இந்த நாளை மறக்க முடியாது உருக்கமாக பதிவு வெளியிட்ட ரச்சிதா.. கூடவே இந்த அறிவுரையும் அவருக்கு தானா?
நடிகை ரச்சிதா மகாலட்சுமி மறக்க முடியாத நாள் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலோடு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா மகாலட்சுமி கமல்ஹாசன் உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மனநிலையை தெளிவுபடுத்தி இருக்கிறார்.
ஏற்கனவே பல வருடமாக காத்திருந்து தான் தனக்கு இந்த முறை பிக் பாஸில் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று ரச்சிதா கூறி இருந்தார்.
ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை இருக்கும் அது எதுவும் தெரியாமல் அடுத்தவர்களைப் பற்றி பேசக்கூடாது என்று ரச்சிதா பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

சின்னத்திரை நடிகை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் சின்னத்திரை நடிகையாக இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் அதிகமாக ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான். தன்னுடைய கேரக்டரை ரசிகர்களின் மத்தியில் காட்ட வேண்டும் என்று இவரும் பல வருடங்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து இருக்கிறார்.

கமலுடைய பாராட்டு
முயற்சிக்கு கிடைத்த பரிசாக இந்த ஆறாவது சீசனில் ரச்சிதா மகாலட்சுமிக்கு வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய உண்மையான முகத்தை இவர் வெளியே காட்டவில்லை என்று சக போட்டியாளர்கள் தொடர்ந்து ரச்சிதாவிடம் குற்றம் கூறி வந்தனர். ரச்சிதா இதுதான் என்னுடைய உண்மையான கேரக்டர் என்று ஒவ்வொரு முறையும் விளக்கம் கொடுத்தாலும் பலரும் அதை கலாய்த்து கொண்டு தான் இருந்தனர். எந்த இடத்திலும் நான் மாற மாட்டேன் என்று ரச்சிதா அதே நிலையில் இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் கமலுக்கு ஒரு நபரால் இந்த அளவிற்கு கோபமே படாமல் சிரித்த முகமாக இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார். அது மட்டுமல்லாமல் அதை பாராட்டவும் செய்திருந்தார்.

முகமூடி
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக கமலோடு ரச்சிதா எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இந்த நாளை மறக்க முடியாது என்று பகிர்ந்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இவரை சில பிக் பாஸ் போட்டியாளர்கள்
ரச்சிதா தான் பிக் பாஸ் வீட்டிற்குள் முகமூடியோடு இருந்து வந்தவர் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஒருத்தரை பற்றியும் அவருடைய வாழ்க்கையை பற்றியும் தெரியாமல் யாரையும் ஜட்ஜ் பண்ணாதீர்கள் என்று கூறி இருக்கிறார்.

ரச்சிதாவின் பதிவு
ஒவ்வொரு பர்சனுக்கும் ஒரு கதை இருக்கும். அவங்க ஏன் அப்படி இருக்காங்க என்பதற்கான ஒரு காரணம் இருக்கும். அதை எதுவுமே தெரியாம யாரையும் ஜட்ஜ் பண்ண கூடாது. வெறுப்புக்கு பதிலாக பாசிட்டிவிட்டியை ஸ்பிரட் பண்ணுங்க. யாரு மேலையும் நமக்கு வெறுப்பு வேண்டாம். மோட்டிவேஷன் ஆன ஒரு பாசிடிவ் மெசேஜை ஷேர் செய்து இருக்கிறார். இதைக் குறித்து சில ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நீங்கள் பேட்டி கொடுக்கும்போது இதை யோசித்து செய்திருக்கலாம் என்று அறிவுரை கூறுகின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பற்றியும் நல்லவிதமாகத் தான் பேசியிருந்தார். ஆனாலும் சில நெட்டிசன்கள் தற்போது இந்த பதிவிற்கு கலாய்த்து வருகிறார்கள். பலர் ரச்சிதாவை பாராட்டியும் வருகிறார்கள்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications