போட்டியாளர்களால் கடுப்பான பிக் பாஸின் அதிரடி முடிவு.. இன்று வீட்டுக்கு போகப் போகும் நபர் இவர் தானா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்றைய எபிசொட்டில் மிட் நைட்டில் இன்று எலிமினேஷன் நடக்கப்போகிறது என்று பிக் பாஸ் அறிவித்து இருக்கிறார்.
இந்த வாரம் எலிமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களில் ஒரு நபரை இன்று இரவு வெளியே அனுப்பி வைக்கப்படுகிறது என்று பிக் பாஸ் கூறி இருப்பது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அதிகமாக இணையத்தில் மொக்கை வாங்கி கொண்டு இருப்பதால் இதனுடைய கிரியேட்டிவிட்டி இந்த நிகழ்ச்சியை ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைய செய்ய வைக்க வேண்டும் என்பதற்கு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து சறுக்குகளை தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்த சீசனின் ஆரம்பத்தில் இரண்டு வீடு கான்செப்ட் தொடங்கப்பட்டதும் ரசிகர்களின் மத்தியில் ஆர்வம் இருந்த நிலையில், பிறகு எந்த டாஸ்க்கும் இல்லாமல் வாயாலேயே வடை சுடும் போட்டிகளை பார்த்து ரசிகர்களுக்கு போரடித்து விட்டது. இதனால் டி ஆர் பி யில் இந்த நிகழ்ச்சி அடி வாங்க தொடங்கியதும் சமீபத்தில் டான்ஸ் மராத்தான் டாஸ்க் தொடங்கப்பட்டது. அதிலும் ஒரு சில போட்டியாளர்கள் மட்டும் சிறப்பாக செய்திருந்த நிலையில் மாயா கண்டபடிக்கு ஆடி ரசிகர்களை கடுப்பாக்கி இருந்தார்.
அது போல கூல் சுரேஷ் வீட்டின் சுவற்றில் ஏறி குதித்து வெளியே போவதற்காக முயற்சி செய்து ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார். அதோடு நேற்று இரவு பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒரு சிலர் தங்களுக்குள் பணத்தை பரிமாறிக் கொண்டு விதியை மீறி விளையாடி பிக்பாஸை கோபமடைய வைத்திருந்தனர். இதனால் இன்று பிக் பாஸ் யாருமே எதிர்பார்க்காத முடிவு ஒன்றை எடுத்து இருக்கின்றார்.
அதாவது இன்று தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் போட்டியாளர்களின் புகைப்படங்களை கட்டிங்காக வைத்து அதை நிறைவேறாத நபர் இன்று வெளியேறுவார் என்று கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்தில் விஷ்ணு, அனன்யா, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அர்ச்சனா ஆகியோர் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று இரவு அனன்யா வெளியேறி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே கூல் சுரேஷ் தான் வீட்டிற்கு போயாக வேண்டும் என்று நேற்று முழுக்க பிரச்சனை செய்திருந்த நிலையில் அவரை வெளியே அனுப்பலாம் என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று அனன்யா அல்லது கூல் சுரேஷ் இருவரில் ஒருவர்தான் வெளியேற்றப்படுவார் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications