ஜோவிகாவிடம் நல்ல எண்ணத்தில் தான் அதை சொன்னாரு! ஆனால் வனிதா சொன்னது? - யுகேந்திரன் மனைவி வருத்தம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் யுகேந்திரனின் மனைவி ஜோவிகாவிடம் யுகேந்திரன் பேசிய வார்த்தை குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதாவது சில நாட்களுக்கு முன்பு ஜோவிகாவிடம் யுகேந்திரன் நீ எது படிக்க விரும்புகிறாயோ அதில் ஒரு டிகிரி பட்டம் வாங்கி அதை வைத்துக் கொள் என்று கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து விசித்திரா ஜோவிகாவிடம் அடிப்படை கல்வி முக்கியம் என்று சொன்னதும் விவாதமாக கிளம்பி வந்தது. இந்த நிலையில் இது குறித்து யுகேந்திரனின் மனைவி முதல்முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கப்பட்டதுமே முதல் வாரத்திலேயே பிரச்சனைகள் வெடிக்க தொடங்கிவிட்டது. இணையதளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய விவாதம் வேகமாக பரவி வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரமுகர்கள் வரை பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதற்கு காரணமாக இருந்தது படிப்பு என்ற ஒன்றுதான்.
கடந்த வாரத்தில் யுகேந்திரன் ஜோவிகாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது நீ எது படிக்க விரும்பினாலும் சரி ஆனால் அதில் ஒரு டிகிரி பட்டம் வாங்கி வைத்துக் கொள் என்று கூறியிருந்தார். காரணம் ஜோவிகா எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு அதற்குப் பிறகு பள்ளி படிப்பு படிக்காமல் டிப்ளமோ படித்திருந்தார். அதோடு நிறுத்தி விடாதே அதில் ஒரு டிகிரி பட்டமும் பெற வேண்டும் என்று யுகேந்திரன் கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து விசித்திராவும் கண்டிப்பாக அடிப்படை கல்வியை முடிக்க வேண்டும் என்று சொல்ல, அதற்கு கோபமான ஜோவிகா எனக்கு படிப்பு வரவில்லை. எல்லோரும் படி, படி என்று சொல்ல வேண்டாம். எனக்கு படிப்பு வரவில்லை அதனால் அதை விட்டுவிட்டு என்னுடைய திறமையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன் என்ற விதமாக அவரும் பேசி இருந்தார். இது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறி இருந்தது. இந்த நிலையில் முதல் முறையாக இது பற்றி நடிகர் யுகேந்திரனின் மனைவி பேசியிருக்கிறார்.
அதில் யுகேந்திரன் பொதுவாக யாருக்கும் அட்வைஸ் பண்ணுகிற ஆளு கிடையாது. அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் ஜோவிகாவிடம் பேசியதற்கு காரணம் ஜோவிகா அவர் கண் முன்னே வளர்ந்த பொண்ணு, நான் பிக் பாஸ் வீட்டிற்குள் யுகேந்திரன் போகும்போது கூட அவரிடம் கேட்டேன், உங்களால பிள்ளைகளை பார்க்காமல் இருக்க முடியுமா என்று, அதற்கு அவர் சொன்னது ஜோவிகா உள்ளே இருக்கிறா... அவளும் எனக்கு ஒரு பொண்ணு மாதிரிதான். அதனால எனக்கு பெருசா குழந்தைகள் நினைவு வராது என்று சொல்லிவிட்டு தான் போயிருந்தார்.
அவர் குழந்தை என்ற நினைப்பில் தான் ஜோவிகாவிடம் அட்வைஸ் பண்ணி இருந்தார். அதுவும் அவர் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. படித்திருந்தால் நல்லது என்று தான் சொன்னார். யுகேந்திரன் எங்களோடு இந்தியாவை விட்டு வரும்போது பத்தாம் வகுப்பு வரைக்கும் தான் படித்திருந்தார். அதற்கு பிறகு அவர் ஒரு நடிகராகவும் பாடகராகவும் இருந்தாலும் அவர் பட்ட அவமானங்களும் கஷ்டங்களும் அதிகம். எந்த இடத்திலும் படிப்பு குறித்து தான் அதிகமாக கேட்கப்பட்டது.
அதனாலதான் அவர் இங்க வந்து படித்து பட்டங்களும் வாங்கி இருந்தார். நாங்கள் எங்கள் வீட்டில் குழந்தைகளிடமும் கண்டிப்பாக எல்லோரும் ஒரு டிகிரி முடித்து விட வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறோம். அந்த உரிமையில் தான் ஜோவிகாவிடமும் யுகேந்திரன் சொன்னார். அதில் எந்த தப்பும் இல்லை. ஆனால் நான் இது பற்றி வனிதாவிற்கு ஃபோன் பண்ணும் போது, வனிதா யுகேந்திரன் எப்படி ஜோவிகாவிடம் இப்படி பேசலாம் என்று கேட்டார்.
வனிதா இடத்தில் இருந்து பார்க்கும்போது வனிதா சொன்னது சரிதான். ஏனென்றால் யாராக இருந்தாலும் தன்னுடைய பிள்ளை படிக்கவில்லை என்று சொன்னால் அப்படியே விட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அந்த படிப்பால் தன்னுடைய பிள்ளை படும் மன அழுத்தத்தை பார்த்து தான் வனிதா இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பார். வனிதா எனக்கு ஒரு நல்ல பிரண்ட் தான். அதனால் அவள் உரிமையாக அப்படி கேட்டிருக்கலாம்.
எது எப்படி இருந்தாலும் சரி ஆனால் படிப்பு என்பது முக்கியம், ஒரு சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்ததை வைத்து நடிகர் கமல்ஹாசனோ, ஜெயலலிதாவோ, சிவாஜிகணேசனோ படித்து விட்டா நடிக்க வந்தார்கள்? அவர்களெல்லாம் நடிப்பால் ஜொலிக்க வில்லையா? என்று கேள்வி கேட்கிறார்கள்.
அது எல்லாம் சரிதான் ஆனால் இப்ப இருக்கிற சூழ்நிலையில் படிக்காமல் எந்த நடிகராக இருந்தாலும் படும் கஷ்டங்களை அவர்களிடம் கேளுங்கள். அவர்களுக்கு தெரியும். வெளியே சொல்லுவது ஈசியாக தான் இருக்கும். ஆனால் படிப்பு ரொம்பவே முக்கியம் என்று அந்த பேட்டியில் நடிகர் யுகேந்திரனின் மனைவி மாலினி யுகேந்திரன் பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications