பிக் பாஸ் 6:என்னோட மகள் வயசு பொண்ணு..! நான் எப்படி? கதறி அழுத ஜி.பி முத்து.. இப்படி ஒரு குற்றசாட்டா?
சென்னை:பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பிக் பாஸ் 6 சீசனில் பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் போட்டியாளர்களாக களம் இறங்கி உள்ளனர்.
ஒரு உரைக்குள் இரண்டு கத்தி என்பது போல் டிக் டாக் பிரபலங்களான ஜி.பி முத்துவும் தனலட்சுமி உரசி கொள்வது பிக் பாஸ் போட்டியின் விறுவிறுப்பை கூட்டி இருப்பதோடு மட்டுமின்றி, மற்றொரு டிக் டாக் பிரபலமான தனலட்சுமி மீதான வெறுப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளதாக பலர் கூறி வருகின்றனர்.

களம் இறங்கியதும் கதாநாயகன்
ஜி.பி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியதிலிருந்து ஜி.பி முத்துவை குறித்த மீம்ஸ்களும் கலாய்ப்பு வீடியோக்களும் இணையத்தை ஆக்கிரமிக்க துவங்கி விட்டன. தன்னுடைய வெகுளித்தனமான பேச்சாளும் நடவடிக்கைகளாலும் பெரிய அளவிற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களை வைத்திருக்கும் ஜி.பி முத்து நிகழ்ச்சியில் வெற்றி பெறுகிறாரோ!? இல்லையோ?! ஆனால் கண்டிப்பாக இறுதிப் போட்டி வரை செல்வார் என்றும், அந்த அளவிற்கு ஜி.பி முத்துவிற்கு ரசிகர்களின் ஆதரவு இருப்பதாக பலர் கூறி வந்தனர்.

மலையோட மோது தலையோடு மோதாதே
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதிலிருந்து ஜி.பி முத்துக்காண ஆதரவு தொடர்ந்து அதிகமாகி வருகிற சூழ்நிலையில் டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி ஆட்டிட்யூட் காட்டுவதாக நினைத்துக் கொண்டு ஜி.பி முத்து உடன் நடந்து கொண்ட விதம் ஜி.பி முத்து ரசிகர்கள் மட்டுமின்றி பலரை முகம் சுளிக்க வைத்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். நிகழ்ச்சி துவங்கி இரண்டு நாட்களே ஆன நிலையில் தனலட்சுமி மற்றும் ஆயிஷாவை விஷப்பாட்டில் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவந்த நிலையில் ஜி.பி முத்து உடன் நடைபெற்ற மோதல் டிக் டாக் புகழ் தனலட்சுமிக்கு மேலும் சிக்கலை உண்டு பண்ணி உள்ளது.

முகம் சுளிக்க வைத்த முதல் போட்டியாளர்
நிகழ்ச்சி துவங்கிய போது நல்ல முறையில் அறிமுகமான தனலட்சுமி ஜி.பி முத்து உரையாடல்கள் வைரலாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் பிக் பாஸ் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.பிரபலத்துடன் மோதி பிரபலமாகும் வியூகத்தை தனலட்சுமி செய்ய முயல்கிறாரோ!? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜி. பி முத்துவுடனான இந்த மோதலால் இந்த சீசனின் ரசிகர்களிடம் பெயரைக் கெடுத்துக் கொள்ளும் முதல் போட்டியாளராக தனலட்சுமி ஆகிவிட்டார் என்று பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கடுப்பான ஜி பி முத்து ஆர்மி
தான் நடிப்பதாகவும் தன்னை அக்கா வென்று கூறச் சொல்லியும் தனலட்சுமி ஜி.பி முத்து உடன் கூறியதை கேமராவிடம் சொல்லி வருத்தப்பட்ட ஜி.பி முத்து, தனலட்சுமி இவ்வாறு பேசுவது தனக்கு பிடிக்கவில்லை என்றும் தன்னுடைய மகள் போன்று இருக்கும் தனலட்சுமி இவ்வாறு பேசுவது தனக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.ஜி.பி முத்துவின் புலம்பலை கேட்ட ரசிகர்கள் தனலட்சுமின் பேச்சுக்களையும் முக பாவனைகளையும் கலாய்த்து தனலட்சுமிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தனக்கு இருக்கும் ரசிகர்கள் பலத்தை மட்டும் தெரிந்திருக்கும் தனலட்சுமிக்கு ஜி பி முத்து ரசிகர்கள் பலம் தெரியவில்லை போல என்று பார்வையாளர்கள் பலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications