பிக் பாஸ் 7: அப்போ அர்ச்சனா ஐ லவ் யூ சொன்னது இவருக்கு தானா? அம்மாகிட்ட கூட சொன்னது இல்லையாமே!?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் அர்ச்சனா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் கேமரா முன்பு ஐ லவ் யூ சொன்னது யாருக்கு என்பது பற்றி நிக்சன் கேள்வி எழுப்பி பிரச்சனை செய்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில் அர்ச்சனா நான் ஐ லவ் யூ சொன்னால் இவருக்கு தான் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

டிக் டாக் போன்ற செயலி பலருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்து இருந்தது. அதுபோல தான் நடிகை மற்றும் விஜே அர்ச்சனாவின் வாழ்க்கையும் இது போன்ற சமூக வலைத்தளம் மூலமாகத்தான் மாறி இருக்கிறது. சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக அர்ச்சனா ஆரம்பகாலகட்டத்தில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு பிறகு தான் அவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
முதலில் தொகுப்பாளராக ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த விஜே அர்ச்சனா விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலின் மூலமாக வில்லியாக அறிமுகமானார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை பாதியிலேயே இதற்கு மேல் என்னால் சீரியலில் தொடர முடியாது என்று டாடா காட்டி விட்டு கிளம்பிவிட்டார்.
வில்லியாக அர்ச்சனாவை பார்த்து வந்த ரசிகர்கள் இவரிடம் சீக்கிரமாக திரைப்படங்களில் எண்ட்ரி கொடுங்க என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசனில் விஜே அர்ச்சனாவும் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் அவர் இல்லை...

அதற்கு பிறகு ரசிகர்களின் மத்தியில் இது பற்றி பெரிய அளவில் பேசப்படாமல் இருந்த நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரி அறிமுகம் நடந்தது. அதிலும் ஒரே நேரத்தில் ஐந்து வைல்ட் கார்ட் என்ட்ரி உள்ளே வந்தனர் அதில் ஒரு போட்டியாளராக அர்ச்சனாவும் இருந்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா வந்த பிறகு பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் ஆகி விட்டார்.
ஆனால் முதல் வாரத்தில் அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த அர்ச்சனா பிறகு வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரையும் அடக்கி, அதட்டி யாருடா இந்த பொண்ணு என்று திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். அதிலும் சில தினங்களுக்கு முன்பு நிக்சன் மற்றும் அர்ச்சனா இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் பெரிய அளவில் பேசப்பட்டது.
அப்போது நிக்சன் அர்ச்சனாவிடம் நீ கேமரா முன்பு ஐ லவ் யூ ன்னு சொன்னியே அது யாரை பார்த்து சொன்ன சொல்லு என்று கேட்டிருந்தார். அதற்கு அர்ச்சனா என்ன நடந்தது என்பதை தெளிவாக சொல்லவில்லை என்றாலும் அது என்னுடைய பர்சனல் என்று சமாளித்து இருந்தார். இந்த நிலையில் இப்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அர்ச்சனா நான் ஐ லவ் யூ சொல்றது என்றால் என்னுடைய தந்தையிடம் மட்டும்தான் நான் சொல்வேன். எனக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும். ஆனால் அப்பாவை அதைவிட அதிகமாக பிடிக்கும் எந்த இடத்திலும் நான் எங்க அப்பாவுக்கு மட்டும்தான் ஐ லவ் யூ சொல்லுவேன் என்று கூறியிருக்கிறார்.
அதுபோல இன்னொரு வீடியோவில் வெளியாகி இருக்கிறது அது அர்ச்சனா அவார்ட் வாங்கும் பங்க்ஷன் ஆக இருக்கிறது. அந்த அவார்ட் வாங்கும் பங்க்ஷனில் கூட அர்ச்சனா நான் என்னுடைய அப்பாவுக்கு தான் ஐ லவ் யூ சொல்லுவேன் என்று சொல்லி இருக்கிறார். அதோடு அந்த இடத்தில் வைத்து தன்னுடைய தந்தைக்கு போன் செய்து அவருக்கு ஐ லவ் யூ சொல்லி இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் நான் இதுவரைக்கும் எங்க அம்மாவுக்கு கூட ஐ லவ் யூ சொன்னதே கிடையாது நான் எப்போதும் எங்க அப்பாவுக்கு தான் ஐ லவ் யூ சொல்லுவேன் என்றும் சொல்லி இருக்கிறார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஃப்ரீஸ் டாஸ்க்கில் அர்ச்சனாவின் அப்பா மற்றும் அம்மா உள்ளே வந்திருந்த நிலையில் அர்ச்சனா ஓடி சென்று தன்னுடைய தந்தையை தான் கட்டிப்பிடித்து இருந்தார்.
இதனால் தன்னுடைய தந்தை மீதுதான் அர்ச்சனா அளவுகடந்த பாசத்தை வைத்திருக்கிறார். அதனால் கேமரா முன்பும் அவருக்கு தான் ஐ லவ் யூ சொன்னாரா? என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications