பிக் பாஸ் 7: மீண்டும் அர்ச்சனாவின் பீரியட்ஸ் பற்றி மோசமாக பேசிய விசித்திரா.. பிக் பாஸ் செய்த சூழ்ச்சி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் விசித்திராவிற்கும் அர்ச்சனாவிற்கும் நேற்று பயங்கர சண்டை நடந்தது. இருவரும் மாறி மாறி இதுவரைக்கும் செய்த செயல்களை சொல்லி காட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது விசித்திரா, அர்ச்சனா பீரியட்ஸ் என்று சொல்லி பிக் பாஸ் வீட்டிற்குள் நடித்துக் கொண்டிருக்கிறாள் என்று விமர்சித்து பேசி இருக்கிறார். ஏற்கனவே இதுபோல அர்ச்சனா பீரியட்ஸ் வயிறு வலிக்கிறது என்று கேமரா முன்பு பேசியதை சொல்லி காட்டி இருந்தார்.
இந்த நிலையில் இப்போது மீண்டும் தன்னை எதிர்த்து கேள்வி கேட்டதால் விசித்திரா அர்ச்சனவை பற்றி பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் விசித்திராவை திட்டி வருகிறார்கள். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் வந்திருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. ஆனாலும் ஆரம்பத்தில் இருந்த மாதிரியே பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டை சச்சரவுகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. இது வரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் தான் யார் டைட்டில் வின்னர் என்று சொல்ல முடியாத வகையிலே இருக்கிறது.
ஆரம்பத்தில் பிரதீப் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கூறிவந்த நிலையில் அவரை ரெட் கார்டு கொடுத்து திடீரென்று வெளியேற்றி வைத்திருந்தனர். பிறகு வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த அர்ச்சனா தினேஷ் மற்றும் ஏற்கனவே இருந்த விசித்திராவின் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பிடித்திருந்த நிலையில் இப்போத மூன்று பேருமே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தங்களுடைய நடவடிக்கையை காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் பிரதீப்க்கு அதிகமாக சப்போர்ட் செய்து ரசிகர்களின் மத்தியில் தனி மரியாதை பெற்றிருந்த விசித்திரா இப்போது நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களுக்கு முகசுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே விசித்திரா இப்போது எதற்கெடுத்தாலும் தினேஷ் பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். தினேஷ் விசித்திராவை பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இவர்கள் பஞ்சாயத்து போதாது என்று தனக்கு ஆதரவாக தினேஷிடம் அர்ச்சனா சண்டை போடவில்லை என்று நேற்று புதிய பிரச்சனையும் விசித்திரா எடுத்திருந்தார். அதாவது நேற்று பிக் பாஸ் இந்த வீட்டிற்குள் இருக்கும் யாரெல்லாம் வெளியே ஓட்டு போடுவதற்காக பணம் கொடுத்து பிஆர் செட் பண்ணி வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்களை பற்றி சொல்லுங்க என்று ஒரு டாஸ்க் கொடுத்திருந்தார்.
இந்த டாஸ்க் வந்ததுதான் வந்தது மொத்த பேரும் அர்ச்சனா குறித்து பேசி விட்டனர். அர்ச்சனா தான் வெளியே காசு கொடுத்து பிஆர் செட் பண்ணி வைத்துவிட்டு வீட்டிற்குள் வந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அதனால் தான் அதிகமாக க்ளாப்ஸ் வருகிறது என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்க, அதனால் கோபமான அர்ச்சனா எனக்கு அவ்வளவு பணம் இருந்தால் நான் இந்த நிகழ்ச்சிக்கே வந்து இருக்க மாட்டேன் என்று இந்த நிகழ்ச்சியை பற்றி கேவலபடுத்தி இருந்தார்.
இப்படியான நிலையில் தான் இதை தொடர்ந்து விசித்ரா மற்றும் அர்ச்சனாவிற்கு இடையே வாக்குவாதம் இழுத்துக் கொண்டே போனது. அதாவது இந்த டாஸ்க்கில் விசித்திரா அர்ச்சனா ஒரு நோட்டு போட்டு ரெடியாகி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் என்று சொல்லிவிட்டார். அதற்கு அர்ச்சனா மறுப்பு தெரிவித்துக் கொண்டிருக்கும் போது கோபமான விசித்திரா மாயா மற்றும் பூர்ணிமாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார்.
அப்போது இந்த பொண்ணு ரொம்பவே நடிச்சிட்டு இருக்கு. அர்ச்சனா வந்த ஆரம்ப காலகட்டத்தில் ரொம்ப கோபப்பட்டு எல்லாரிடமும் திட்டுனா, அப்ப ஏன் இப்படி நடந்துக்குறேன்னு கேட்கும் போது எனக்கு பீரியட்ஸ் அதனால இவ்வளவு டென்ஷன் ஆயிட்டுன்னு சொன்னா.. சரினு நான் விட்டுட்டேன். அடுத்த ரெண்டு வாரம் கழிச்சு என்கிட்டயும் நிக்சன் கிட்டயும் ரொம்ப சண்டை போட்டுட்டா...
அப்போதும் பிறகு நான் ஏன் இப்படி நீ நடந்துக்கிறான்னு என்று கேட்கும் போது அன்னைக்கும் எனக்கு பீரியட்ஸ் அதனால நான் இவ்வளவு கோவம் வருதுன்னு சொல்றா... இது எல்லாம் நம்பற மாதிரியா இருக்கு? பீரியட்ஸ் வந்துச்சுன்னா இப்படி கூட கோபம் வருமா? இவ எதற்கு எடுத்தாலும் கோபப்பட்டு திட்டிகிட்டு பிறகு பீரியட்ஸ் என்கிற நாடகத்தை போட்டு நடிக்கிறா என்று பேசிக் கொண்டிருக்க அதற்கு பூர்ணிமா எதுவும் தெரியாம நீங்க பேசாதீங்க என்று வார்னிங் கொடுத்து அதை ஆப் செய்து இருந்தார்.

ஆனாலும் விசித்திரா விட்ட பாடு இல்லை அர்ச்சனா நடிக்கிறா என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார். ஏற்கனவே ஆரம்பத்தில் ஒருமுறை இது போலத்தான் விசித்திரா அர்ச்சனா தனக்கு பீரியட்ஸ் வயிறு வலியா இருக்குன்னு கேமரா முன்னாடி போய் சொல்ற அப்படி சொல்லி மக்களிடம் அனுதாப ஓட்டு வாங்குகிறா என்று சொல்லியிருந்தார்.
அப்போ என்ன நடந்ததுன்னா உண்மையில் அர்ச்சனா தனக்கு பீரியட்ஸ் அதனால வயிறு வலியா இருக்கு அதனால மெடிக்கல் ரூமுக்கு கூப்பிடுங்க என்று கேமரா முன்பு பேசி இருக்கிறார். அதை தவறாக புரிந்து கொண்ட விசித்திரா மக்களிடம் அனுதாப ஓட்டு வாங்குவதற்காக இப்படி பேசுகிறார் என்று சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்சனையில் உங்க கருத்து என்ன என்பதை சொல்லிட்டு போங்க.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications