பிக் பாஸில் திடீர் டுவிஸ்ட்.. ரவீனாவால் வெளியேற்றப்பட்ட விஷ்ணு.. மாயா, விசித்திராவிற்கு தினேஷ் கொடுத்த ஷாக்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 27ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் டிக்கட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் இன்று முயல் மேக்ஸ் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது.
அந்த டாஸ்கிலிருந்து விஷ்ணுவை தனக்கு வந்த எலிமினேஷன் கார்டை காட்டி ரவீனா வெளியேற்றி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

இதுவரைக்கும் இல்லாத வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்து வருகிறது. சர்ச்சைகளாலும் சரி பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் செய்யும் செயல்களாலும் சரி, அதிகமாக இந்த சீசன் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதிலும் இந்த சீசனை ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவுகள் மட்டும்தான் அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது.
கடந்த வாரத்தில் குடும்பத்தினர் அனைவரும் பிரீஸ் டாஸ்க்கில் கலந்து கொண்ட போது எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்கிற மாதிரி எல்லோரும் அன்பு மழையை பொழிந்து வந்தனர். ஆனால் இந்த வாரம் மீண்டும் சண்டை சச்சரவு தொடங்கி விட்டது. அதிலும் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி செல்வதால் அனல் பறக்கும் டாஸ்க்குள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் தொடங்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் இரண்டு நபரை தேர்வு செய்து TTF போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். அதற்கு எல்லோரும் சேர்ந்து அர்ச்சனா மற்றும் விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தனர். இவர்கள் இதனால் இவர்கள் இருவரும் பயங்கர கடுப்பில் இருந்தனர். அதற்குப் பிறகு நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று முயல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இது ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு முயல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த முயலுக்கான வீட்டை அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் செங்கலை வைத்து கட்ட வேண்டும். எந்த ஒரு போட்டியாளர் வீட்டையும் தன்னுடைய முயலையும் பாதுகாத்துக் கொள்கிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
இதனால் ஒவ்வொரு போட்டியாளர்களும் வழக்கம் போல மாயா பூர்ணிமா இருவரும் சேர்ந்து மற்றும் போட்டியாளர்களுக்கு கட்டம் கட்ட முடிவு பண்ணினார்கள். ஆனால் மணி விஷ்ணு இருவரும் சேர்ந்து பூர்ணிமாவை காலி செய்து விட்டனர். அதிலும் டாஸ்கின் போது விஷ்ணு பூர்ணிமா உடைய செங்கல்லை காலால் எட்டி உதைத்து தட்டி இருந்தார்.
இறுதியில் மணி விஷ்ணு தான் வெற்றி பெற்றார்கள். இதனால் மாயா பூர்ணிமா இருவருமே காண்டாக இருந்தனர். இதில் மாயா ஒரு பாயிண்ட் பெற்று இருந்தார். மணி இரண்டு பாயிண்ட் பெற்று இருக்கிறார். விஷ்ணு 3 பாயிண்ட் பெற்று இந்த டாஸ்கை வெற்றி பெற்று இருக்கிறார். மேலும் பூர்ணிமா தன்னிடம் இருந்த முயலை மணி இடம் கொடுக்க சொல்லும் போது காரி துப்பி கொடுத்திருந்தார். இதனால் டாஸ்க்கில் ஜெயிக்க துப்பில்லாமல் ஜெயித்தவரை துப்பி கேவலப்படுத்தும் செயல் ரொம்பவே அருவருப்பானது என்பது பலருடைய வாதமாக இருக்கிறது.
அந்த வகையில் இன்று முயல் மேக்ஸ் டாஸ்க் டு தொடங்கி இருக்கிறது. அதில் முயலை வைத்து சதுரங்கம் போன்ற ஒரு கட்டத்திற்குள் நின்றபடி போட்டியாளர்கள் முன்னேறி செல்ல வேண்டும். அப்போது தங்களுக்கு வரும் கார்டில் என்ன கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஏற்ப ரியாக்ட் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அதில் ரவீனாவிற்கு எலிமினேஷன் என்ற கார்டு வந்திருக்கிறது. அதை வைத்து அவர் வேறு ஒருவரை எலிமினேஷன் செய்யலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதனால் நேற்று என்னை யார் எலிமினேஷன் செய்தது என்று கேட்டபடியே விஷ்ணுவை ரவீனா எலிமினேஷன் செய்திருந்தார். அதன்படி விஷ்ணு, ரவீனா, மணி என்ற மூன்று பேரும் இந்த டாஸ்க்கில் தொடர முடியாமல் வெளியேறி இருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து தினேஷிற்கு ரெட் கலர் கார்டு வந்து இருக்கிறது. அதை வைத்து இரண்டு பேரை அவர் இரண்டு கட்டங்கள் பின்னோக்கி நகர்த்தலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதற்கு மாயா மற்றும் விசித்திராவை தினேஷ் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து பூர்ணிமாவிற்கு கிரீன் கலர் கார்டு வந்து இருக்கிறது.
அதை வைத்து அவர் ஒரு நபரை நீங்கள் நிற்கும் இடத்திற்கு கொண்டு வரலாம் என்று கூறப்பட்டிருக்க, அதற்கு நிக்சனை பூர்ணிமா தேர்ந்தெடுத்திருக்கிறார். இப்படியாக இன்று முதல் பிரமோ விறுவிறுப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த டாஸ்க் யார் ஜெயிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்கள் பெயரை கமெண்டில் சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications