Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசீம் ஜெயித்ததற்கு காரணம்? ஷிவின் ஜெயித்திருந்தால் அது நடந்திருக்கும்! ரகசியங்களை கொட்டிய கதிரவன்

பிக் பாஸ் டைட்டிலை அசீம் ஜெயித்தது மக்கள் ஓட்டு போட்டதனால தானே? என்னை பொறுத்த வரைக்கும் அந்த வீட்டில் எல்லோருமே அவங்களோட பெஸ்ட் கொடுத்து இருந்தாங்க எல்லோருமே வெற்றியாளர்கள் தான் என்று கதிர் கூறி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து பல நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக அந்த நிகழ்ச்சியை பற்றி கதிரவன் பல தகவல்களை பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் ஜெயித்ததும் அதிகமாக கைதட்டி ஆரவாரம் செய்ததில் கதிரவனும் ஒருவர்.

தற்போது அசீம் டைட்டில் ஜெயித்தது மக்கள் ஓட்டு போட்டதினால் தான் அவர் செய்தது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கதிர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடிய அனைவருமே தங்களுடைய பெஸ்ட்டை கொடுத்திருந்தார்கள் அதனால் அனைவருமே வெற்றியாளர்கள் தான் என்றும் கூறியிருக்கிறார்.

முடிவடையாத விவாதங்கள்

முடிவடையாத விவாதங்கள்


பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு வாரங்கள் ஆன நிலையிலும் இந்த சீசனில் டைட்டில் வின்னர் அசீம் ஜெயித்தது சரியா? தவறா? அவர் ஜெயிக்காமல் யார் ஜெயித்திருக்கலாம் என்றெல்லாம் விவாதங்கள் முடிவடையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள
சமூக வலைத்தளங்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இப்போது கதிரவனும் பேட்டி கொடுக்க தொடங்கி இருக்கிறார். கதிரவன் ஒரு விஜேவாக தனது பயணத்தை தொடங்கி இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அதிகமான ரசிகர்களை பெற்றிருந்தார். அதனாலயே இவர் பலமுறை நாமினேசன் லிஸ்டில் வந்திருந்தாலும் இவர் எலிமினேஷன் ஆகாமல் ரசிகர்களால் காப்பாற்றப்பட்டு வந்தார்.

மிச்சர் கதிர்

மிச்சர் கதிர்

எந்த இடத்திலும் இவர் தன்னுடைய குரலை உயர்த்தி பேசி பிரச்சனைகளை தீர்க்காமல் இருக்கிறார் என்று பலர் இவரை மிச்சர் கதிர் என்று கூறி வந்தாலும் அதையெல்லாம் இவர் கண்டு கொள்வதே கிடையாது. பல நெகட்டிவ் கருத்துக்கள் இவர்களுடைய விளையாட்டை குறித்து ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் தொடர்ந்து பேசி வந்தாலும் இவர் தன்னுடைய நிலையில் இருந்து மாறாமல் கடைசி நாள் வரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்திருந்தார். கடைசி நேரத்தில் கதிர் பணமூட்டை வந்ததும் எடுத்ததும் சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

பணமூட்டை எடுக்க காரணம்

பணமூட்டை எடுக்க காரணம்

பிக் பாஸ் வீட்டிலிருந்து நான் வெளியே செல்லும்போது அனைவரும் என்னை வழி அனுப்ப வேண்டும் என்று நினைத்தேன். அப்படி அனைவரும் இருக்கும்போது வந்த பணமூட்டையில் இருக்கும் பணம் எனக்கு தேவை இல்லை ஆனால் அதை எடுத்துக் கொண்டு சென்றால் தான் நான் அனைவரும் இருக்கும்போதே வெளியேறலாம் என்று தான் பணமூட்டையை எடுத்தேன். எல்லாருக்கும் பணம் முக்கியம் தான் பணத்தை எப்ப வேணாலும் சம்பாதித்துக் கொள்ளலாம் ஆனால் நல்ல நண்பர்களையும், உறவுகளையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்று தான் நான் பணம் அதிகரிப்பதற்கு முன்பே அதை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஷிவின் ஜெயித்திருக்கலாம்

ஷிவின் ஜெயித்திருக்கலாம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் அதிகமாக சக போட்டியாளர்களுடன் பேசாமல் இருந்தாலும் முதல்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி கருத்து கூறியிருக்கிறார். அதில் அசீம் ஜெயித்தது ரசிகர்கள் ஓட்டு போட்டதால் தானே? அவருக்கு ஒவ்வொரு வாரமும் அதிகமான ரசிகர்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்றால் அசீமுடைய விளையாட்டு ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. அசின் ஜெயிக்காமல் விக்ரமன் ஜெயித்திருந்தாலும் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். ஷிவின் ஜெயித்திருந்தாலும் நான் சந்தோஷப்பட்டு இருப்பேன். ஆனால் ஷிவின் எல்லா இடங்களிலும் சரியாக விளையாடி இருந்தார். அதனால் அவர் ஜெயித்திருந்தால் எல்லோரும் சேர்ந்து கொண்டாடி இருப்போம் என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+