தினேஷின் பர்சனல் வாழ்க்கையைப் பற்றி மோசமாக விமர்சித்து பேசிய விசித்திரா.. ரச்சிதா சொன்னதை பாருங்க
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தினேஷின் பர்சனல் வாழ்க்கை குறித்து விசித்திரா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினேஷ் உண்மையான காதலை அனுபவித்திருக்க மாட்டார். அப்படியே அவருக்கு உண்மையான காதல் கிடைத்திருந்தால் கூட அதை புரிந்து கொள்ளும் மனிதனே கிடையாது என்று விசித்திரா அதில் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் ரச்சிதா விசித்திராவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து அதிகமான சண்டை சச்சரவுகளும், சர்ச்சைகளும் தான் அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் ஒரு சில போட்டியாளர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமும் அடைந்திருக்கிறார்கள்.
அதுபோல ஒரு சில போட்டியாளர்கள் அதிகமாக திட்டு வாங்கியும் வருகிறார்கள். அந்த வரிசையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சீசனில் புது சாதனையை படைத்துக் கொண்டிருக்கின்றனர் அதில் விசித்திராவும் ஒருவர். விசித்திரா ஒரு பக்கத்தில் நெகட்டிவ் கமெண்ட் வாங்கினாலும் இன்னொரு பக்கத்தில் அவருக்கு ஆதரவு அமோகமாக இருக்கிறது. அதுபோல இந்த சீசனில் இவர் தான் டைட்டில் வின்னர் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.
ஏனென்றால் ஒருநாள் மக்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும் போட்டியாளர்கள் கூட மறுநாள் இவருக்கா நாம சப்போர்ட் பண்ணனோம் என்று நினைக்கிற மாதிரியே மாறி விடுகிறார்கள். அந்த வகையில் தினேஷ் மற்றும் விசித்திராவும் இருக்கின்றனர். ஆரம்பத்தில் விசித்திரா ஜோவிகாவிடம் படிப்பு விஷயத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
அதிகமான பிரபலங்களும் ரசிகர்களும் விசித்திராவிற்கு சப்போர்ட் கொடுத்து வந்தனர். ஆனால் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தினேஷுக்கு ஆரம்பத்தில் விசித்திரா அதிகமான சப்போர்ட் கொடுத்திருந்தார். இருவரும் ஒரு அணியாக மாயா மற்றும் பூர்ணிமா அணியை எதிர்த்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல தினேஷுக்கும் விசித்திராவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வர தொடங்கியது.
விசித்திரா மாயா, பூர்ணிமா அணியோடு சேர்ந்த பிறகு எதற்கெடுத்தாலும் தினேஷ் மற்றும் விசித்திரா இருவரும் மாறி மாறி பல குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டனர். தினேஷ் வெளிப்படையாகவே பல இடங்களில் விசித்திரா நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் அம்மா சென்டிமெண்டில் பேசுகிறார். அழுகை போட்டு ஒவ்வொரு வாரமும் எலிமினேஷனில் தப்பித்துக் கொண்டிருக்கிறார், என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.
இந்த இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விசித்திராவிற்கு ஆதரவாக ரச்சிதா போஸ்ட் போட்டு விசித்திராவுக்கு ஓட்டு அளிக்கும்படி கேட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது பிக் பாஸில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று டாஸ்க் முடிந்த பிறகு நிக்சன், விசித்ரா, பூர்ணிமா, மாயா எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது விசித்திரா, தினேஷ் பற்றி பேசி இருந்தார். அதில் தினேஷ் என்னை பற்றி ரொம்ப மோசமா பேசிட்டே இருக்காரு. நான் என்ன செஞ்சாலும் அது நடிப்பு என்று சொல்கிறார். அவருக்கு வாழ்க்கையில் பியூர் லவ் கிடைச்சே இருக்காது.... கிடைத்தாலும் அதை திருப்பி தரவும் தெரியாத ஆளு.. அன்பிற்கு தகுதியான ஆளும் அவர் இல்ல. நான் பண்றது எல்லாம் நடிப்பு என்றார் எல்லாமே நடிப்பா என்று தினேஷின் தனிப்பட்ட விவாகரத்தை விசித்திரா பேசி இருந்தார்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நிக்சன் மற்றும் மாயா விசித்திராவை தடுத்திருந்தனர். அதாவது நாம இந்த வீட்டுக்குள் மட்டும் தான் அவரை பார்த்துக்கொண்டிருக்கோம். ஆனால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி அவர் வெளியே எப்படி இருப்பார் என்று நமக்கு தெரியாது, அதனால இப்படி பேசாதீங்க என்று தடுத்த பிறகும் விசித்திரா தினேஷை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தார்.
பிக் பாஸில் திடீர் டுவிஸ்ட்.. ரவீனாவால் வெளியேற்றப்பட்ட விஷ்ணு.. மாயா, விசித்திராவிற்கு தினேஷ் கொடுத்த ஷாக்
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே மாயா, பூர்ணிமா ஆரம்பத்தில் ரச்சிதா விஷயத்தை இழுத்து தினேஷை ஏதாவது செய்யலாம் என்று திட்டம் போட்டு இருந்தனர். அதுவே பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் விசித்திராவும் இப்போது தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பேசி இருக்கிறார்.
அதே நேரத்தில் ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் கடற்கரை காற்றை அனுபவித்தபடியே இந்த அமைதியை ரசியுங்கள்... என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் நீங்க சப்போர்ட் பண்ணுன விசித்திரா உங்களுடைய அன்பு உண்மையானதாக இருக்காது என்று சொல்லி இருக்கிறாரே என்று பலர் கேள்வி எழுப்பி கமெண்ட் போட்டுக் கொண்டிருக்கின்றனர்..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications