெரியும் வீட்டின் அருமை. சொந்த வீடு வேண்டும் என்பது பலருடைய போராட்டமாக இருந்து வருகிறது. அதுபோலத்தான் ஜி.பி முத்து விற்கும் இருந்து வந்திருக்கிறது. சாதாரணமாக தச்சு வேலை செய்து வந்த ஜி பி முத்து டிக் டாக் செயலி மூலமாகவே சமூக வலைத்தளத்தில் பிரபலமான ஒரு நபராக மாறி இருந்தார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் ஓட்டு வீட்டில் இருந்தாலும் தன்னுடைய சின்ன வீட்டிலும் பெரிய அளவில் எந்த செலவும் செய்யாமல் டிக் டாக் வீடியோக்களை எடுத்து குவித்து வருவார்.

குடும்பம் தான் முக்கியம்
பலர் லட்சக்கணக்கான பணத்தை செலவிட்டு பிரபலமாக வேண்டும் என்று திரைப்படங்களும் ஷார்ட் பிலிம்களும் எடுத்துக் கொண்டிருக்கும் போதும் இவர் கையில் ஒரே ஒரு செல்போனை மட்டும் வைத்துக்கொண்டு எந்த ஒரு செலவும் இல்லாமல் ரசிகர்களை கவரும் விதத்தில் இவர் வீடியோ வெளியிட்டு வருவார். ஆனாலும் இவரை கலாய்த்து பலர் கமெண்டுகளை அனுப்பி வருவார்கள். அதற்கு சலிக்காமல் இவர் அடுத்த வீடியோவில் அந்த கமெண்ட் போட்டவரின் ஐடியை சொல்லி கலாய்த்து தள்ளி விடுவார். இவர் என்னதான் திட்டினாலும் அதை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனாலேயே இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு என்ன தான் புது புது வாய்ப்பு வந்தாலும் தன்னுடைய குடும்பம் தான் எனக்கு முக்கியம் என்று இந்த நிகழ்ச்சியை விட்டு இரண்டு வாரத்தில் வெளியேறி இருந்தார்.

புது வீட்டில் பால் காய்ச்சுதல்
இந்த நிலையில் இதுவரைக்கும் ஓட்டு வீட்டில் வாழ்ந்து வந்த ஜி.பி முத்து தற்போது பங்களா போன்ற பெரிய வீட்டை கட்டி இருக்கிறார். அந்த வீட்டில் இன்று பால் காய்ச்சி குடி ஏறி இருக்கிறார். தான் ஏற்கனவே புது வீடு கட்டி வருவதாக தன்னுடைய ரசிகர்களிடம் கூறியிருந்த நிலையில், தன்னுடைய வீட்டின் வேலை மொத்தமாக முடிவடைந்த நிலையில் தன் வீட்டில் குழந்தைகள் மற்றும் நண்பர்களோடு மட்டுமே சேர்ந்து ஜிபி முத்து பங்க்ஷனை எளிமையாக முடித்து இருக்கிறார். இந்த வீடியோவை தன்னுடைய யூடியூப் சேனல் மூலமாக வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications